என் மலர்
புதுச்சேரி

ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிவகுப்பை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்த காட்சி.
ஆர்.எஸ்.எஸ் சீருடை அணிவகுப்பு
- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
- ஊர்வலம் மூலக்கடை எம்.ஜி.ஆர் சிலை, கூடப் பாக்கம் சாலை வழியாக மீண்டும் மண்டபத்தை அடைந்தது.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த கோனேரிகுப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் 2 ஆண்டு பண்பு பயிற்சி முகாம் நடந்து வருகிறது. முகாமில் தமிழகம், புதுவையை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
முகாமில் ஒரு அங்கமாக ஆர்.எஸ்.எஸ். சேவகர்களின் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. புறவழிச்சாலை ராஜா திருமண மண்டபம் அருகிலிருந்து தொடங்கிய அணிவகுப்பு ஊர்வலத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் மூலக்கடை எம்.ஜி.ஆர் சிலை, கூடப் பாக்கம் சாலை வழியாக மீண்டும் மண்டபத்தை அடைந்தது. சேவகர்கள் கம்பு, கொடி ஏந்தி சென்றனர். முகாம் தலைவர் மணிவாசகம், வரவேற்பு குழு தலைவர் அரவிந்தன், கோட்டதலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






