என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • இந்த ஆண்டு விழா 9-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது.
    • விழாவில் சுற்று பகுதியில் உள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கொம்யூனுக் குட்பட்ட பெருங்களூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைமிக்க பொன்னுமாரியம்மன் மற்றும் மஞ்சினி கூத்தையனார் கோவில் உள்ளது.

     இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தையொட்டி ஊரணி பொங்கல் மற்றும் திருக்கல்யாண உற்சவம் முக்கிய விழாவாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு விழா 9-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று இரவு நடந்தது. இதில் ஸ்ரீபூரணி பொற்கிலை உடனுறை மஞ்சினி கூத்தையனார் திருக்கல்யாணம் விமர்சையாக நடந்தது. விழாவில் சுற்று பகுதியில் உள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.

    • அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதி செய்ய வேண்டும்.
    • முதியோர் உதவித்தொகை கடந்த 2 மாதங்களாக வழங்காமல் இருப்பதை உடனடியாக வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    தமிழ்நாடு மீனவர் பேரவையின் நிறுவன தலைவர் இரா. அன்ப ழகனார் ஆலோசனைபடி புதுவை மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

    ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவை, புதுவை மாநில தலைவர் புகழேந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஆலோசகர்கள் புத்துப் பட்டார், ராமஜெயம், கலைவரதன், பொதுச்செய லாளர்கள் சிட்டிபாபு, குணசீலன், துணைத் தலைவர் ஜெயவேலு, செயலாளர்கள் சுகுமார், சிவக்குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அவை வருமாறு:-

    புதுவை மாநில மீனவ சமுதாய இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் அடிப்படை வசதி செய்ய வேண்டும்.

    வருகிற காலங்களில் அரசியல் அதிகாரத்தில் உரிய பங்களிப்பு பெறுவது. முதியோர் உதவித்தொகை கடந்த 2 மாதங்களாக வழங்காமல் இருப்பதை உடனடியாக வழங்க வேண்டும். என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    • அதிகாரியிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ வலியுறுத்தல்
    • குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்காக கோரிக்கை வைத்தார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பழைய துறை முகம் மீன் பிடி துறை முகமாய் இயங்கி வந்தது. ஆனால் தற்போது சரக்கு கப்பல் புதுவைல் பயன் பாட்டிற்கு வந்த நிலையில் புதுவை அரசு மீன் பிடி கப்பல் நிக்கும் இடத்தை அப்புறப்படுத்தியது.

    இது அறிந்த தி.மு.க உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ புதுவை அரசு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பேசி அப்புறப்படுத்தாமல் அவர்களுக்கு மாற்று இடமாக மேற்கிலிருந்து கிழக்கு புறம் ஒதுக்கி கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

    சட்டமன்ற எம்.எல்.ஏவின் கோரிக்கை ஏற்று அதிகாரிகள் அவ்வாரே செய்து கொடுக்கும்படி ஒப்புக் கொண்டனர், மேலும் அங்கு கப்பல்கள் நிறுத்தி கட்டுவதற்காக ஜட்டி கட்டுதல் , சாலை வசதி செய்து கொடுக்கும் படியும், அங்கு பல ஐமாஸ் விளக்குகளை அமைத்துக் கொடுக்கவும், குடிதண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுப்பதற்காக கோரிக்கை வைத்தார்.

    அதை ஏற்றுக்கொண்டு அதிகாரிகள் செம்மண் கொட்டி தற்சமயம் சாலையும், அதை தொடர்ந்து ஒரு ஐமாஸ் மின் விளக்கும் அமைத்து தந்துள்ளனர். ஆனால், இதில் திருப்தி அடையாத எம்.எல்.ஏ வம்பாகீரப்பாளையம் பஞ்சாயத்தாரர்கள், மீனவர் சமுதாய சகோதரர்களுடன் துறைமுக செயற்பொறியாளரை நேரில் சென்று சந்தித்து இது குறித்து மீண்டும் பேசினார்கள்.

    மேலும் செம்மண் சாலையில் பணி செய்து கொடுக்கும்படி, அதிக அளவில் ஐமாஸ் விளக்குகள் அமைத்து கொடுக்கும்படி, ஜட்டியை கட்ட ஏற்பாடுகள் செய்து கொடுங்கள் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார், சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை ஏற்று இவை யாவற்றையும் செய்து தருவதாக அதிகாரி உறுதியளித்தார்.

    இது சம்பந்தமாக சட்ட சபையில் மாண்புமிகு முதல்வரிடம் திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பேசி கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உடன் தி.மு.க. கழக செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ஆரோக்கியராஜ், கிளைச் செயலாளர்கள் செல்வம் மற்றும் ராகேஷ், கழக சகோதரர்கள் பாலாஜி, ரகுராமன், ஊர் பஞ்சாயத்தாரர்கள், ஊர் பிரமுகர்கள் உடனிருந்தனர்.

    • பிரம்மோற்சவ தேர் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.
    • சிவா எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்கா மீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ தேர் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 15-ந் தேதி பிடாரியம்மனுக்கு காப்பு கட்டப்படுகிறது.

     24-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. ஜூன் 1-ந் தேதி தேர் திருவிழா நடக்கிறது. விழாவை யொட்டி தேரின் உறுதி தன்மை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

     தொடர்ந்து கோவிலின் அன்னதான திட்டத்தை தொடங்கப்பட்ட 200-வது நாளையொட்டி எதிர்கட்சி தலைவர் சிவா பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு அதிகாரி வரசன் மற்றும் தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், ராமசாமி, செல்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஜனநாயக இளைஞர் சங்கத்தினர் மெழுகுவத்தி ஏற்றி போராட்டம்
    • னைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநிலக்குழு உறுப்பினர் முரளி, வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், பா.ஜனதா எம்.பி பூஷன் சரண் சிங்கை போக்சோ சட்டப்படி கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கம் சார்பில் சிவாஜி சிலை அருகில் மெழுகுவத்தி ஏற்றி போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு அகில இந்திய ஜனநாயக இளைஞர் சங்கத்தின் புதுவை மாநிலத் தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார்.

    போராட்டத்தில் சுசி கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் லெனின் துரை, ஏ.ஐ.யு.டி.யு.சி மாநில செயலாளர் சிவக்குமார், இணைச்செ யலாளர் சிவசங்கர், ஹரிஷ், சத்யா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தேவசகாயம், பெரியாரின் பொதுவுடமை கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநிலக்குழு உறுப்பினர் முரளி, வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்பதுதான் என் கருத்து.
    • கவர்னர் கருத்தே சொல்லக்கூடாதா? என் கருத்துக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி. பங்கேற்றனர்.

    இவர்களின் அரசியலை தமிழகத்தில் வைத்துக் கொள்ளட்டும் என கவர்னர் தமிழிசை கருத்து தெரிவித்திருந்தார். கவர்னர் பேச்சுக்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறும்போது, தெலுங்கானா அரசு விமானம் தருவதில்லை. அதனால் புதுவையிலேயே கவர்னர் தமிழிசை இருக்கிறார். உண்டியல் குலுக்கியாவது விமான டிக்கெட் எடுத்து தருகிறேன். அவர் புதுவையை விட்டு செல்ல வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த நிலையில் இதுகுறித்து புதுவையில் கவர்னர் தமிழிசை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜிப்மரில் புதிய பரிசோதனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏழைகளை தவிர்த்து மற்றவர்களுக்கு கட்டணம் வசூலிக்க ஜிப்மர் முடிவு எடுத்தவுடன், கட்டணம் அதிகமாக இருப்பதால் குறைக்கும்படி மத்திய சுகாதார மந்திரியை தொடர்பு கொண்டு பேசினேன். கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

    மத்திய அரசு ஜிப்மருக்கு இந்த ஆண்டு நிதியை உயர்த்தி வழங்கியுள்ளது. ஜிப்மர் செயல்பாடுகள் குறித்து எம்.பி.க்கள், இயக்குனரை நேரடியாக சந்தித்து கேட்கலாம். நான் ஆஸ்பத்திரியின் முன்பாக ஆர்ப்பாட்டம் வேண்டாம் என்றுதான் தெரிவித்தேன்.

    மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என்பதுதான் என் கருத்து. கவர்னர் கருத்தே சொல்லக்கூடாதா? என் கருத்துக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறுகின்றனர். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை.

    மக்களிடம் உண்டியல் குலுக்கி சிறப்பு விமானத்தில் என்னை ஏற்றி அனுப்புவதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். அதையும் மக்களிடத்தில் இருந்துதான் பெற வேண்டுமா? நீங்கள் சேர்த்து வைத்ததில் வாங்கி கொடுத்தாலும், அதில் நான் ஏற மாட்டேன்.

    நான் பொதுமக்களுடன்தான் விமானத்தில் பயணிக்கிறேன். சிறப்பு விமானம் பயன்படுத்துவதில்லை. என்னை அனுப்புவதைப்பற்றி நாராயணசாமி கவலைப்பட வேண்டாம்.

    மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் மக்களுக்கு சேவை செய்யாமலும் இருக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ரகம் நான். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். நான் எனது பணியை செய்கிறேன்.

    அனைவரும் போராட்டம் நடத்தாமல் ஆக்கப்பூர்வமாக செயல்படலாம். தமிழகத்தில் இருப்பவர்களுக்கு இங்கு என்ன வேலை என்று நான் கேட்கவில்லை?

    நான் ஜிப்மருக்கு வக்காலத்து வாங்கவில்லை. பொதுமக்கள் மீது அதிக அக்கறை எங்களுக்கு உள்ளது. விசாகா கமிட்டி அரசு அலுவலகங்களில் அமைப்பதை பரிசீலிப்போம். மருத்துவம், பள்ளி, பொதுமக்கள் சேவை எந்த விதத்திலும் மக்கள் பாதிப்பு இல்லாத வகையில் செயல்படுகிறோம்.

    புதுவை முதல்-அமைச்சர் கோரிக்கைகளை வைத்தாலும், கையெழுத்து போடுவதில்லை என கூறுவது தவறு. அடுத்தடுத்து அறிவிப்புகள் வருவதை நீங்களே பார்க்கலாம். புதுவையில் எல்லாம் சரியாக நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீஸ் ஐ.ஜி. சந்திரன் பங்கேற்பு
    • புதுவை போலீஸ் ஐ.ஜி. சந்திரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    புதுச்சேரி:

    விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் வேந்தர் கணேசன் மற்றும் இயக்குனர் அனுராதா கணேசன் வழிகாட்டுதலின்படி கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரி ஆண்டு விழா பெரியகாட்டுப்பாளையம் ஜனனி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த ஆண்டு விழாவிற்கு புதுவை போலீஸ் ஐ.ஜி. சந்திரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    விழாவில் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் கொட்டூர் விழா மலரை வெளியிட ஐ.ஜி. சந்திரன் பெற்று கொண்டார். விழாவில் மருத்துவ கல்வி பிரிவு டீன் மகாலட்சுமி, ஆராய்ச்சி இயக்குனர் விஷ்ணு பட், இயக்குனர் ஜெய்சிங், மருத்துவ கண்காணிப்பாளர் சதீஷ் குருவில்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விநாயக மிஷன் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் சாரதா ரமேஷ் ஆண்டறிக்கையை வாசித்தார்.

    அதனைத் தொடர்ந்து சர்வதேச செவிலியர் தினம் முக்கியத்துவத்தின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். விழாவில் கடந்த ஆண்டு பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பெற்றவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஒரு வார காலமாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    தொடர்ந்து கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவிற்கு துணை முதல்வர் டாக்டர் சசி வரவேற்று பேசினார். பேராசிரியர் டாக்டர் சங்கீதா நன்றி கூறினார். மாணவர் சங்க துணை தலைவர் அனஸ்வரா பிரகாஷ் சங்கத்தின் ஆண்டு அறிக்கையை வாசித்தனர்.

    • ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லூரியில் நடைபெற்றது.
    • கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர் கள், மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மூலக்குளத்தில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லூரியில் 4-வது பட்டமளிப்பு விழா மற்றும் கல்லூரியின் 1-வது ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு கல்லூரியின் நிறுவனர் டாக்டர் முருகேசன் மற்றும் துணை நிறுவனர் டாக்டர் சத்யவேணி முருகேசன் ஆகி யோர் தலைமை தாங்கினார். ஈஸ்ட் கோஸ்ட் ஆஸ்பத்தரி இயக்குனர் டாக்டர் வெங்கட்ராம், தாளாளர் ஜாய்ஸ் வர்கீஸ், முதல்வர் ஜெயகவுரி சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ராமச் சந்திர, அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மையம் டீன் ரவிச்சந்திரன், குளூனி ஆஸ்பத்திரி முன்னாள் சி.இ.ஓ. டாக்டர் ரங்கநாத் ஆகியோர் பங்கேற்று, 140 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தனர். இதனை தொடர்ந்து கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.

    இதில் கல்வியில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரி சுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர் கள், மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

    • அங்காளன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • நிகழ்ச்சி மதகடிப்பட்டு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை திருபுவனை தொகுதியில் அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் மூலமாக தொகுதியைச் சார்ந்த முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்ட வர், முதிர்கன்னி ஆகிய 700- பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மதகடிப்பட்டு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் அங்காளன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு அனைத்து பயனாளிகளுக்கும் உதவித்தொகையை வழங்கினார்.

    இத் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா, துணை இயக்குனர்





    அமுதா மற்றும் துறையின் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
    • ம.தி.மு.க மாநில செயலாளர் கபிரியேல், தொகுதி அவைத் தலைவர் ஜலால் ஹனீப், மற்றும் ஊர் முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் ஜி.என்.பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதி களில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு பிரிவு மூலம் ரூ. 2 கோடி மதிப்பில் சாலைகள் மற்றும் எல்' வடிவ வடிகால் வாய்க்கால் அமைக்கப்படுகிறது.

    இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி அரும்பார்த்த விநாயகர் கோவில் அருகில் நடந்தது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு பிரிவு செயற்பொறியாளர் சுந்தரராஜ், உதவிப் பொறியாளர் சீனுவாசராம், இளநிலைப் பொறியாளர் தமிழரசன், தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், ம.தி.மு.க மாநில செயலாளர் கபிரியேல், தொகுதி அவைத் தலைவர் ஜலால் ஹனீப், மற்றும் ஊர் முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    சாலை அமைக்கும் பணியை எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்.

    • காலாப்பட்டு சிறையில் பரபரப்பு
    • காவலர்கள் சோதனை நடத்தியதில் ரிப்பட் காமில் தங்கியிருந்த அறையின் கழிவறையில் செல்போன் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை சேர்ந்த ஹாஜா நிஜாமுதீன் மகன் ரிப்பட்காமில், இவர் காரைக்காலில் உள்ள வங்கிகள் மற்றும் அடமானக் கடைகளில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடமானம் வைத்தது தொடர்பாக இவர் மீது சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கு பதிவு செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

    காரைக்கால் மட்டுமல்லாது நாகை, கும்பகோணம் பகுதிகளிலும் இதுபோன்று போலி நகைகளை அடமானம் வைத்து மோசடிகள் ஈடுபட்டது தெரிய வந்தது. காரைக்காலில் நடந்த மோசடி தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இன்ஸ்பெக்டர் மீதும் ஒரு பெண் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

     இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ரிப்பட் காமில் மற்றும் சம்பந்தப்பட்ட பெண்ணை சி.பி.சி.ஐ.டி போலீசார் இருவரையும் கைது செய்து காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

    சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஜாமீனில் வெளியே சென்றார். இந்த நகை மோசடி வழக்கில் ரிப்பட் காமில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டதால் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை.

    அவர் காலப்பட்டு மத்திய சிறைச்சாலை விசாரணை கைதிகள் அறையில் உள்ளார்.

    இந்நிலையில் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தால் கைது செய்யப்பட்டு ஆயுத வழக்கில் காலப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட குட்டி சிவா என்ற சிவா மூலம் ரிப்பட் காமில் சிறையின் அறையில் செல்போன் பயன்படுத்தி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் சிறைத்துறை சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் சிறை காவலர்கள் சோதனை நடத்தியதில் ரிப்பட் காமில் தங்கியிருந்த அறையின் கழிவறையில் செல்போன் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதுகுறித்து சிறைத்துறை சூப்பிரண்டு பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் ரிப்பட் காமில், குட்டி சிவா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பா ளையம் மூலக்குளம் ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் நாராயணசாமியின் மனைவி அஞ்சலை (72)

    கடந்த 6 மாதத்திற்கு முன்னர் குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டார். இதனால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றாலும் பாதிக்கப்பட்டு மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

    அவர் படுக்கையில் இருந்து எழுந்து நடமாட வீட்டின் இரும்பு பைப்பிள் காடடன் வெள்ளை கயிறை குடும்பத்தினர் பிடிமானத்திற்காக கட்டி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் அந்த கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×