என் மலர்

  புதுச்சேரி

  பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு: புதுவையில் 92.67 சதவீதம் தேர்ச்சி
  X

  பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியீடு: புதுவையில் 92.67 சதவீதம் தேர்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 154 உள்ளது. இதில் 65 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
  • புதுவையில் 56 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் 9 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

  புதுச்சேரி:

  புதுவையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

  கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் புதுவை, காரைக்காலை சேர்ந்த 6 ஆயிரத்து 682 மாணவர்களும், 7 ஆயிரத்து 542 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 224 பேர் தேர்வு எழுதினர்.

  தேர்வு முடிவுகளை இன்று முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் கூறியதாவது:-

  புதுவை, காரைக்காலில் அனைத்து பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 92.67 ஆகும். கடந்த ஆண்டு 96.13 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட 3.46 சதவீதம் தேர்ச்சி வீதம் குறைந்துள்ளது.

  புதுவை, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 85.38.

  இதில் புதுவை அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரம் மாணவர்கள், 7 ஆயிரத்து 182 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 182 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  புதுவையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களில் 85.88 சதவீதம், காரைக்காலில் 83.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 154 உள்ளது. இதில் 65 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுவையில் 56 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. காரைக்காலில் 9 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

  புதுவை, காரைக்காலில் மொத்தம் உள்ள 53 அரசு பள்ளிகளில் புதுவை சுல்தான்பேட்டையை சேர்ந்த அரசு பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

  புதுவை, காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் ஒருவர், இயற்பியலில் 6 பேர், வேதியியலில் 80 பேர், உயிரியலில் 38 பேர், கம்ப்யூட்டர் சயின்சில் 132 பேர், கணிதத்தில் 8 பேர், தாவரவியலில் 6 பேர், விலங்கியலில் 4 பேர், பொருளியலில் 37 பேர், வணிகவியலில் 157 பேர், கணக்கு பதிவியலில் 138 பேர், வணிக கணிதத்தில் 39 பேர், வரலாற்றில் ஒருவர், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் 144 பேர் என மொத்தம் 791 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×