என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
ஆன்லைன் லிங்க் மூலம் பெண்ணிடம் ரூ.1 ½ லட்சம் மோசடி
- வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரை சேர்ந்தவர் செல்வசீலன்.
- புதுவை உப்பளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.
புதுச்சேரி:
வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரை சேர்ந்தவர் செல்வசீலன். இவர் புதுவை உப்பளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாலசுபா. வீட்டிலிருந்த படியே கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை சப்பளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கு பிரபல தனியார் நிறுவன கொரியர் அலுவலகத்தில் இருந்து போன் செய்வதாக ஒரு நபர் போனில் பேசியுள்ளார். அப்போது தாங்கள் ஆர்டர் செய்த பொருள் கொரியரில் தடைப்பட்டு நிற்பதாகவும், அதற்காக நான் அனுப்பும் ஒரு ஆன்லைன் லிங்கை அழுத்தி அதில் வெறும் ரூ.2 செலுத்தினால் தங்களுக்கு பொருள் வந்து சேரும் எனவும் கூறியுள்ளனர். கொரியர் நிறுவன ஊழியர் அனுப்பிய லிங்கை பாலசுபா அழுத்தி அதன் உள்ளே சென்று ஆன்லைன் மூலம் ரூ.2 செலுத்தியுள்ளார்.
மறுநாள் பாலசுபாவின் வங்கி கணக்கில் இருந்து 3 முறை மொத்தம் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 195 அந்த லிங்க் மூலம் எடுக்கப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலசுபா அரக்கோணத்தில் உள்ள இவரது சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கியை தொடர்பு கொண்டு கேட்டார்.
பாலசுபாவின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது ஆனால் யார் எடுத்தது? என்பது குறித்து தெரியவில்லை என வங்கி அதிகாரிகள் கூறிவிட்டனர்.
இந்த ஆன்லைன் மோசடி குறித்து வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் பாலுசுபா புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.






