என் மலர்
நீங்கள் தேடியது "attacked the manager"
- புதுவை அடுத்த தமிழக பகுதியான பொம்மையார்பாளையத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.
- தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி;
கேரள மாநிலம் இடுக்கி அடுத்த மூணாறு கூடார்வளை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ராம்சிங். இவர் புதுவை அடுத்த தமிழக பகுதியான பொம்மையார்பாளை யத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே ரிசார்ட்டில் வேலை பார்த்து வந்த சோரப்பட்டு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் நண்பராக பழகி வந்துள்ளார். அப்போது அவருடன் போனில் பேசிய ஒருவர் வில்லியனூர் அடுத்த பத்துக்கண்ணு பகுதிக்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த ராம்சிங்கை 5 பேர் கட்டையால் தாக்கினர். இதில் அவருக்கு வயிறு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து ராம் சிங் வில்லியனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஸ்டுடியோ உரிமையாளர் மாணிக்கமுத்து, சட்டக் கல்லூரி மாணவர் நரேந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.






