என் மலர்
புதுச்சேரி
- கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பா ளையம் மூலக்குளம் ஜெ.ஜெ நகரை சேர்ந்தவர் நாராயணசாமியின் மனைவி அஞ்சலை (72)
கடந்த 6 மாதத்திற்கு முன்னர் குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டார். இதனால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் ஆகியவற்றாலும் பாதிக்கப்பட்டு மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
அவர் படுக்கையில் இருந்து எழுந்து நடமாட வீட்டின் இரும்பு பைப்பிள் காடடன் வெள்ளை கயிறை குடும்பத்தினர் பிடிமானத்திற்காக கட்டி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் அந்த கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ வழங்கினார்
- என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட முத்திரைப்பாளையம் அருட்செல்வி ஆயிஅம்மாள் அரசு நடுநிலைப்பள்ளியில் புதுவை அரசு கொறடாவும் இந்திரா நகர் தொகுதி ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ மாணவ மாணவிகளுக்கு சீருடை மற்றும் தையல் கூலி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் ஆசிரியர்கள், என்.ஆர். காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
- மகா தீபாராதனையும், அன்னமளிப்பு விழாவும் நடைபெறுகிறது.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியின் ஆன்மீக குரு ஸ்ரீசற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு நாளை 164-வது பிறந்தநாள்.
இதையொட்டி சேலம் சூரமங்கலம் ஸ்ரீசற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் கோவில் 4.30 மணி முதல் சிறப்பு பூஜையும், அபிஷேக ஆராதனையும், அன்னமளிப்பு விழாவும் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, ஆனைந்து வழிபாடு, புனிதநீர் வழிபாடு, விநாயகர், திருமகள் வழிபாடு, சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் வேள்வி, பேரொளி வழிபாடுகள் நடக்கிறது.
காலை 7.30 மணி முதல் ஞான விநாயகர், ஞான முருகர், அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனையும், 12.30 மணிக்கு அன்னமளிப்பு விழாவும் நடக்கிறது.
இதேபோல முதல்- அமைச்சர் ரங்கசாமி கோரிமேட்டில் கட்டியுள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் கோவிலும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகிறார்.
- அரசு அலுவலகங்களில் இருந்த ஆவணங்களை பெற்று ஆய்வு செய்தனர்
- புதுவையை சேர்ந்த சின்னராசு மற்றும் சிலர் போலி ஆவணம் தயாரித்து அதை வீட்டு மனைகளாக விற்றது தெரிய வந்தது.
புதுச்சேரி:
புதுவை பாரதி வீதி காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரத்து 35 சதுர அடி விவசாய நிலம் ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ளது.
ரூ.12 கோடியே 49 லட்சத்து 52 ஆயிரம் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து விட்டதாக புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் கோவில் நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். இதையடுத்து டி.ஜி.பி. உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
அந்த சிறப்பு படையினர் தனிக்கவனம் செலுத்தி நிலம் சம்பந்தப்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் இருந்த ஆவணங்களை பெற்று ஆய்வு செய்தனர். மேலும் பல்வேறு அரசு அதிகாரிகள், பிற நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் 64 ஆயிரத்து 35 சதுர அடி நிலத்தில் 31 ஆயிரத்து 204 சதுர அடி நில பகுதியை சென்னையை சேர்ந்த ரத்தினவேல், அவரின் மனைவி மோகனசுந்திரி, மனோகரன், புதுவையை சேர்ந்த சின்னராசு மற்றும் சிலர் போலி ஆவணம் தயாரித்து அதை வீட்டு மனைகளாக விற்றது தெரிய வந்தது.
அனைவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மொத்த சொத்துக்கும் முத்தியால்பேட்டையை சேர்ந்த தச்சு தொழிலாளி பெரியநாயகிசாமி என்ற அருள்ராஜ்(71), அவரின் மகன் ஆரோக்கியதாஸ் என்ற அன்பு(37), முன்னாள் ராணுவ வீரர் மணிகண்டன்(43) மற்றும் சிலர் போலியாக உயில் சாசனம் தயாரித்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து, அதில் 32 ஆயிரத்து 831 சதுர அடி நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவர்களையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். வழக்கில் சிறப்பாக விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு மோகன்குமார், இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், கணேசன், போலீசாரை சட்டஒழுங்கு சீனியர்சூப்பிரண்டு நாராசைதன்யா பாராட்டினார்.
- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
- ஊர்வலம் மூலக்கடை எம்.ஜி.ஆர் சிலை, கூடப் பாக்கம் சாலை வழியாக மீண்டும் மண்டபத்தை அடைந்தது.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த கோனேரிகுப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் 2 ஆண்டு பண்பு பயிற்சி முகாம் நடந்து வருகிறது. முகாமில் தமிழகம், புதுவையை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
முகாமில் ஒரு அங்கமாக ஆர்.எஸ்.எஸ். சேவகர்களின் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. புறவழிச்சாலை ராஜா திருமண மண்டபம் அருகிலிருந்து தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் மூலக்கடை எம்.ஜி.ஆர் சிலை, கூடப் பாக்கம் சாலை வழியாக மீண்டும் மண்டபத்தை அடைந்தது. சேவகர்கள் கம்பு, கொடி ஏந்தி சென்றனர். முகாம் தலைவர் மணிவாசகம், வரவேற்பு குழு தலைவர் அரவிந்தன், கோட்டதலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- விழாவின் முக்கிய உற்சவமான கூத்தாண்டவர் ரத உற்சவம் நடந்தது.
- குழந்தைவேலு, துணைத்தலைவர் செல்வகுமார், கிராம மக்கள் செய்துள்ளனர்.
புதுச்சேரி:
மடுகரை திரவுபதி அம்மன் கோவிலில் கூத்தாண்டவர் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது.
கூத்தாண்டவர் திருக்கல்யாணம், பிரார்த்தனை தாலி கட்டும் நிகழ்ச்சிகள் நடந்தது.
தொடர்ந்து விநாயகர், கிருஷ்ணர், பிடாரி அம்மன், மாரிய ம்மன், அர்ச்சுனன், திரவுபதி அம்மன், கூத்தாண்டவர் முத்து பல்லக்கில் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய உற்சவமான கூத்தாண்டவர் ரத உற்சவம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். சுவாமி, அம்மன் வீதியுலா நடக்கிறது. கரக திருவிழாவும், மறுநாள் தீ மிதி திருவிழாவும் நடக்கிறது.
வருகிற 14-ந் தேதி பட்டா பிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் குழந்தைவேலு, துணைத்தலைவர் செல்வகுமார், கிராம மக்கள் செய்துள்ளனர்.
- ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜூ 4-ம் கட்ட பயிற்சிக்காக உத்திரகாண்ட் மாநிலம் செல்கிறார்.
- ஆணையை அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசில் கமிஷனர் மற்றும் நிதித்துறை செயலராக பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜூ 4-ம் கட்ட பயிற்சிக்காக உத்திரகாண்ட் மாநிலம் செல்கிறார்.
இதையடுத்து அவர் கவனித்து வந்த நிதித்துறை முதன்மை தேர்தல் அதிகாரி ஜவகர், திட்டம் மற்றும் ஆராய்ச்சி, பொருளா தாரம் மற்றும் புள்ளிவிபரம் ஆகிய துறைகளை அரசு செயலர் முத்தம்மா, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா துறைகளை அரசு செயலர் மணிகண்டன் ஆகியோர் லிங்க் அதிகாரி அடிப்படையில் கவனிப்பார்கள்.
இதற்கான ஆணையை அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.
- பா.ஜனதா அரசு சிறிதும் அக்கறையின்றி தான்தோன்றிதமாக அலட்சியமாக நடந்து கொள்கிறது.
- காலி பணியிடங்களை கல்வியாண்டு தொடங்கும் முன் நிரப்ப வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பிரதேச மார்க்சிஸ்ட்டு கட்சியின் செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட 6.58 சதவீத மாணவர்கள் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுவை அரசு கல்வித்துறையின் செயல்பாடுகள் படிப்படியாக அதலபாதாளத்தில் சென்று கொண்டே இருக்கிறது. பாட புத்தகம் வழங்குவது, சீருடை வழங்குவது, ஆசிரியர் பற்றாக்குறை, மதிய உணவு உட்பட அனைத்து விஷயத்திலும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அரசு சிறிதும் அக்கறையின்றி தான்தோன்றிதமாக அலட்சியமாக நடந்து கொள்கிறது.
அரசு பள்ளிகளின் முன்னேற்றம், மாணவர்களின் நலனில் அரசுக்கு சிறிதளவும் அக்கறை இல்லை. தனியார் பள்ளி முதலாளிகளுக்கு சாதகமாக அரசு பள்ளிகளை அழிக்கும் வேலை நடந்து வருகிறது.
அரசு பள்ளிகள் மீது முதல்- அமைச்சருக்கு அக்கறை இருந்தால், அரசு பள்ளி உள்கட்டமைப்பை முழு ஆய்வு செய்ய வேண்டும். காலி பணியிடங்களை கல்வியாண்டு தொடங்கும் முன் நிரப்ப வேண்டும்.
தான்தோன்றித்தனமான சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை நிறுத்த வேண்டும். கல்வித்துறை நிர்வாக குறைபாடுகளை களைய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்திய கடற்படையில் பணியாற்றும் லெப்டினெட் கமாண்டர் தில்னா மற்றும் ரூபா ஆகிய இருவரில் ஒருவர் சவாலான பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
- கடற்படையில் சேருவதற்கு முன் மாலுமியாக இருந்த அவர் பல சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
புதுச்சேரி:
முன்னாள் கடற்படை அதிகாரியான அபிலாஷ் டோமி கடல் வழியாக படகில் உலகை சுற்றி முடித்தார். இதையடுத்து, இந்திய கடற்படை ஒரு பெண் அதிகாரியை அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்திய கடற்படையில் பணியாற்றும் லெப்டினெட் கமாண்டர் தில்னா மற்றும் ரூபா ஆகிய இருவரில் ஒருவர் சவாலான பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதில் தில்னா, கடற்படையில் தளவாட அதிகாரியாக உள்ளார்.
ரூபா கடற்படை ஆயுத ஆய்வு அதிகாரியாக உள்ளனர். இருவரும் கோவாவில் பணியில் உள்ளனர். புதுவையைச் சேர்ந்த ரூபா அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் பட்டம் பெற்றுள்ளார்.
பெங்களூரில் உள்ள நேஷனல் ஏர் ஸ்பேஸில் உதவியாளராக பணியாற்றினார். கடற்படையில் சேருவதற்கு முன் மாலுமியாக இருந்த அவர் பல சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
முக்கியமாக கேப் டவுனில் இருந்து ரியோ டி ஜெனிரோவிற்கு ஐ.என்.எஸ்.வி. டரினா கப்பலில் பெண் அதிகாரிகள் உலகம் முழுவதும் பயணம் செய்தனர். அதில் தில்னாவும், ரூபாவும் பாய்மரம் கப்பலில் 2 ஆண்டுகளில், 21,800 நாட்டிக்கல் மைல்களுக்கு மேல் பயணித்துள்ளனர். கேப்ரியோ பந்தயத்தில் பங்கேற்றுள்ள தில்னா மற்றும் ரூபா உட்பட 6 பேர் கொண்ட குழுவினர், மே 24-ல் கோவாவுக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்திய கடற்படை பெண் அதிகாரி ஒருவரை அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளது. அதில் இடம் பெறபோவது புதுவை ரூபாவா அல்லது தில்னாவா என்பது விரைவில் தெரியும். தேர்ந்தெடுக்கப்படும் நபர் தனி படகில் உலகை சுற்றிவர உள்ளார்.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
- அங்கு உள்ள குறைகளை மக்களிடம் கேட்டறிந்தார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பான்மையான பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி மூலமும், பொதுப்பணித்துறை மூலமும், நகராட்சி மூலமும், சட்டமன்ற நிதியின் கீழ் பல பணிகள் அனிபால் கென்னடிஎம்.எல்.ஏ., முயற்சியால் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
அதில் ஒரு கட்டமாக ரூ.2 ½ கோடி மதிப்பீட்டுத் தொகையில் பெரிய பள்ளி மற்றும் வீரவெள்ளி பகுதிகளில் எல் வடிவ வாய்க்கால் மற்றும் யூ வடிவ வாய்கால் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து இன்று வீரர்வெளியில் பணிகள் மேற்கொள்ளும் போது கென்னடி எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கு உள்ள குறைகளை மக்களிடம் கேட்டறிந்தார்.
உடன் உதவி பொறியாளர் பிரபாகரன் , இளநிலை பொறியாளர் சண்முகம், தி.மு.க. பிரமுகர் பிராங்க்ளின், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், மீனவர் அணி மாநில துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, கிளைச் செயலாளர் அசோக், மற்றும் கட்சியினர் செல்லப்பன், மோகன் அனைவரும் உடனிருந்தனர்.
- கடல் பக்கங்களில் இயந்திர பொறியாளரின் பங்கை பற்றி விளக்கினார்.
- மாணவர்களுக்காகப் பின்பற்றப்படும் பல்வேறு பாட அமைப்புகளை எடுத்துரைத்தார்.
புதுச்சேரி:
புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு தரம் மற்றும் நம்பகத்த ன்மைக்கான தேசிய நிறுவனம் என்.ஐ.கியூ.ஆர் நிறுவன சங்கத்தின் கீழ் மெக்கானிக்கல் என்ஜினீயர்களுக்கான மரைன் என்ஜினீயரிங் வாய்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர், நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுகுமாறன் மற்றும் டாக்டர் நாராயணசாமி மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் செயலாளர், முதல்வர் டாக்டர் மலர்க்கன் வாழ்த்துரை வழங்கினார். இயந்திரவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் ராஜாராம் வரவேற்று பேசினார்.
துறைத்தலைவர் கோபிநாத் ஏ.எம்.இ.டி பல்கலைக்கழகம் மெக்கா னிக்கல் என்ஜினீயரிங்கின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து பேசினார்.
4-வது என்ஜினீயர் 1-வது என்ஜினீயர் மற்றும் தலைமை என்ஜினீயர் என பல்வேறு நிலைகளில் தலைமை என்ஜினீயர் மற்றும் கேப்டனுக்கு இடையேயான அடிப்படை ஒப்பீட்டையும் அவர் பாகுபடுத்தினார்.
கப்பலின் வழிசெலுத்தல், பாதுகாப்பு அமைப்புகள், உந்துவிசை மற்றும் மின் உற்பத்தி அலகு போன்ற கடல் பக்கங்களில் இயந்திர பொறியாளரின் பங்கை பற்றி விளக்கினார்.
சென்னை ஏ.எம்.இ.டி நகரக் கல்லூரி முதல்வர் கேப்டன் ராமகிருஷ்ணா பேசினார்.
சென்னை ஏ.எம்.இ.டி நகரக் கல்லூரி முதல்வர் கோபிநாத் பல்கலைக்கழகம் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவர்களுக்காகப் பின்பற்றப்படும் பல்வேறு பாட அமைப்புகளை எடுத்துரைத்தார்.
அமர்வு கேப்டன் ராம கிருஷ்ணா, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கேள்விகளைக் கேட்டார். முடிவில் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது.
- திருப்பதி தேவஸ்தானம் ஏராளமான புதிய கோவில்களை கட்டி வருகிறது.
- புதுவையில் உள்ள இடிந்த கோவிலை மட்டும் ஏன் புதிதாக கட்டவில்லை என்று மக்கள் ஆதங்கப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவை நேரு வீதியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்டப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.
இந்த கோவில் 12 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த திருப்பதி தேவஸ்தான கோவிலை மீண்டும்
கட்டக்கோரி, புதுவை மக்கள் தேவஸ்தானத்திடம் பலமுறை புகார் செய்தனர். இதுவரையில் புதிதாக கோவில் கட்டப்படவில்லை.
புதிய கோவில் கட்ட வலியுறுத்தி புதுவை ஆன்மீக சபைகள், பாகவதர்கள், பொதுமக்கள், திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி ஆகியவை சார்பில் தேவஸ்தான சேர்மன், நிர்வாக அதிகாரிகள், புதுவை முதலமைச்சர், ஆந்திர கவர்னர் மற்றும் ஆந்திர அரசிடமும் கோரிக்கை மனு வழங்கினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
திருப்பதி தேவஸ்தானம் ஏராளமான புதிய கோவில்களை கட்டி வருகிறது. பழைய கோவில்களை புதுப்பித்து வருகிறது. ஆனால் புதுவையில் உள்ள இடிந்த கோவிலை மட்டும் ஏன் புதிதாக கட்டவில்லை என்று மக்கள் ஆதங்கப்பட்டனர்.
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர அரசை கண்டித்து புதுவை ராஜா தியேட்டர் சந்திப்பில் புதுவை திருக்கோவில் பாதுகாப்பு கமிட்டியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டியின் பொதுச்செயலாளர் தட்சிணாமூர்த்தி, செயலாளர் பாலாஜி பாகவதர்கள், ஆன்மீக மன்றங்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






