என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனியார் தொழிற்சாலைகளிலும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்
    X

    மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்கிய காட்சி.

    தனியார் தொழிற்சாலைகளிலும் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்

    • இளைஞர் பெருமன்ற மாநாட்டில் வலியுறுத்தல்
    • இளைஞர்களுக்கு வழங்க வேண்டும், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் 15-வது மாநில மாநாடு திருவள்ளுவர் சாலையில் உள்ள கருணாஜோதி அரங்கத்தில் நடந்தது. மாநில துணை செயலாளர் எழிலன் தீர்மானம் வாசித்தார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் மாநட்டு கொடி ஏற்றினார். மாநில தலைவர் பெருமாள் வரவேற்றார். அகில இந்திய பொது செயலாளர் திருமலை தொடக்க உரை நிகழ்த்தினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, செயற்குழு உறுப்பினர் ஹரீஷ்பாலா முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொது செயலாளர் சேதுசெல்வம், கலை இலக்கிய பெருமன்ற மாநில தலைவர் சிவா, ரவி, பெருமாள், தசரா, அந்தோணி உள்பட பலர் கலந்துகொண்டனர். மாநாட்டில் அரசு துறையில் காலியாக உள்ள 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும், தொழிற்சாலைகளில் 60 சதவிகித வேலை வாய்ப்புகளை புதுவை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

    ஜிப்மர் மருத்துவமனை பணியிடங்களில் புதுவை மாநில இளைஞர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×