என் மலர்
புதுச்சேரி

யூ வடிவ வாய்க்கால் அமைக்கும் பணியை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பார்வையிட்ட காட்சி.
யூ வடிவ வாய்க்கால் அமைக்கும் பணி
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
- அங்கு உள்ள குறைகளை மக்களிடம் கேட்டறிந்தார்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பெரும்பான்மையான பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி மூலமும், பொதுப்பணித்துறை மூலமும், நகராட்சி மூலமும், சட்டமன்ற நிதியின் கீழ் பல பணிகள் அனிபால் கென்னடிஎம்.எல்.ஏ., முயற்சியால் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
அதில் ஒரு கட்டமாக ரூ.2 ½ கோடி மதிப்பீட்டுத் தொகையில் பெரிய பள்ளி மற்றும் வீரவெள்ளி பகுதிகளில் எல் வடிவ வாய்க்கால் மற்றும் யூ வடிவ வாய்கால் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து இன்று வீரர்வெளியில் பணிகள் மேற்கொள்ளும் போது கென்னடி எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கு உள்ள குறைகளை மக்களிடம் கேட்டறிந்தார்.
உடன் உதவி பொறியாளர் பிரபாகரன் , இளநிலை பொறியாளர் சண்முகம், தி.மு.க. பிரமுகர் பிராங்க்ளின், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜி, அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், மீனவர் அணி மாநில துணை அமைப்பாளர் விநாயக மூர்த்தி, கிளைச் செயலாளர் அசோக், மற்றும் கட்சியினர் செல்லப்பன், மோகன் அனைவரும் உடனிருந்தனர்.






