என் மலர்
புதுச்சேரி

பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த அமலோற்பவம் பள்ளி மாணவர்களை சீனியர் பிரின்சிபல் லூர்துசாமி வாழ்த்தினார்.
அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
- தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- பள்ளியில் 100 சதவீத தேர்ச்சிக்கு வித்திட்ட அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
புதுச்சேரி:
பிளஸ்-2 ேதர்வு முடிவு வெளியானது. புதுவை அமலோற்பவம் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 761 மாணவர்கள் எழுதினர்.அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
28-ம் ஆண்டாக பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் குறித்து சீனியர் பிரின்சிபல் லூர்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பிளஸ்-2 தேர்வில் பள்ளி அளவில் 600-க்கு 595 மதிப்பெண் பெற்று சரவணன் என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார். 594 மதிப்பெண் பெற்று சஞ்சய், சீனு என்ற 2 மாணவர்கள் 2-ம் இடம் பெற்றுள்ளனர்.
593 மதிப்பெண் பெற்று அபினாஷ், ரோஷிணி ஆகி யோர் 3-ம் இடம் பெற்றுள் ளனர். ஒட்டுமொத்தமாக பிளஸ்-2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் 480 பேர் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்ணும், 738 பேர் 60 சதவீதத்திற்கு மேலும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
550 மதிப்பெண்ணிற்கு மேல் 78 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 256 மாணவர்களும் பெற்றுள்ளனர். பாடப்பிரிவு களில் 100-க்கு 100 மதிப்பெண்களை 77 பேர் பெற்றுள்ளனர்.
பள்ளி அளவில் முதலிடம் பெற்ற மாணவர் சரவணனுக்கு 8 கிராம் தங்க காசும், 2-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு 4 கிராம் தங்க காசும், 3-ம் இடம் பிடித்த மாணவர்களுக்கு 2 கிராம் தங்க காசும் பரிசாக வழங்கப்படும். பள்ளியில் 100 சதவீத தேர்ச்சிக்கு வித்திட்ட அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






