என் மலர்
நீங்கள் தேடியது "Omshaktisekhar's"
- நாம் அனைவரும் இணைந்து ஓ.பி.எஸ். கருத்தை வலுப்படுத்த பாடுபடுவோம்.
- ஓ.பி.எஸ் தற்போதைய அரசியல் சாதுரிய நகர்வுகள் தமிழக அரசியலையே புரட்டி போட்டு உள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் மாநில அவைத்தலைவர் மாசிலா குப்புசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் பேசியதாவது:-
ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த அளவு மக்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு உள்ளது என்பதை திருச்சி மாநாடு நிரூபித்தது. ஓ.பி.எஸ் தற்போதைய அரசியல் சாதுரிய நகர்வுகள் தமிழக அரசியலையே புரட்டி போட்டு உள்ளது.
குறிப்பாக தொண்டர்கள் இயக்கத்தை தன் வசப்படுத்த நினைக்கும் சுயநல சக்திகள் அதிர்ந்து போய் உள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெறும் அடுத்த மாநாட்டிற்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். எனவே நாம் அனைவரும் இணைந்து ஓ.பி.எஸ். கருத்தை வலுப்படுத்த பாடுபடுவோம்.
இவ்வாறு ஒம்சக்தி சேகர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஒ.பன்னீர் செல்வம் ஆதர வாளர்கள் மகேஸ்வரி, செல்வராஜ், கோ விந்தம்மாள், விஜயலட்சுமி, சதாசிவம், சங்கர் உடையார், மாநில அணி செயலாளர்கள் லட்சுமணன், வெரோனிகா, புகழ் பாரி, முருகன், விவேக் , மாநில அணி தலைவர்கள் லியோ ராஜசேகர், ராதாகிருஷ்ணன், தம்பா, புதுவை நகர செயலாளர் சேகர், தொகுதி கழக செயலாளர்கள் அப்பாவு, ஆர்.வி.ஆர். வெங்கடேசன், நாக.லோகநாதன், சுப்பி ரமணியன், கலியபெருமாள், சுந்தரமூர்த்தி,ஏம்பலம் கோவிந்தராஜ்,
காட்டுக்குப்பம் நடராஜன், ராஜ் பவன் ஐயப்பன், பாலசுப்ரமணியன், தர்மபுரி ஆனந்தன், நாகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ஞானப் பூங்கோதை, கமலா,கணபதி மோகன்தாஸ்,இந்திரா, நெல்லிதோப்பு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த சித்தா கணேசன், முனியன், இளங்கோவன், இளவரசு, பெயிண்டர் சேகர், பேச்சாளர் அயரின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






