என் மலர்
நீங்கள் தேடியது "Manjini Koothiyanar temple"
- இந்த ஆண்டு விழா 9-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது.
- விழாவில் சுற்று பகுதியில் உள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் கொம்யூனுக் குட்பட்ட பெருங்களூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமைமிக்க பொன்னுமாரியம்மன் மற்றும் மஞ்சினி கூத்தையனார் கோவில் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தையொட்டி ஊரணி பொங்கல் மற்றும் திருக்கல்யாண உற்சவம் முக்கிய விழாவாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு விழா 9-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று இரவு நடந்தது. இதில் ஸ்ரீபூரணி பொற்கிலை உடனுறை மஞ்சினி கூத்தையனார் திருக்கல்யாணம் விமர்சையாக நடந்தது. விழாவில் சுற்று பகுதியில் உள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.






