என் மலர்
புதுச்சேரி
- புதுவைக்கு வந்த சிமெண்ட் லாரி நேற்று இரவு வில்லியனூரில் இருந்து பத்துகண்ணு பகுதியை நோக்கி சென்றது
- நிலை குலைந்த லாரி டிரைவர் விஜயகுமார் லாரியை கட்டுப்படுத்தி நிறுத்த முயன்றார்.
புதுச்சேரி:
விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு வந்த சிமெண்ட் லாரி நேற்று இரவு வில்லியனூரில் இருந்து பத்துகண்ணு பகுதியை நோக்கி சென்றது. அப்போது எதிரே வந்த கார் திடீரென நிலை தடுமாறி லாரி மீது மோதுவது போல் வந்தது. இதில் நிலை குலைந்த லாரி டிரைவர் விஜயகுமார் லாரியை கட்டுப்படுத்தி நிறுத்த முயன்றார்.
ஆனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் விஜயகுமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். லாரியில் இருந்த சிமெண்டு மூட்டைகளை வேறு வண்டியில் ஏற்றி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட வருகிறது.
இது குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுல்தான்பேட்டை காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
- ஆசிரியர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா பொன்னாடை அணிவித்தும் புத்தகம் பரிசளித்தும் வாழ்த்தினார்.
புதுச்சேரி:
புதுவை மாநில அளவில் பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளிகளில் வில்லியனூர் சுல்தான்பேட்டை காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா பொன்னாடை அணிவித்தும் புத்தகம் பரிசளித்தும் வாழ்த்தினார்.
தொடர்ந்து அந்த பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 472 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்த மும்தாஜ் பீவி, 456 மதிப்பெண்கள் எடுத்த 2-ம் இடம் பிடித்த மெஹருன் நிசா, 453 மதிப்பெண்கள் எடுத்து 3-ம் இடம் பிடித்த மாணவி திலகா ஆகியோர்க்கும் எதிர்க்கட்சி தலைவர் சிவா நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில், பள்ளி தலைமை பொறுப்பு ஆசிரியர் வில்சன், ஆசிரியர்கள் திருஞானசம்பந்தம், ராமலிங்கம், எழிலரசி, காமேஸ்வரி, மற்றும் தி.மு.க. பொதுக்குழு உறப்பினர்கள் கோபால், ராமசாமி, அவைத் தலைவர் ஜலால் ஹனீப் மற்று பெற்றோர் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் இருந்தனர்.
- கால்பந்தாட்ட போட்டி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தொடங்கியது.
- இதனை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் முதன்முறையாக தென் மண்டல அளவிலான கல்லூரிகளுக்கு இடையே ஆன எழுவர் கால்பந்தாட்ட போட்டி தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தொடங்கியது.
இந்த எழுவர் கால்பந்தாட்ட போட்டியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ் முன்னிலை வகித்தார்.
இந்த போட்டியில் 25-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. முன்னதாக தாகூர் கலைக் கல்லூரி வளாகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் புதுவை மணக்குள விநாயகர் கோவில் லட்சுமி யானையின் நினைவாக மரக்கன்று நட்டார். கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை தாகூர் கலைக் கல்லூரி உடற்கல்வி துறை மேற்கொண்டு உள்ளனர்.
- இதையொட்டி அவருக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க. அன்பழகன் ஆதங்கம்.
புதுச்சேரி:
புதுவையில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி முதல்- அமைச்சராக ரங்கசாமி கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ந் தேதி பதவியேற்றார்.
ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவியேற்று 2 ஆண்டுகள் முடிந்து 3-ம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதையொட்டி அவருக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வும் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தது. அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் சட்டசபையில் ரங்கசாமியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ரங்கசாமி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ஆனால் கூட்டணி கட்சிதான் மகிழ்ச்சியாக இல்லை என்றும் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது. அப்போது ரங்கசாமி, எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்போம் என கூறினார். ரங்கசாமி என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி முதல்-அமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டு முடிவடைந்த நிலையிலும் இதுவரை புதுவையில் எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய பதவி வழங்கப்படவில்லை.
இதனால் ஏற்கனவே ஆளும்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆதங்கத்தில் உள்ளனர். அதேநேரத்தில் கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வியடைந்த அ.தி.மு.க. நியமன எம்.எல்.ஏ.வை எதிர்பார்த்தது. ஆனால் சட்டசபையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் பா.ஜனதா நிரப்பிக்கொண்டது.
இதனால் நியமன எம்.எல்.ஏ. பதவி அ.தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை. அதேநேரத்தில் வாரிய தலைவர் பதவியாவது கிடைக்கும் என அ.தி.மு.க.வினர் எதிர்பார்த்தனர்.
ஆனால் வாரியமும் கிடைக்காததால், விரக்தியில் அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது
- நிரந்தரமான ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
- சீருடை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. சென்டாக் கலந்தாய்வு உரிய நேரத்தில் தொடங்கப்படும்.
புதுச்சேரி:
புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு பள்ளிகள் தரம் மேம்படுத்தப்படும் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்த தற்கு கடந்த ஆண்டு பாடத்திட்டம் குறைவாக இருந்ததும், இந்த ஆண்டு முழுமையான பாடத்திட்டம் இருந்ததும்தான் காரணம். அரசு பள்ளிகளின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்.
அரசு பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறோம். தற்போது ஆசிரியர் பற்றாக்குறை அரசு பள்ளி களில் இல்லை. ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி யுள்ளோம். அந்த ஆசிரியர்க ளுக்கு சம்பள உயர்வும் அளித்துள்ளோம். கூடுதலாக மீண்டும் சம்பள உயர்வு வழங்க உள்ளோம். நிரந்தரமான ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்கிறோம். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை படிப்படியாக கொண்டு வந்துள்ளோம். இந்த ஆண்டு ஒன்று முதல் 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அரசு பள்ளி களில் அமல்படுத்தப்படும். 10-ம் வகுப்பு, பிளஸ்2 மாநில கல்வி அடிப்படையில் நடைபெறும்.
அடுத்த கல்வியாண்டில் இவற்றையும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டமாக மாற்றப்படும். தமிழ் விருப்ப பாடமாக இருக்கும். மாணவர்கள் விரும்பினால் பிரெஞ்சும் படிக்கலாம். கல்வியாண்டு தொடக்கத்திலேயே லேப்டாப் வழங்க உள்ளோம். சீருடை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. சென்டாக் கலந்தாய்வு உரிய நேரத்தில் தொடங்கப்படும்.
கடந்த ஆண்டு போல கலைக்கல்லலூரிகள் தொடங்க காலதாமதம் ஆவதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் செயல்பாடுகள் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக உள்ளது. இது மக்களுக்கு நன்றாக தெரியும். பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
ஏற்கனவே செயல்படு த்தப்பட்ட திட்டங்களையும், நிறுத்தப்பட்ட திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம். பொதுப்பணித்துறை மூலம் 135 கி.மீ சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை மூலம் சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.
100 நாள் வேலை திட்டத்தில் கூடுதல் வேலைநாட்கள் வழங்க உள்ளோம். மக்கள் நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் உதவித்தொகை உயர்த்தி யுள்ளோம். கிடைக்குமோ? கிடைக்காதோ? என்ற நிலையில் இருந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை புதிதாக வழங்கியுள்ளோம். விண்ணப்பித்த அனைவருக்கும் உதவித்தொகை உடனடியாக வழங்க உள்ளோம்.
மத்திய அரசு புதுவைக்கு நிச்சயம் மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சட்ட சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தோடு பிரதமர், உள்துறை அமைச்சரை விரைவில் சந்திக்க உள்ளோம். பிரதமரிடம் நேரம் ஒதுக்கித்தர கோரியுள்ளோம். அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பது அ.தி.மு.க.வின் கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- பள்ளியில் 100 சதவீத தேர்ச்சிக்கு வித்திட்ட அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுச்சேரி:
பிளஸ்-2 ேதர்வு முடிவு வெளியானது. புதுவை அமலோற்பவம் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 761 மாணவர்கள் எழுதினர்.அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
28-ம் ஆண்டாக பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் குறித்து சீனியர் பிரின்சிபல் லூர்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பிளஸ்-2 தேர்வில் பள்ளி அளவில் 600-க்கு 595 மதிப்பெண் பெற்று சரவணன் என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். 594 மதிப்பெண் பெற்று சஞ்சய், சீனு என்ற 2 மாணவர்கள் 2-ம் இடம் பெற்றுள்ளனர்.
593 மதிப்பெண் பெற்று அபினாஷ், ரோஷிணி ஆகி யோர் 3-ம் இடம் பெற்றுள் ளனர். ஒட்டுமொத்தமாக பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் 480 பேர் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்ணும், 738 பேர் 60 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
550 மதிப்பெண்ணிற்கு மேல் 78 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 256 மாணவர்களும் பெற்றுள்ளனர். பாடப்பிரிவு களில் 100-க்கு 100 மதிப்பெண்களை 77 பேர் பெற்றுள்ளனர்.
பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர் சரவணனுக்கு 8 கிராம் தங்க காசும், 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு 4 கிராம் தங்க காசும், 3-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு 2 கிராம் தங்க காசும் பரிசாக வழங்கப்படும். பள்ளியில் 100 சதவீத தேர்ச்சிக்கு வித்திட்ட அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எதிர்முனையில் பேசியவர் சொன்னதை நம்பி அவர் கொடுத்த கூகுள் பே அக்கவுண்டில் ரூ.1 லட்சம் பணத்தை அட்வான்ஸ் தொகையாக அனுப்பினார்.
- பெண் புதுவை இணையவழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புதுச்சேரி:
புதுவை சித்தன்குடியைச் சேர்ந்த ஒரு பெண் வாடகை வீடு கிடைக்குமா என்று ஆன்லைனில் தேடிக் கொண்டிருந்தார்.
அப்போது புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் 3-வது குறுக்கு தெருவில் ஒரு அப்பார்ட்மெண்டின் பெயர், விலாசம், புகைப்படங்களுடன் 2-வது மாடியில் வாடகைக்கு வீடு தயாராக உள்ளது என ஆன்லைனில் விளம்பரம் இருந்தது.
அதன் கீழே இருந்த செல் நம்பரை தொடர்பு கொண்டு அந்தப் பெண் வாடகை மற்றும் அனைத்து விவரங்களை கேட்டு தெரிந்துள்ளார்.
எதிர்முனையில் பேசியவர் சொன்னதை நம்பி அவர் கொடுத்த கூகுள் பே அக்கவுண்டில் ரூ.1 லட்சம் பணத்தை அட்வான்ஸ் தொகையாக அனுப்பினார். பணத்தை அனுப்பிய பிறகு அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்ட போது எடுக்காததால் சந்தேகமடைந்து ஆன்லைனில் கொடுத்த விலாசத்தில் சென்று பார்த்தார்.
அங்கு அடுக்குமாடி குடியிருப்பு இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அந்த பெண் புதுவை இணையவழி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக இணைய வழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி விசாரித்து வருகிறார்.
மேலும் அவர் பணம் செலுத்திய வங்கிக் கணக்கை சரிபார்த்த போது அது ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. பொதுமக்கள் இது போன்ற ஆன்லைனில் வருகிற தகவலை வைத்து பணத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம்.
இத்தகைய விளம்பரங்கள் இணைய வழி மோசடிக்காரர்களால் உருவாக் கப்பட்டு ஏமாற்ற பயன்படுவதால் பொது மக்கள் இணைய வழி விளம்பரங்களை நம்பி யாருக்கும் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுவை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- விலை உயர்ந்த போதைப் பொருளான மெத்தம்பேட்டமையின், கஞ்சா பதுக்கி வைத்திருந்தார்.
- புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார் சாவடியில் கடந்த சில நாட்களாக போலீசார் மாறு வேடத்தில் கண்காணித்து வந்தனர்.
அங்கு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரது உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் விலை உயர்ந்த போதைப் பொருளான மெத்தம்பேட்ட மையின், கஞ்சா பதுக்கி வைத்திருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கேரள மாநிலம் திருவனந்த புரம் அருகே உள்ள எம்.எஸ் ஹவுஸ் பனவூர் பகுதியைச் சேர்ந்த அன்சார் மகன் ரசல் (வயது 26) என்பது ெதரியவந்தது.
பெரிய முதலியார் சாவடியில் கடந்த 2 ஆண்டுகளாக தங்கியிருந்து கேரள மாநிலத்தில் போதை பொருளை வாங்கி வந்து புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- சோதனை செய்தபோது கத்தி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
- போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அரசூர் பகுதியில் ரோந்து பனி சென்றனர். அப்போது அங்குள்ள சாராயக்கடை அருகே சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த வரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அவர் வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த புண்ணியக்கோடி (32) என்பதும், இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
அவரை சோதனை செய்தபோது கத்தி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
- மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்
- நாணயங்கள் செல்லாது என பொதுமக்களை அலைக்கழித்து வருகின்றன.
புதுச்சேரி:
மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்திய ரிசர்வ் வங்கி ரூ 1, 2 , 5 ,10 மற்றும் 20 நாணயங்களை அடித்து சந்தைகளில் புழக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்திய நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மேற்கண்ட சில்லறை நாணயங்கள் அனைத்து வணிக நிறுவனங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதுவை மாநிலத்தில் 10ரூபாய், 20ரூபாய் நாணயங்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் என எந்த ஒரு கடைகளிலும் மேற்கண்ட நாணயங்கள் பொது மக்களிடம் வாங்காமல் மறுத்து வருகின்றன.
இந்த நாணயங்கள் செல்லாது என பொதுமக்களை அலைக்கழித்து வருகின்றன.
எனவே புதுவை அரசும், மாவட்ட நிர்வாகமும், வணிகவரித்துறையும், ரூ10 மற்றும் ரூ20 நா ணயங்கள் அனை த்தையும் பெற வேண்டும் என கடை மற்றும் அனை த்து வணிக நிறுவன ங்களுக்கும், குறிப்பாணை அனுப்ப வேண்டும். நாணயங்களை வாங்க மறுக்கும் தனி நபர் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முதல் அமைச்சருக்கு அ.தி.மு.க தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
- பினாமிகள் பெயரில் வெளி நாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் லட்சக் கணக்கான அ.தி.மு.க தொண்டர்களின் உழைப் பாலும், அவர்கள் அளித்த வாக்காலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளது.
பதவி வந்ததும் கூட்டணி கட்சி தலைவர்களையும், மக்களையும் மறந்து சுயநலமாக செயல்படுவது நல்லதல்ல என முதல் அமைச்சருக்கு அ.தி.மு.க தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
அரசின் திட்டங்களுக்கு துணை நிற்காமல் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், 2 ஆண்டுகளாக சரியான முறையில் செயல்படாமல், சுயநலத் தோடு செயல்படும் அமைச்சர் களை இனம் கண்டு அமைச்சர வையில் தேவையான மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என முதல்- அமைச்சருக்கு அ.தி.மு.க மாநில செயலாளர் அறிவுரை வழங்கியுள்ளார்.
மதுபான தொழிற்சா லைகள் அமைக்க அனுமதி வழங்கியது, ரெஸ்டோ பார் எனப்படும் கவர்ச்சி நடன பார் அமைக்க அனுமதி வழங்கியது, நள்ளிரவிலும் மது விற்பனைக்கு அனுமதி வழங்கியது, தரமற்ற சாலைகள் அமைத்தது, மின்துறை தனியார்மயம் என அரசின் பல்வேறு துறைகளிலும் சுயநலம் மற்றும் சுயலாப போக்கோடு அமைச்சர்கள் செயல் பட்டுள்ளது நிரூபணமாகி வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு வெளிநாடுகளுக்கு புதுவை அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்து தங்களின் லாபத்தை பினாமிகள் பெயரில் முதலீடு செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
எனவே முதல்-அமைச்சர் தானாக முன்வந்து, கடந்த 2 ஆண்டுகளில் அமைச்சர்களின் வெளி நாட்டு சுற்றுப்பயணம், பினாமிகள் பெயரில் வெளி நாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- இளைஞர்களும், மாணவர்களும் போதையில் மூழ்கி கஞ்சா விற்பனை, புதிதாக 6 மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு அனுமதி.
- புதுவை அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க அமைப்பாளரும். எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதா வது:-
அரசின் சாதனைகள் என்பது அந்த அரசு பொறுப்பேற்ற காலத்தில் இருந்து மக்களுக்கு நிறைவேற்றிய திட்டங்களை குறிப்பிடலாம். அரசின் வெற்று அறிவிப்புகள் எல்லாம் சாதனைகளாகாது. புதுவை அரசின் சாதனை களாக முன்வைக்கப்ப ட்டவை வெற்று அறிவிப்பு களே தவிர சாதனைகள் அல்ல. திட்டமிட்ட வளர்ச்சி என்பதே மாநிலத்தின் எழுச்சியாகும்.
நிதி ஆதாரம் ஏதுமில்லாமல் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்புகளை தமது அரசின் ஈராண்டு சாதனையாக புதுவை அரசு வௌியிட்டிருப்பது அரசின் செயலற்ற தன்மைக்கே சாட்சியாக உள்ளது. நிதி ஒதுக்கீடே இல்லாத திட்டங்களை எல்லாம் முன்னிலைப்படுத்தி இருக்கிறார்.
மாதம்தோறும் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் என முதல்- அமைச்சர் அறிவித்தார். அதற்கு எங்கே நிதி.? வேலை வாய்ப்புக்கு தொழில்நுட்ப பூங்கா எங்கே.? காணவில்லை. 6 முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.சி பாடத்திட்டம் எங்கே.?. காங்கிரஸ், –தி.மு.க ஆட்சியில் வேலை யிழந்தோறுக்கு வேலை என்றார்.
எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார்.? உலக தமிழ் மாநாடு எப்போது? தமிழ் மொழிக்கான மொழியியல் பண்பாட்டு நிறுவனம் இன்று மூடுவிழா கண்டுள்ளது.
எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது
ஏழை மகளிருக்கு அறிவித்த மாத தொகை முதல் மாதம் வழங்கியதோடு காலாவதியானது. புதிய சட்டமன்றம், மேம்பாலம் எங்கே.? அரசின் பழைய கடன் தள்ளுபடியானதா.? நிதிக்குழுவில் புதுவை அரசு இணைக்கப்பட்டதா.? ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தொடருமா.? 10 ஆயிரம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டதா.? கூட்டுறவு நிறுவனங்கள் புனரமைக்கப்பட்டதா.? எதையும் இந்த அரசு செய்யவில்லை.
ஆனால் உண்மையான சாதனைகளை பட்டியலில் சேர்க்காமல் இந்த அரசு மறந்து விட்டது. அதை நினைவு படுத்துகிறோம். வீட்டுக்கு வீடு, வீதிக்கு வீதி ரெஸ்டோ பார்கள், இந்தியாவிலேயே பெண்களுக்கு என்று தனி மது பார், இளைஞர்களும், மாணவர்களும் போதையில் மூழ்கி கஞ்சா விற்பனை, புதிதாக 6 மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு அனுமதி.
லாபத்தில் இயங்கிய மின்துறை தனியாருக்கு விற்பனை, காரைக்கால் துறைமுகம் அதானிக்கு தாரைவார்த்தல், கூட்டுறவு சர்க்கரை நூற்பாலை தனியாருக்கு ஏலம், மாணவர்களுக்கு உப்பு சப்பு இல்லாத அட்சபாத்திரா மதிய உணவு, 100 நாள் வேலைத்திட்டம் 5 நாள் வேலையாக சுருங்கியது, ஆதிதிராவிட மாணவர் விடுதிகளில் சாப்பாடு இல்லாத அவல நிலை, சிறப்புக்கூறு நிதி ரூ. 166 கோடி செலவு செய்யாமை, இவற்றை எல்லாம் சாதனை பட்டியலில் சேர்க்காதது ஏன்.? புதுவை மக்கள் விழிப்போடு உள்ளவர்கள். அவர்களை ஏமாற்றுவதை விடுத்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள், அறிவித்த திட்டங்களை செயல்படுத்த புதுவை அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவிக்கப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தும் போது அதனை நாங்கள் வரவேற்க தயங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






