என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை மாநிலத்தில் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டம் மத்திய அரசின் நிதியளிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • புதுவை மாநிலத்தில் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டம் மத்திய அரசின் நிதியளிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டம் மத்திய அரசின் நிதியளிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியான பாலினம் பிரிக்கப்பட்ட செயற்கை முறை கருவூட்டல் திட்டம், புதுவை மாநிலத்தில் கால்நடை விவசாயிகளிடம் அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் குறித்து கால்நடை விவசாயிகளுக்கு ஒருநாள் கருத்தரங்கு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. திட்டத்தின் தொடக்க விழா மற்றும் கருத்தரங்கம் இன்று ஆரியப்பாளையம், வில்லியனூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது.

    திட்டத்தினை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அரசு செயலர் குமார் முன்னிலை வகித்தார். இயக்குனர் டாக்டர் லதா மங்கேஷ்கர் வரவேற்றார். இந்த திட்டத்தில் கறவைமாடுகள் 90 சதவீதம் பெண் கன்றுகள் மட்டுமே ஈனும் வாய்ப்பு ஏற்படும். இதனால் புதுவையில் பால்உற்பத்தி பெருகுவதுடன் கால்நடை விவசாயிகளின் வருமா னமும் கணிசமாக உயரும்.

    விவசாயிகள் திட்டத்தினை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ராஜகணபதி, காந்தராஜ், உமாமகேஸ்வரி ஆகியோர் பாலினம் பிரிக்கப்பட்ட செயற்கை முறை கருவூட்டல் நன்மைகள், கன்று பராமரிப்பு முறைகள், தீவன மேலாண்மை, சினைப்பருவம், பேறுகால மேலாண்மை குறித்து விளக்கினர்.

    கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகளுக்கு கறவை மாடுகளுக்கான தாது உப்பு கலவையினை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வழங்கினார். விழா ஏற்பாடுகளை இணை இயக்குநர் செந்தில் குமார் மற்றும் துறை அதிகாரிகள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரை சேர்ந்தவர் செல்வசீலன்.
    • புதுவை உப்பளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரை சேர்ந்தவர் செல்வசீலன். இவர் புதுவை உப்பளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாலசுபா. வீட்டிலிருந்த படியே கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை சப்பளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    இவருக்கு பிரபல தனியார் நிறுவன கொரியர் அலுவலகத்தில் இருந்து போன் செய்வதாக ஒரு நபர் போனில் பேசியுள்ளார். அப்போது தாங்கள் ஆர்டர் செய்த பொருள் கொரியரில் தடைப்பட்டு நிற்பதாகவும், அதற்காக நான் அனுப்பும் ஒரு ஆன்லைன் லிங்கை அழுத்தி அதில் வெறும் ரூ.2 செலுத்தினால் தங்களுக்கு பொருள் வந்து சேரும் எனவும் கூறியுள்ளனர். கொரியர் நிறுவன ஊழியர் அனுப்பிய லிங்கை பாலசுபா அழுத்தி அதன் உள்ளே சென்று ஆன்லைன் மூலம் ரூ.2 செலுத்தியுள்ளார்.

    மறுநாள் பாலசுபாவின் வங்கி கணக்கில் இருந்து 3 முறை மொத்தம் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 195 அந்த லிங்க் மூலம் எடுக்கப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலசுபா அரக்கோணத்தில் உள்ள இவரது சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கியை தொடர்பு கொண்டு கேட்டார்.

    பாலசுபாவின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது ஆனால் யார் எடுத்தது? என்பது குறித்து தெரியவில்லை என வங்கி அதிகாரிகள் கூறிவிட்டனர்.

    இந்த ஆன்லைன் மோசடி குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் பாலுசுபா புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.

    • புதுவை அடுத்த தமிழக பகுதியான பொம்மையார்பாளையத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.
    • தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி;

    கேரள மாநிலம் இடுக்கி அடுத்த மூணாறு கூடார்வளை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ராம்சிங். இவர் புதுவை அடுத்த தமிழக பகுதியான பொம்மையார்பாளை யத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.

    அப்போது அதே ரிசார்ட்டில் வேலை பார்த்து வந்த சோரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் நண்பராக பழகி வந்துள்ளார். அப்போது அவருடன் போனில் பேசிய ஒருவர் வில்லியனூர் அடுத்த பத்துக்கண்ணு பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த ராம்சிங்கை 5 பேர் கட்டையால் தாக்கினர்.  இதில் அவருக்கு வயிறு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து ராம் சிங் வில்லியனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஸ்டுடியோ உரிமையாளர் மாணிக்கமுத்து, சட்டக் கல்லூரி மாணவர் நரேந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.

    • பிளஸ்2 பொதுத்தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • மாணவி நஸ்ரின் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் தொகுதி மடுகரை வெங்கடசுப்பா ரெட்டியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 88மாணவிகள் பிளஸ்2 பொதுத்தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிளஸ்2 பொதுத்தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    பள்ளியில் முதலிடம் பெற்ற மகேஸ்வரி மாணவி 528 மதிப்பெண்களும், இரண்டாம் இடம் பெற்ற மாணவிகள் ஆஷா ஷிபானா 520 மதிப்பெண்களும், தேவஸ்ரீ 520 மதிப்பெண்களும், மூன்றாவதாக மாணவி அபிநயா 518 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். உயிரியல் பாடப்பிரிவில் கிரிஜா மாணவி 100 மதிப்பெண்களும், கணித அறிவியல் பிரிவில் மாணவி நஸ்ரின் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். பள்ளி முதல்வர் ரீனா முதல் 3 இடங்களை பெற்ற மாணவிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் வசந்தி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.

    • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், ஆயக்குடி பகுதியை சேர்ந்தவர் புஷ்பா
    • இதனால் மணிகண்டனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது இருந்தனர்‌.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், ஆயக்குடி பகுதியை சேர்ந்தவர் புஷ்பா. இவர் முதல் கணவர் சிவராமன் சிவக்கொழுந்து என்பவரை திருமணம் செய்து கொண்டு 2 மகன்கள் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் முதல் கணவர் இறந்து விட்டதால் புதுவை அரியாங்குப்பம் வானவில் நகரை பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வந்த மணிகண்டன் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் மணிகண்டனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தது இருந்தனர்.

    இதனால் தனியாக இருவரும் வசித்து வந்தனர். இவர்களுக்கு கீர்த்தனா என்கிற 7 வயது மகள் இருந்து வருகிறார். மணிகண்டன் குடித்துவிட்டு புஷ்பாவிடம் தகராறு செய்து கொண்டுள்ளார். இதைப் போன்று நேற்றுமுன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் புஷ்பா தனது மகளை அழைத்துக் கொண்டு பக்கத்து தெருவுக்கு சென்று விட்டார்.

    பின்னர் நேற்று காலை சென்று பார்த்த போது வீடை பூட்டிக்கொண்டு மணிகண்டன் சிமெண்ட் சீட் போட்ட வீட்டின் கூரையில் நைலான் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது சம்பந்தமாக புஷ்பா கொடுத்த புகார் அரியாங் குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகா னந்தம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கல் வீடு கட்டுவதற்கு, 2-ம் மற்றும் 3-ம் தவணை தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.
    • உழவர்கள் துறை அமைச்சரு மான சாய்.ஜெ.சரவணன் குமார் வழங்கினார்.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதிக்குட்பட்ட ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கல் வீடு கட்டுவதற்கு, 2-ம் மற்றும் 3-ம் தவணை தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது.

    பத்துக்கண்ணில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மொத்தம் 80 பயனாளிகளுக்கு மானிய தொகை பெறுவதற்கான ஆணையை ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் உழவர்கள் துறை அமைச்சரு மான சாய்.ஜெ.சரவணன் குமார் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா ஊசுடு தொகுதி தலைவர் சாய்.தியாகராஜன், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதிதிராவிடர் தொகுதி மக்கள் பொறுப்பாளர் ஜெகதலபிரதாபன் கலந்து கொண்டனர்.

    • தமிழ் தேசிய முன்னணி தமிழ்மணி உட்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
    • போராட்டம் நடத்தியவர்கள் பொதுப்ப ணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு திராவிடர் விடுதலை கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

    போராட்டத்துக்கு திராவிடர் விடுதலை கழகம் லோகு அய்யப்பன் தலைமை வகித்தார். மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர்செல்வன், திராவிடர் கழகம் சிவவீரமணி, மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், தமிழர் களம் அழகர், அம்பேத்கர் தொ ண்டர்படை பாவாடை ராயன், சிந்தனையாளர் இயக்கம் தீனா, மனித உரிமைகள் அமைப்பு முருகானந்தம், தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் கட்சி அறிவுமணி, இளைஞர் முன்னணி கலைபிரியன், பீ போல்ட் பசீர்அகமது, தமிழ் தேசிய முன்னணி தமிழ்மணி உட்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    பொதுப்பணித்துறையில் வேண்டியவர்களுக்கு மட்டும் ஒப்பந்தம் அளிப்பதை கண்டித்தும், பாதாளசாக்கடை அடைப்பு நீக்கும் பணியை குறிப்பிட்ட நபர்களுக்கு டெண்டர் விடுவதை கண்டித்தும், முறைகேடுகளை கண்டு கொள்ளாத பொது ப்பணித்துறை அமைச்சரை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

    போராட்டம் நடத்தியவர்கள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக போலீஸ்காரர் ஒருவர் மரியாதைக்குரியதாக பேசியதாக கூறி போலீ சாருடன், போராட்ட க்காரர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • வம்பாகீரப்பாளையம் சன்னியாசி தோப்பு மயான கொள்ளை நடைபெறும் கோவில் இடத்தில் தற்போது பேச்சி அம்மன் உருவ பொம்மை அமைக்கும் பணி நடந்து வந்தது.
    • அப்போது தனியார் ஒருவர் இது அவருடைய இடம் என்று கூறினார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட வம்பாகீரப்பாளையம் சன்னியாசி தோப்பு மயான கொள்ளை நடைபெறும் கோவில் இடத்தில் தற்போது பேச்சி அம்மன் உருவ பொம்மை அமைக்கும் பணி நடந்து வந்தது. அப்போது தனியார் ஒருவர் இது அவருடைய இடம் என்று கூறினார்.

    இதை அறிந்த எம்.எல்.ஏ. மற்றும் ஊர் பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று தனியார் இடம் என்று கூறும் தனி நபரை தனது அலுவலகம் வர வைத்து பொதுமக்கள் நலன் காக்கும் விதமாக ஊர் மக்களின் விருப்பத்திற்கேட்ப கோவிலுக்கு சாதகமாக பிரச்சனையை சமூகமாக தீர்த்து வைத்தார். இதையடுத்து திடீர் போராட்டம் நடந்தது. பின்னர் தி.மு.க அனிபால் கென்னடி எம்.எல்.ஏ முன்னிலையில் முதல்-அமைச்சர் தலைமையில் ஒரு சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

    அப்போது பொதுமக்கள் மத்தியில் தவறு செய்து மோசடி நபராக இருந்தால் அவர்கள் தண்டிக்க படுவார்கள், அதேபோல் அந்த இடம் உண்மையில் ஒருவருக்கு சொந்தமெனில் அதை பாதுகாக்க வேண்டியது அரசு கடமை என்று கூறிவிட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த மக்கள் மீண்டும் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.வை சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். கோவில் இடத்தை மக்களுக்கு பெற்று தருவேன் என்று உறுதி அளித்தார்.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
    • புதுவை புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 251 மாணவர்கள் தேர்வு எழுதினர்

    புதுச்சேரி:

    பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.புதுவை புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 251 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவ ர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பள்ளி பெற்றுள்ளது.

    600 மதிப்பெண்களுக்கு 590 மதிப்பெண்கள் பெற்று பவதாரணி என்ற மாணவி பள்ளியில் முதலிடம் பெற்றார். 589 மதிப்பெண் பெற்று மாணவர் ஆதித்யா 2-ம் இடத்தையும், 588 மதிப்பெண் பெற்று மாணவி சாய் பிரணிதா 3-ம் இடத்தையும் பெற்றனர்.

    பள்ளியில் தேர்வு எழுதிய 251 மாணவர்களில் 162 மாணவர்கள் 75 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தனர்.

    தமிழில் மாணவர் பரத் 98, பிரெஞ்சில் மாணவி சுஷ்மிதா 99, சமஸ்கிருதத்தில் மாணவி பிரணிதா 98, ஆங்கிலத்தில் பிருந்தா, கதிரவன் 98, கணிதத்தில் நந்தினிதேவி 99, இயற்பியலில் சுஷ்மிதா 100, வேதியியலில் பிரணிதா 100, கதிரவன் 100, லோகேஸ்வரன் 100, நவ்யா தர்ஷினி 100, பரத் 100, உயிரியலில் கதிரவன் 100, மனோன்மணிலெபேல் 100, அஷ்வந்த் 100, கணிணி அறிவியலில் சுஷ்மிதா 100, சுதர்சன் 100, பிருந்தா 100, ஹரீஷ் 100, தானேஸ்வர் 100, அசீம்அகமது 100, தர்ஷன் 100 மதிப்பெண் பெற்றனர்.

    வணிகவியலில் ஆதித்யா 100, கணக்கு பதிவியலில் பவதாரிணி 100, ஆதித்யா 100, விஷால் 100, தனஸ்ரீ 100, காவியா 100, பொருளாதாரத்தில் பவதர்ஷினி 100, வணிக கணிதத்தில் பவதாரணி 100, ஆதித்யா 100, விஷால் 100, தனஸ்ரீ 100 மதிப்பெற்று சாதனை படைத்தனர்.

    சாதனை படைத்த பள்ளி மாணவர்களை பள்ளி தாளாளர் பிரடெரிக் ரெஜிஸ், மருத்துவ இயக்குனர் ஜீத்தா பிரடெரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா, ஆலோசனைக் குழு உறுப்பி னர்கள், வகுப்பாசி ரியர்கள் எமில், இளவழகன், நடராஜன், வாசுகி, அனுராதா ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் எந்த குறைப்பும் செய்யவில்லை, நிதி பற்றாக்குறையும் ஏற்படவில்லை.
    • ஜிப்மர் வளாகத்தில் மக்கள் மருந்தகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேட்டில் மத்திய அரசு தன்னாட்சி நிறுவனமான ஜிப்மர் ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

    இங்கு புதுவை மட்டுமின்றி, தமிழகம், கேரளா உட்பட தென்மாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் ஆயிரக்கணக்கில் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜிப்மரில் 63 வகையான உயர் சிகிச்சைக்கு கட்டணம் வசூலிக்க நிர்வாகம் சுற்றறிக்கை பிறப்பித்தது.

    இதற்கு புதுவை அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அதோடு ஜிப்மரில் நோயாளிகளுக்கு மருந்துகள் தருவதில்லை, மத்திய அரசு ஜிப்மரை புறக்கணிக்கிறது, டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது என அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் புதுவை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் நிர்வாகம் சார்பில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மரில் மருந்துகள், டாக்டர்கள் பற்றாக்குறை என வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. கடந்த 5 ஆண்டில் ஜிப்மருக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு உயர்ந்துள்ளது.

    2023-24ம் நிதியாண்டுக்கு ஜிப்மருக்கு ரூ.1,490 கோடியே 43 லட்சம் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

    எய்ம்ஸ், சண்டிகர் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் நிதியை விட இது கூடுதல் நிதியாகும். மூலதன வசதிகளை உருவாக்க ரூ.300 கோடி, பொது செலவுகளுக்கு ரூ.355 கோடி, சம்பளத்துக்கு ரூ.835.43 கோடி ஒதுக்கப்பட்டுள்து. மூலதன வசதி மானியம் 2½ மடங்கு அதிகரித்துள்ளது.

    மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் எந்த குறைப்பும் செய்யவில்லை, நிதி பற்றாக்குறையும் ஏற்படவில்லை. கொரோனா தாக்கம் இருந்த நிலையிலும் ஜிப்மரில் நோயாளிகளின் வசதிக்காக டிஜிட்டல் ஆஞ்சியோகிராபி, புதிய லீனியர், கிருமிநீக்க துறை நவீனமயம், அல்ட்ரா சவுண்ட், ஹிமாட்டலஜி அனலைசர், உட்பட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    ஜிப்மர் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்த பல துறைகளிலும் புதிய உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளது.

    பிரதமர், மத்திய அரசின் கொள்கைக்கு ஏற்ப காகித மருந்து சீட்டுகள் தவிர்க்கப்பட்டு மின் சீட்டுகள் வழங்கப்படுகிறது. ஜிப்மரில் 786 பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அனுமதித்துள்ளது.

    இதில் 252 டாக்டர்கள், 431 செவிலியர்கள், 50-க்கும் மேற்பட்ட தொழில் நுட்ப நல்லுர்கள் அடங்குவர். 10 ஆண்டுக்கு பிறகு ஜிப்மரில் புதிய பணியிடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி 70 முதுநிலை டாக்டர்கள், 550 செவிலியர்கள் தேர்வு செய்யும் நடைமுறைகள் நிறைவு பெற்றுள்ளன.

    இவர்கள் இன்னும் 2 மாதத்தில் ஜிப்மரில் பணியில் சேர உள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்ட விதிகளின்படி முழு வசதிகள் வழங்கப்படுகிறது. வெளிப்புற நோயாளிகளுக்கும் தொடர்ந்து இலவச மருந்துகள் வழங்கப்படுகிறது.

    தற்போதுள்ள சேவைகளுக்கான கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை.

    வழக்கமான இலவச மருந்தகம் தவிர, அம்ரித் மருந்துகம், 24மணி நேர தனியார் மருந்தகமும் அமைக்கப்பட்டுள்ளது. இவை மலிவு விலையில் நோயாளிகளுக்கு மருந்துகள், அறுவை சிகிச்சைக்கு தேவையான கருவிகளை வழங்குகின்றன. ஜிப்மர் வளாகத்தில் மக்கள் மருந்தகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எப்போதும் போல புதுவை, சுற்றியுள்ள மக்களுக்கும், நோயாளிகளுக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஜிப்மர் உறுதியாக உள்ளது. இன்னும் பல உயரங்களை எட்ட முழு சக்தியுடன் ஜிப்மர் செயல்பட்டு வருகிறது.

    ஜிப்மர் பற்றி வெளியாகும் அனைத்து வதந்திகள், தவறான தக வல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜிப்மர் நிர்வாகம் விரும்புகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் பெரியகடை போலீசில் ஆடியோ பதிவோடு புகார் அளித்தனர்.
    • அவரின் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நிர்வாகிகள் பெரியகடை போலீசில் ஆடியோ பதிவோடு புகார் அளித்தனர்.

    அதில், கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அங்குள்ள மக்கள் அளிக்கும் ஆதரவால் பா.ஜனதா மோசமான தோல்வியை சந்திக்கும். இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, அவரின் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பா.ஜனதா வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் ஆடியோ பதிவு மூலம் தெளிவாகிறது.

    எனவே மிரட்டல் விடுத்த பா.ஜனதா நிர்வாகிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

    வக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், வக்கீல்கள் சுரேஷ், ராமலிங்கம்,வட்டார தலைவர் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பள்ளியில் தேர்வு எழுதிய 228 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.
    • செல்வகணபதி எம்.பி. பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் புதுவை லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதாவது அந்த பள்ளியில் தேர்வு எழுதிய 228 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். 

    மாணவி பிரியதர்ஷினி 600-க்கு 597 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவி சந்தியா வைஷ்ணவி 595 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், மதுமிதா 592 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    சாதனை படைத்த மாணவிகளுக்கு விவேகானந்தா கல்வி குழுமத்தின் தாளாளர் செல்வகணபதி எம்.பி. பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து பள்ளியின் தாளாளர் செல்வகணபதி எம்.பி. கூறுகையில், `எங்கள் பள்ளியில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 33 மாணவர்களும், 500-க்கு மேல் 75 மாணவர்களும், 400-க்கு மேல் 68 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

    பொருளாதாரம் பாடத்தில் 5 மாணவர்களும், வணிகவியலில் 13 பேரும், கணக்கு பதிவியலில் 8 பேரும், வணிக கணிதத்தில் 9 பேரும், கணினி பயன்பாட்டு பாடத்தில் 4 பேரும், கணினி அறிவியலில் 7 பேரும், வேதியியல் பாடத்தில் 8 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    சாதனை படைத்த மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

    ×