என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தமிழகத்துடன் நல்ல நட்புறவு உள்ளது. தமிழகத்துடன் ஒத்து இருப்போம்.
    • புதுவை மாநிலம் தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தில் இருப்பதால், பழைய நட்புறவு தொடரும்.

    புதுச்சேரி:

    கடந்த மார்ச் மாதம் புதுவை சட்டசபையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டார்.

    பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை, பிரதி மாதம் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம், புதுவையில் சித்த மருத்துவக்கல்லூரி ஆகியவற்றுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டிருந்தார். இவற்றை தொடங்கி வைக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு அடுத்த மாதம் 6-ந் தேதி புதுவைக்கு வர உள்ளார்.

    2 நாட்கள் புதுவையில் தங்கியிருக்கும் அவர், இந்த திட்டங்களை எல்லாம் தொடங்கி வைக்கிறார்.

    இந்த தகவலை முதலமைச்சர் ரங்கசாமி இன்று தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    புதிய சட்டசபை கட்டுவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

    பணிகள் முழுமையாக முடிந்தபிறகு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்றார்.

    தமிழக எம்.பி.க்களுக்கு புதுவையில் வேலை இல்லை என்று கவர்னர் தமிழிசை விமர்சனம் செய்துள்ளாரே.? என்ற கேள்விக்கு தமிழகத்துடன் நல்ல நட்புறவு உள்ளது. தமிழகத்துடன் ஒத்து இருப்போம். இது தொடரும்.

    புதுவை மாநிலம் தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலத்தில் இருப்பதால், பழைய நட்புறவு தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் குற்றச்சாட்டு
    • மூலதன செலவு குறைந்ததால் பொருளாதார வளர்ச்சித்திட்டங்கள் ஏதும் இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு சாதனைகளின் தொடர்ச்சி, சாத்தியமாகும் வளர்ச்சி என அறிவித்து வருவது வியப்பை தருகிறது. அரசு 18 நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளது. இதில் சிலவற்றை கலாச்சார மற்றும் நல உதவிகளாக கருதலாமே தவிர, வளர்ச்சிக்கான செயல்பாடுகள் என எடுத்துக் கொள்ள முடியாது.

    இந்த அரசு வந்த பிறகு புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படவில்லை. அரசின் பொதுத்துறை நிறுவனங்களை பாழாக்கி 10 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் அவர்களின் வாழ்வா தாரத்தை சிதறடித்துள்ளது. 85 சதவீதம் உள்ள அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு தொழில்சார்ந்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை.

    பிராந்திய ஏற்றத் தாழ்வுகள் பெருகி வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறைக்கான சிறப்புக்கூறு நிதி மடைமாற்றம் செய்யப்படுகிறது. விலை வாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை. மூலதன செலவு குறைந்ததால் பொருளாதார வளர்ச்சித்திட்டங்கள் ஏதும் இல்லை.

    புதுவை அரசு உண்மையான பிரச்சினைகளை உணர்ந்து மாநில பொருளாதார நலனும் உயர பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 154 உள்ளது. இதில் 65 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
    • புதுவையில் 56 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் 9 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    புதுச்சேரி:

    புதுவையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 6 ஆயிரத்து 682 மாணவர்களும், 7 ஆயிரத்து 542 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 224 பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வு முடிவுகளை இன்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கூறியதாவது:-

    புதுவை, காரைக்காலில் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 92.67 ஆகும். கடந்த ஆண்டு 96.13 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட 3.46 சதவீதம் தேர்ச்சி வீதம் குறைந்துள்ளது.

    புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 85.38.

    இதில் புதுவை அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரம் மாணவர்கள், 7 ஆயிரத்து 182 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 182 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுவையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 85.88 சதவீதம், காரைக்காலில் 83.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 154 உள்ளது. இதில் 65 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவையில் 56 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் 9 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

    புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 53 அரசு பள்ளிகளில் புதுவை சுல்தான்பேட்டையை சேர்ந்த அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

    புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் ஒருவர், இயற்பியலில் 6 பேர், வேதியியலில் 80 பேர், உயிரியலில் 38 பேர், கம்ப்யூட்டர் சயின்சில் 132 பேர், கணிதத்தில் 8 பேர், தாவரவியலில் 6 பேர், விலங்கியலில் 4 பேர், பொருளியலில் 37 பேர், வணிகவியலில் 157 பேர், கணக்கு பதிவியலில் 138 பேர், வணிக கணிதத்தில் 39 பேர், வரலாற்றில் ஒருவர், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் 144 பேர் என மொத்தம் 791 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 மனைகளை விற்பனை செய்யாமல் தங்களது பராமரிப்பில் வைத்துக்கொண்டதாக தெரிகிறது.
    • பொது அதிகார பத்திரம் தயார் செய்திருப்பது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார் பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் ரமேஷ். இவரின் தந்தை நடராஜன் மற்றும் ஜந்தார்க்மேரி ஆகியோர் கருவடிகுப்பம் அன்னை நகரில் உள்ள நிலத்தை ஜானகிராம் என்பவரிடம் இருந்து கிரயம் பெற்றுள்ளனர்.

     பின்னர் இருவரும் அந்த இடத்தை மனை களாக பிரித்து விற்பனை செய்தனர். அதில் 2 மனைகளை விற்பனை செய்யாமல் தங்களது பராமரிப்பில் வைத்துக்கொண்டதாக தெரிகிறது.

    நடராஜன் இறந்ததால், ஐந்தார்க் மேரி இரு மனைகளையும் நடராஜன் மனைவி மீரா என்பவருக்கு பொது அதிகாரம் எழுதி கொடுத்தார்.

    மீரா பராமரிப்பில் இருந்த 2 மனைகள் மீது அவரின் மகன் நடராஜன் ரமேஷ் வில்லங்க சான்றிதழ் எடுத்து பார்த்தபோது, 3 பேர் மீரா எழுதி கொடுத்த மாதிரி போலியாக பொது அதிகார பத்திரம் தயார் செய்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து நடராஜன் ரமேஷ், ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலியான பத்திரம் தயார் செய்ததாக அப்போதைய சார்பதிவாளர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • ரூ.23 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
    • ஜிப்மர் சென்ற அவருக்கு பரிசோதனை செய்தும் வலி குறையவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை பெருமாள் கோவில் வீதியை சேர்வந்தவர் ராஜராஜேஸ்வரி. தகவல் தொழில்நுட்ப வல்லுநராக பெங்களூருவில் பணியாற்றி வந்தார். வயிற்று வலிக்கு சிகிச்சை பெற புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்குக்கு சென்றார். அங்கு அவருக்கு கர்ப்பபையில் நீர்க்கட்டி இருப்பதை கண்டறிந்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம் என டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர்.

    கடந்த 28.12.2015-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் நீர்க்கட்டிகளை அகற்றி மறுநாள் டிஸ்சார்ஜ் செய்தனர். அதன்பிறகும் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி அதிகரித்தது. மீண்டும் ஜிப்மர் சென்ற அவருக்கு பரிசோதனை செய்தும் வலி குறையவில்லை.

    அறுவை சிகிச்சை காயத்திலிருந்து மலம் வெளியேறியதால் மீண்டும் பரிசோதனை செய்தனர் . அப்போது பெருங்குடலில் ஒரு செ.மீ அளவு துவாரம் இருந்தது. இதனால் மலம் வயிற்றில் கசிந்து செப்டி சீமியா ஏற்பட்டுள்ளது.

    அறுவை சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் 2016-ம் ஆண்டு பல உறுப்புகள் செயலிழப்பு காரணமாக இறந்தார். அறுவை சிகிச்சையில் அலட்சியமாக இருந்ததால் ஒரே மகள் இறந்துவிட்டதாக மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அவரின் பெற்றோர் புகார் அளித்தனர்.

    நீதிபதி பொங்கியப்பன், சுந்தரவடிவேலு, உமாசங்கரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் அறுவை சிகிச்சையில் கவனத்துடன் செயல்படவில்லை என உறுதியானது.

    எனவே அறுவை சிகிச்சை செய்த மகளிர் மருத்துவ நிபுணரும், ஜிப்மர் ஆஸ்பத்திரியும் ராஜ ராஜே ஸ்வரியின் பெற்றோருக்கு 9 சதவீத வட்டியுடன் ரூ.22 லட்சத்து 94 ஆயிரத்து 986 இழப்பீடாக வழங்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • சிறிய தொகையை செலுத்தி விளையாடினால் பணம் இரட்டிபாக தரப்படும் என தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை லோகமுத்து மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவரின் மகள் பத்மபிரியா(25), சாப்ட்வேர் என்ஜினியர். கடந்த 10-ந் தேதி இவரின் செல்போனுக்கு அமேசான் சென்டர் பிலிப்பைன்ஸ் கிளை என்ற பெயரில் ஒரு லிங்க் வந்தது.

    அதில், சிறிய தொகையை செலுத்தி விளையாடினால் பணம் இரட்டிபாக தரப்படும் என தெரிவித்தனர்.

    சிறிய தொகை செலுத்தி பத்மபிரியா விளையாடியபோது இரட்டிப்பு பணம் வங்கியில் வரவு வைக்கப்பட்டது. இதை நம்பி அதிக பணம் செலுத்தி விளையாடினார்.

    ஆனால் இரட்டிப்பு பணம் வரவில்லை. சந்தேகமடைந் பத்மபிரியா மொத்தமாக செலுத்திய ரூ.87 ஆயிரத்தை திருப்பி அனுப்பும்படி கூறினார்.

    ஆனால் பணத்தை திருப்பி தரவில்லை. அந்த நிறுவனத்திலிருந்து பேசிய நபர் பிலிப்பைன்ஸ் நாட்டின் விதிப்படி ரூ.31 ஆயிரம் செலுத்தினால் பணத்தை திருப்பி தருவதாக கூறினார். பத்மபிரியா பணம் இல்லை என்றவுடன் அவரின் எண்ணை பிளாக் செய்துவிட்டனர்.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பத்மபிரியா முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • ஊக்கத்தொகை வழங்கும் விழா கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் நடந்தது.
    • மாணவ-மாணவிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பொது ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சாதனை படைத்த உறுப்பினர்களின் குடும்ப மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

     அதன்படி 2021-22-ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் நடந்தது.

    சங்கத் தலைவர் தமிழ்ஒளி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்த நாயுடு முன்னிலை வகித்தார்.

     விழாவில், துணை தலைவர் ராஜசேகரன் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் கல்வி உபகரணங்களை மாணவ-மாணவி களுக்கு வழங்கினார்.

    தொடர்ந்து 80 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. விழாவில் சங்கத்தின் இயக்குனர்கள் இளங்கோவன், கணேஷ், மருதாச்சலம், பிரபாகரன், அருண்குமார், ஆறுமுகம், வசந்த ராஜன், கோபி கிருஷ்ணன், வரதராஜுலு, புஷ்பசந்துரு உட்பட உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.
    • தொடர்ந்து நடந்த கவியரங்கத்தில் 42 கவிஞர்கள் பங்கேற்றுக் கவிதை வாசித்தனர்.

     புதுச்சேரி:

    புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது. கவிஞர் மு.ராஜேஷ் வரவேற்றார். புரட்சிக்கவிஞரும் உழைப்பாளரும் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாத விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் எழுத்தாளர் கோ.பாரதி தலைமை தாங்கிப் பேசினார்.

    பாபு எழுதிய செங்கழுநீர் என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலினைப் பெற்றுக்கொண்ட கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் நூலாசிரியரை வாழ்த்திப் பேசினார். வேணுகோபால் செங்கழுநீர் நூல் குறித்து ஆய்வு செய்து பேசினார்.

    நூலாசிரியர் பாபு பேசினார். தொடர்ந்து நடந்த கவியரங்கத்தில் 42 கவிஞர்கள் பங்கேற்றுக் கவிதை வாசித்தனர்.

    முடிவில் கவிஞர் மதன் நன்றி தெரிவித்தார்.

    • ஊட்டச்சத்து கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
    • மகளிர் சுய உதவி குழுவினர் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.

    புதுச்சேரி:

    கண்டமங்கலத்தில் வட்டார அளவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.

    கண்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பிரிய தர்ஷினி முருகன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சம்பந்தம் சிவக்குமார் வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்த்தி, முன்னிலை வகித்தனர்.

    வட்டார இயக்க மேலாளர் கணேசன் வர வேற்றார். ஒன்றிய துணை சேர்மன் நஜீரா பேகம் , ஊட்டச்சத்து கண்காட்சியை திறந்து வைத்து பார்வை யிட்டார்.

    கண்காட்சியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம், துணை சேர்மன் நஜீரா பேகம், வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்த்தி ஆகியோர் போட்டி நடுவர்களாக இருந்து சிறந்த குழுக்களை தேர்வு செய்து பரிசு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாஜலம் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அலமேலு, ராதிகா, கவுசல்யா, சவுமியா, ஜெயமணி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கவிதா நன்றி கூறினார்.

    • இளைஞர் பெருமன்ற மாநாட்டில் வலியுறுத்தல்
    • இளைஞர்களுக்கு வழங்க வேண்டும், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

     புதுச்சேரி:

    அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 15-வது மாநில மாநாடு திருவள்ளுவர் சாலையில் உள்ள கருணாஜோதி அரங்கத்தில் நடந்தது. மாநில துணை செயலாளர் எழிலன் தீர்மானம் வாசித்தார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் மாநட்டு கொடி ஏற்றினார். மாநில தலைவர் பெருமாள் வரவேற்றார். அகில இந்திய பொது செயலாளர் திருமலை தொடக்க உரை நிகழ்த்தினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, செயற்குழு உறுப்பினர் ஹரீஷ்பாலா முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொது செயலாளர் சேதுசெல்வம், கலை இலக்கிய பெருமன்ற மாநில தலைவர் சிவா, ரவி, பெருமாள், தசரா, அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டனர். மாநாட்டில் அரசு துறையில் காலியாக உள்ள 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொழிற்சாலைகளில் 60 சதவிகித வேலை வாய்ப்புகளை புதுவை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

    ஜிப்மர் மருத்துவமனை பணியிடங்களில் புதுவை மாநில இளைஞர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • வெளிநாடு செல்ல விரும்பும் ஆரோவில் வாசிகளை நிர்வாகத்தினர் செல்ல விடாமல் பல்வேறு வழிகளில் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
    • ஆரோவில் நிர்வாகத்தை கண்டித்தும் ஆரோவில் வாசிகளின் ஒரு தரப்பினர் விசிட்டர் சென்டர் முன்பு திரண்டனர்.

    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில்.

    இங்கு நாடு, மதம், இனம், மொழி, அரசியல் என வேறுபாடின்றி 3 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பூமி வடிவிலான மாத்திர் மந்திரியை சுற்றி, அன்னையின் கனவு திட்டமான கிரவுன் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக இடையூறாக இருந்த மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. பசுமை நிறைந்த இயற்கை வளங்களை அழிப்பதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே ஆரோவில்லில், இரு தரப்பினராக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஆரோவில் நிர்வாகத்தினர், பல்வேறு யூனிட்களில் பணியாற்றி வரும் சிலரை எந்த அறிவிப்பின்றி பணி நீக்கம் செய்வதாகவும், நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் நபர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அதே போன்று வெளிநாடு செல்ல விரும்பும் ஆரோவில் வாசிகளை நிர்வாகத்தினர் செல்ல விடாமல் பல்வேறு வழிகளில் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதை கண்டிக்கும் வகையிலும் ஆரோவில் நிர்வாகத்தை கண்டித்தும் ஆரோவில் வாசிகளின் ஒரு தரப்பினர் விசிட்டர் சென்டர் முன்பு திரண்டனர்.

    பின் அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சோலார் கிச்சன் வரை கையில் பதாகைகள் ஏந்தி ஒற்றுமை அமைதி பேரணி சென்றனர். அங்கிருந்து மீண்டும் விசிட்டர் சென்டரை வந்தடைந்தனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் மற்றும் ஆரோவில் வாசிகள் கலந்து கொண்டனர்.

    • பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி திடலில் நடந்தது.
    • தினேஷ்குமார் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார் .

    புதுச்சேரி:

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு குளோபல் அகாடமி, சுற்றுலாத்துறை, இந்திரா காந்தி தேசிய கலை மையம் இணைந்து நடத்திய ஆனந்த தாண்டவம், 2600 மாணவிகள் பங்கேற்ற உடுக்கையுடன் கூடிய பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி திடலில் நடந்தது.

    இதில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு நிகழ்ச்சி ஒருங்கிணை ப்பாளர் சங்கமம் நிறுவனர் தினேஷ்குமார் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார் .

    பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து, பாரதியார் பல்கலைக்கூட பேராசிரியர்கள் விசித்திரா, முனைவர் சாந்திபாபு, அண்ணாமலை பல்கலைக்கழக இசை துறை பேராசிரியை சின்னமனூர் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×