என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் பெருகி வருகிறது
- முன்னாள் எம்.பி. ராமதாஸ் குற்றச்சாட்டு
- மூலதன செலவு குறைந்ததால் பொருளாதார வளர்ச்சித்திட்டங்கள் ஏதும் இல்லை.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு சாதனைகளின் தொடர்ச்சி, சாத்தியமாகும் வளர்ச்சி என அறிவித்து வருவது வியப்பை தருகிறது. அரசு 18 நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளது. இதில் சிலவற்றை கலாச்சார மற்றும் நல உதவிகளாக கருதலாமே தவிர, வளர்ச்சிக்கான செயல்பாடுகள் என எடுத்துக் கொள்ள முடியாது.
இந்த அரசு வந்த பிறகு புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படவில்லை. அரசின் பொதுத்துறை நிறுவனங்களை பாழாக்கி 10 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் அவர்களின் வாழ்வா தாரத்தை சிதறடித்துள்ளது. 85 சதவீதம் உள்ள அமைப்புசாரா தொழிலா ளர்களுக்கு தொழில்சார்ந்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை.
பிராந்திய ஏற்றத் தாழ்வுகள் பெருகி வருகிறது. ஆதிதிராவிடர் நலத்துறைக்கான சிறப்புக்கூறு நிதி மடைமாற்றம் செய்யப்படுகிறது. விலை வாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை. மூலதன செலவு குறைந்ததால் பொருளாதார வளர்ச்சித்திட்டங்கள் ஏதும் இல்லை.
புதுவை அரசு உண்மையான பிரச்சினைகளை உணர்ந்து மாநில பொருளாதார நலனும் உயர பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






