search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுல்தான்பேட்டை அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
    X

     ஆசிரியர்கள், மாணவிகளுக்கு சிவா எம்.எல்.ஏ. பாராட்டு  தெரிவித்த காட்சி.

    சுல்தான்பேட்டை அரசு பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுல்தான்பேட்டை காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.
    • ஆசிரியர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா பொன்னாடை அணிவித்தும் புத்தகம் பரிசளித்தும் வாழ்த்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அளவில் பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளிகளில் வில்லியனூர் சுல்தான்பேட்டை காயிதே மில்லத் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இந்த பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா பொன்னாடை அணிவித்தும் புத்தகம் பரிசளித்தும் வாழ்த்தினார்.

    தொடர்ந்து அந்த பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 472 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்த மும்தாஜ் பீவி, 456 மதிப்பெண்கள் எடுத்த 2-ம் இடம் பிடித்த மெஹருன் நிசா, 453 மதிப்பெண்கள் எடுத்து 3-ம் இடம் பிடித்த மாணவி திலகா ஆகியோர்க்கும் எதிர்க்கட்சி தலைவர் சிவா நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினார்.

    நிகழ்ச்சியில், பள்ளி தலைமை பொறுப்பு ஆசிரியர் வில்சன், ஆசிரியர்கள் திருஞானசம்பந்தம், ராமலிங்கம், எழிலரசி, காமேஸ்வரி, மற்றும் தி.மு.க. பொதுக்குழு உறப்பினர்கள் கோபால், ராமசாமி, அவைத் தலைவர் ஜலால் ஹனீப் மற்று பெற்றோர் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் இருந்தனர்.

    Next Story
    ×