என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரி ஆண்டு விழா
    X

    விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரி ஆண்டு விழாவில் விழா மலரை புதுவை போலீஸ் ஐ.ஜி. சந்திரன், ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியின் டீன் டாக்டர் கொட்டூர் வெளியிட்ட போது எடுத்த படம்.

    விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரி ஆண்டு விழா

    • போலீஸ் ஐ.ஜி. சந்திரன் பங்கேற்பு
    • புதுவை போலீஸ் ஐ.ஜி. சந்திரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    புதுச்சேரி:

    விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் வேந்தர் கணேசன் மற்றும் இயக்குனர் அனுராதா கணேசன் வழிகாட்டுதலின்படி கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரி ஆண்டு விழா பெரியகாட்டுப்பாளையம் ஜனனி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இந்த ஆண்டு விழாவிற்கு புதுவை போலீஸ் ஐ.ஜி. சந்திரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    விழாவில் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் கொட்டூர் விழா மலரை வெளியிட ஐ.ஜி. சந்திரன் பெற்று கொண்டார். விழாவில் மருத்துவ கல்வி பிரிவு டீன் மகாலட்சுமி, ஆராய்ச்சி இயக்குனர் விஷ்ணு பட், இயக்குனர் ஜெய்சிங், மருத்துவ கண்காணிப்பாளர் சதீஷ் குருவில்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விநாயக மிஷன் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் சாரதா ரமேஷ் ஆண்டறிக்கையை வாசித்தார்.

    அதனைத் தொடர்ந்து சர்வதேச செவிலியர் தினம் முக்கியத்துவத்தின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். விழாவில் கடந்த ஆண்டு பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பெற்றவருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கடந்த ஒரு வார காலமாக கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    தொடர்ந்து கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவிற்கு துணை முதல்வர் டாக்டர் சசி வரவேற்று பேசினார். பேராசிரியர் டாக்டர் சங்கீதா நன்றி கூறினார். மாணவர் சங்க துணை தலைவர் அனஸ்வரா பிரகாஷ் சங்கத்தின் ஆண்டு அறிக்கையை வாசித்தனர்.

    Next Story
    ×