என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    2 வயது மகனுடன் இளம்பெண் மாயம்
    X

    கோப்பு படம்.

    2 வயது மகனுடன் இளம்பெண் மாயம்

    • தாய் வீட்டிற்கு சென்று வாழுமுனி பார்த்தபோது அங்கும் அவர் வரவில்லை என்பது தெரியவந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து துர்காதேவியையும், குழந்தையையும் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் சண்முகாநகரை சேர்ந்தவர் வாழுமுனி (வயது 30) பெயிண்டர். இவரது மனைவி துர்காதேவி (வயது 23) இவர்களுக்கு தீபிகா(5) என்ற மகளும், பர்வேஸ்வரன் (2 ½) என்ற மகனும் உள்ளனர்.

    தீபிகா வாழுமுனியின் பெற்றோர் வீட்டில் வளர்ந்து வருகிறார். துர்காதேவி எப்போதும் செல்போனில் யாரு டனாவது பேசிக்கொண்டே இருப்பாராம்.

    இதனை வாழுமுனி பலமுறை கண்டித்துள்ளர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி துர்கா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு வருவதாக கூறியுள்ளார்.

    இரவு வாழுமுனி வேலையை விட்டு வீட்டிற்கு வந்த பிறகும் துர்கா வரவில்லை. இதனால் துர்காவின் தாய் வீட்டிற்கு சென்று வாழுமுனி பார்த்தபோது அங்கும் அவர் வரவில்லை என்பது தெரியவந்தது.

    தனது மகனுடன் அவர் எங்கே சென்றார் என தெரியவில்லை. இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து துர்காதேவியையும், குழந்தையையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×