என் மலர்
புதுச்சேரி

பட்டமளிப்பு விழா நடந்த காட்சி.
150 மாணவ-மாணவிகளுக்கு பட்டமளிப்பு
- ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லூரியில் நடைபெற்றது.
- கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர் கள், மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மூலக்குளத்தில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லூரியில் 4-வது பட்டமளிப்பு விழா மற்றும் கல்லூரியின் 1-வது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரியின் நிறுவனர் டாக்டர் முருகேசன் மற்றும் துணை நிறுவனர் டாக்டர் சத்யவேணி முருகேசன் ஆகி யோர் தலைமை தாங்கினார். ஈஸ்ட் கோஸ்ட் ஆஸ்பத்தரி இயக்குனர் டாக்டர் வெங்கட்ராம், தாளாளர் ஜாய்ஸ் வர்கீஸ், முதல்வர் ஜெயகவுரி சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ராமச் சந்திர, அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மையம் டீன் ரவிச்சந்திரன், குளூனி ஆஸ்பத்திரி முன்னாள் சி.இ.ஓ. டாக்டர் ரங்கநாத் ஆகியோர் பங்கேற்று, 140 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தனர். இதனை தொடர்ந்து கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் கல்வியில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரி சுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் கல்லூரி ஆசிரியர்கள், ஊழியர் கள், மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர்.






