என் மலர்
புதுச்சேரி
- பி.டெக் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேரலாம்.
- கல்வி தகுதியை குறிப்பிட்டு வரும் 3-ந் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி:
பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு குறிப்பிட்ட சதவீத இடங்கள் அரசு மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இவர்கள் பி.டெக் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டில் சேரலாம். புதுவை மாநில அரசு மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 426 லேட்ரல் என்ட்ரி சீட்டுகள் உள்ளது. இந்த இடங்களுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியை குறிப்பிட்டு வரும் 3-ந் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம். மாப்அப் கவுன்சிலிங்கிற்கு பிறகு இடங்கள் இருந்தால் பிற மாநில மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்புடும் என சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- புதுவையில் யார் பெரியவர்? என்பதில் ரவுடிகள் அவ்வப்போது மோதிக்கொள்வது வழக்கம்.
- கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமரன் ஆகியோர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்.
புதுவையில் யார் பெரியவர்? என்பதில் ரவுடிகள் அவ்வப்போது மோதிக்கொள்வது வழக்கம். இதுவே பழிக்குப்பழியாக மாறி கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இது போன்ற சம்பவங்களில் சர்வ சாதாரணமாக வெடிகுண்டுகளை கையாளுவது தொடர்கதையாகி உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார், அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர் வீரப்பன், தொழில் அதிபர் வேலழகன், காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் ஆகியோர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதே பாணியில் 2019-ம் ஆண்டில் வாணரப்பேட்டை ரவுடி சாணிக்குமார், காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர், அரியாங்குப்பம் பாண்டியன், முத்தியால்பேட்டை காங்கிரஸ் பிரமுகர் அன்பு ரஜினி ஆகியோரும் 2021-ம் ஆண்டில் முதலியார்பேட்டை பாம் ரவி, அவரது நண்பர் அந்தோணியும், கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமரன் ஆகியோர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
- போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை
- மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்து போலீஸ் துறை சார்பில் கார் உதிரிபாகங்கள் விற்பனை செய்வோர், பழுதுபார்ப்போர் மற்றம் போலீசார் நட்புறவு கூட்டம் நடந்தது.
போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சாலையில் வாகனங்களை பழுதுபார்க்க கூடாது.
மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
- கல்வி கட்டண விவரங்களை சென்டாக் இணைய தளத்தில் வெளியிட்டு கலந்தாய்வை நடத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாணவர்களின் சிரமத்தை உணர்ந்து இந்த கல்வி ஆண்டில் நர்சிங் படிப்பில் சேர இந்த கல்வி ஆண்டில் விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்திய நர்சிங் கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.
அதனை ஏற்று இந்திய நர்சிங் கவுன்சில் இந்த கல்வி ஆண்டில் நர்சிங் படிப்பில் சேர புதுவைக்கு விலக்கு அளித்துள்ளது. இதனை மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் பாராட்டி வர வேற்கிறது. இதற்கிடையே புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த கல்வியாண்டு மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவி ப்பாணை விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது. எனவே சென்டாக் நிர்வாகம் மருத்துவம் சார்ந்த நீட் படிப்பிற்கு அனைத்து உரிய அனுமதிகளையும் பெற்று கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை பெற சுகாதாரத்துறையும் சென்டாக் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் குறுக்கு வழியில் வெளி மாணவர்கள் சேராத வண்ணம் அவர்களின் சான்றிதழ்களை மிகுந்த கவனத்துடன் சரிபார்க்க வேண்டும்.
அதோடு மருத்துவப்ப டிப்பிற்கான கல்வி கட்டண விவரங்களை சென்டாக் இணைய தளத்தில் வெளியிட்டு கலந்தாய்வை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- இருதய செயல்திறனில் சிறிது பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.
- நோயாளி தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியை சேர்ந்த 60 வயது மூதாட்டி அடிக்கடி சுய நினைவு இல்லாமல் கீழே விழுந்து மருத்துவ சிகிச்சைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழு அவருக்கு முழு இருதய அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர்.
முழு இருதய அடைப்பு என்பது மின் தூண்டல் இருதய வெண்ட்ரிக்களை அடையாமல் இருதயம் செயல் இழந்து போவதால் இருதயம் சுருங்கி விரிவதில் குறைபாடு ஏற்பட்டு போதுமான இரத்தம் மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு சென்று அடையாமல் போகும், இதனால் சுயநினைவு இழப்பு மற்றும் மயக்கம் இறப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும்.
பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஊக்கத்தால், இருதய நிபுணர்கள் டாக்டர் அன்பரசன் மற்றும் டாக்டர் கிரண் ஆகியோர் இணைந்து இந்த நோயாளிக்கு இருதய பரிமாற்ற அமைப்பின் மின் முனையை நேரடியாக செயல்படுத்திட செயற்கை இருதய முடுக்கியை (பேஸ்மேக்கர்) நேரடியாக இருதய கடத்தி மண்டலத்தில் பொருத்தினர்.
வழக்கமாக இக்கருவி வலது பக்கத்தில் பொருத்தப்படும். இதனால் இருதய செயல்திறனில் சிறிது பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.
இக்குறையை நிவர்த்தி செய்ய நவீன சிகிச்சை முறையில் இருதய கடத்தி மண்டலத்தில் இதனை பொருத்தி பல்வேறு மருத்துவ மனைகளில் இத்தகைய சிகிச்சை முறையில் வெற்றி பெற்றுள்ளனர்.
புதுச்சேரியில் முதன்முறையாக பிம்ஸ் மருத்துவமனையில் இதனை பொருத்தி வெற்றி பெற்றுள்ளனர்.
நோயாளி தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
- நீர் தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி
- அதனைச் சாாந்த பகுதிகளில் குடிநீர் வினிேயாகம் நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை சாரம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 12 மணி முதல் 2 வரை சாரம் முழுவதும், தென்றல் நகர், வெங்கடேஸ்வரா நகர், பாலாஜி நகர், ஜெயராம் நகர், அன்னை தெரசா நகர், சின்னயம்பேட்டை, வேலன் நகர், லட்சுமி நகர், மகாத்மா நகர், சுந்தரமூர்த்தி நகர்,
திருமுடி சேதுராமன் நகர், அண்ணாமலை நகர், ஐயப்பன் நகர், வினோபா நகர், ஞானப்பிரகாசம் நகர், ஆனந்தரங்கபிள்ளை நகர், மடுவுப்பேட்டை, கைலாஷ் நகர், அண்ணல் காந்தி நகர், பழனிராஜா உடையார் தோட்டம், கிருஷ்ணா நகர், மேற்கு ஜீவா நகர், பிருந்தாவனம் மற்றும் அதனைச் சாாந்த பகுதிகளில் குடிநீர் வினிேயாகம் நிறுத்தப்படுகிறது.
- கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
- ஆதிதிராவிடர் நலதுறை இயக்குனர் இளங்கோவனை சந்தித்து நிலுவையில் உள்ள உதவித்தொகையை பயனாளிகளுக்கு விரைந்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை அரசு ஆதிதிராவிடர் நல துறை மூலம் தொடர் நோய் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை கடந்த 6 மாதங்களாக வழங்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. ஆதிதிராவிடர் நலதுறை இயக்குனர் இளங்கோவனை சந்தித்து நிலுவையில் உள்ள உதவித்தொகையை பயனாளிகளுக்கு விரைந்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் உப்பளம் தொகுதியை சேர்ந்த புதிதாக தொடர் நோய் பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணையை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இக்கோரிக்கையை ஆதிதிராவிடர் நலதுறை இயக்குனர் இளங்கோவன் ஏற்று கொண்டார். அதன்படி உப்பளம் தொகுதியை சேர்ந்த தொடர் நோய் பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணையை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜீ, தி.மு.க மூத்த நிர்வாகி ரவி, மீனவர் அணி விநாயகம், கிளை செயலாளர்கள் காத்தலிங்கம், சங்கரநாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- வழக்கு பதிவு செய்து நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.
- வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி முதலியார் பேட்டை அனிதா நகர் தியாகு முதலியார் வீதி, ஹவுஸ்சிங் போர்டு குடியிருப்பை சேர்ந்தவர் ராஜி (வயது 32).
லாரி டிரைவரான ராஜி. குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வந்தார்.
தேங்காய்திட்டில் வசித்து வந்த ராஜிவின் உறவினர் ஒருவர் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.
இறுதி ஊர்வலத்தில் ராஜி பட்டாசு வெடித்தபடி சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வேல்ராம்பட்டை சேர்ந்த நிர்மல், ஹரி ஆகியோர் வெடிக்க பட்டாசு கேட்டனர். அப்போது அவர் நீங்கள் சின்ன பசங்க... உங்களுக்கு பட்டாசு வெடிக்க தெரியாது என்று கூறியுள்ளார்.
இதனால் ராஜிக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ராஜி அவர்களை தாக்கியுள்ளார்.
அவர்கள் ராஜிவை தாக்க முயற்சித்த போது உறவினர்கள் தடுத்து சமாதானம் செய்தனர். இதனால் இறுதி ஊர்வலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது தங்களுக்குள் பேசி தீர்த்து கொள்வதாக இருதரப்பும் கூறியதால் போலீசார் திரும்பி சென்றனர்.
இறுதி சடங்கு முடிந்த பின்பு ராஜி வீட்டிற்கு வந்தார். அவரை பின் தொடர்ந்து நிர்மலும், ஹரியும் வந்தனர். ராஜியின் வீட்டை அடையாளம் தெரிந்த பின்னர் அவர்கள் திரும்பி சென்றனர்.
இரவு 8.30 மணிக்கு அருகில் உள்ள ஓட்டலுக்கு ராஜி சென்று டிபன் வாங்கி கொண்டு வீட்டின் மாடிக்கு ராஜி சென்றார்.
அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த நிர்மலும், ஹரியும் தாங்கள் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து ராஜி மீது வீசினர்.
அவரது முதுகில் வெடிகுண்டு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். வெடிகுண்டு பயங்கர சத்ததுடன் வெடித்ததில் அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
அங்கு ராஜி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு நின்ற கொலையாளிகள் 2 பேரும் பொதுமக்கள் வருவதை பார்த்ததும் பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ராஜி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். நாட்டு வெடிகுண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.
ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வீசி டிரைவர் கொலை செய்யப் பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கவர்னர் தமிழிசை கிராமப்புற பகுதியான கூனிச்சம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
- மாணவர்களுக்கு வகுப்பறை போல கழிவறையும் சுத்தமாக மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
புதுச்சேரி:
கவர்னர் தமிழிசை கிராமப்புற பகுதியான கூனிச்சம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது 'நான் யார்' என மாணவர்களிடம் கேட்டபோது கவர்னர் என்று சில மாணவர்கள் கூறினர். வேறு சிலர் "தமிழிசை" என்றும் இன்னும் சிலர் "தமிழிசை சவுந்தரராஜன்" என்றும் கூறினார்கள். இதற்காக மாணவர்களை தட்டிக் கொடுத்து அவர் வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் கவர்னர் தமிழிசை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாணவர்களுக்கு வகுப்பறை போல கழிவறையும் சுத்தமாக மேம்படுத்தப்பட்ட வகையில் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இதற்காக சமூக பொறுப்புணர்வு திட்டத்திற்கு தனியார் மூலம் கழிவறைகளை புதுப்பித்து தரவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
நடிகர் விஜய் மாணவர்களை சந்திப்பது குறித்தும் தேச தலைவர்களின் வாழ்க்கை வரலாறை அவர் படிக்க சொன்னது குறித்தும் கேட்டதற்கு கவர்னர் தமிழிசை பதில் அளிக்காமல் தவிர்த்து புறப்பட்டு சென்றார்.
ஏற்கனவே, கவர்னர் தமிழிசை நகர பகுதியில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்ய சென்றபோது நிருபர்கள் விஜய் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்காமல் புறப்பட்டார். 2-வது முறையாக நடிகர் விஜய் குறித்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு நாளை பிறந்தநாள்.
- பேனரில் மேடையில் விஜய் மைக் முன் நின்று பேசுவது போல் படம் இடம் பெற்றுள்ளது.
புதுச்சேரி:
ரசிர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு நாளை பிறந்தநாள். பிறந்தநாளையொட்டி புதுவையில் வாழ்த்து சுவரொட்டிகள், பல்வேறு விதமான பேனர்கள் வைப்பது வழக்கம். நடுக்கடலில் பேனர், ஆழ்கடல் நீரினுள் பேனர் என ரசிகர்கள் பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.
தற்போது புதிய பஸ் நிலையம் அருகே வைத்துள்ள பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பேனரில் மேடையில் விஜய் மைக் முன் நின்று பேசுவது போல் படம் இடம் பெற்றுள்ளது. பின்புறத்தில் தமிழக சட்டமன்ற கட்டிடம் உள்ளது போல் அமைத்துள்ளனர். மைக் போடியம் ஸ்டாண்டில் ச.ஜோசப் விஜய், தமிழக முதலமைச்சர் என குறிப்பிட்டுள்ளனர். இந்த பேனரை உருளையன்பேட்டையை சேர்ந்த ஆளப்பிறந்தவன் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் வைத்துள்ளனர்.
பேனரில் 2026-ல் சட்டமன்றத்தில் உங்களின் குரல் "தமிழக மக்களின் உரிமை குரல்"என ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர். அதோடு ரசிகர்கள் மேக்கிங் வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
பின்னால் பின்னணி குரலில் தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு யார் வரவேண்டும்? என கேள்வி கேட்கப்படுகிறது. இதற்கு தளபதி விஜய்.. தளபதி விஜய்.. என பல குரல்கள் எழுப்பும் வகையில் ஆடியோ பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
- மணலை தடுக்க தெற்கு பகுதியில் திட்டமிட்டப்படி பணிகள் நடக்கவேண்டும்.
- புதுவை கடற்கரையில் தலைமைச்செயலகம் உள்ள வடக்கு கடற்கரை பகுதியில் பணிகள் முடிந்தாலும், தென்மேற்கு பகுதியில் திட்டமிட்டப்படி பணிகள் முடிக்கவில்லை.
புதுச்சேரி:
புதுவையில் தலைமை செயலகம் எதிரே கடற்கரையில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கும் பணி கடந்த 2017-ம் ஆண்டு மார்ச்சில் ரூ.20 கோடியில் தொடங்கப்பட்டது.
கடலில் 200 மீட்டர் நீளத்துக்கு கற்கள் கொட்டப்பட்டன. அதையடுத்து மணல் பரப்பு இப்பகுதியில் உருவானது. 2017-ம் ஆண்டு ஆகஸ்ட்
10-ம் தேதி கடற்கரையில் மணல் பரப்பு உருவாகும் வகையில் முக்கோண அமைப்பு உருவாக்கப் பட்டது. பெரிய இரும்பு தகடுகள் முக்கோணம் போல் வடிவமைக் கப்பட்டது.
கடலில் பள்ளம் தோண்டி அதன் மீது கற்கள் கொட்டி இரும்பினால் உருவான முக்கோண அமைப்பு வைக்கப்பட்டது. இது கடலின் மட்டத்துக்கு இணையாக இருந்தது. இந்த முக்கோண அமைப்பு கடலின் சீற்றத்தை தடுத்து வலு குறைத்ததால் கரையில் மணல் குவிந்தது. இந்த பணி 2019-ல் முடிவடைந்தது.
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த மணல் பரப்பில் இறங்கி விளையாடி மகிழ்கின்றனர். இந்த மணல்பரப்பு கடல் சீற்றம் ஏற்பட்டால் மாயமாகும். புதுவை கடற்கரையில் தலைமைச்செயலகம் உள்ள வடக்கு கடற்கரை பகுதியில் பணிகள் முடிந்தாலும், தென்மேற்கு பகுதியில் திட்டமிட்டப்படி பணிகள் முடிக்கவில்லை.
இதனால் தெற்கு பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இப்பகுதி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உள்ளது. இத்திட்டத்தில் பணிகள் நடந்தால்தான் கடல் அரிப்பு குறைந்து, மணல்பரப்பு உருவாகும்.
இதுகுறித்து தேசியகடல் தொழில்நுட்ப இயக்குநர் ரமணமூர்த்தி கூறும்போது, வடகிழக்கு பருவமழையின் போது வடக்கிலிருந்து வரும் மணலை தடுக்க தெற்கு பகுதியில் திட்டமிட்டப்படி பணிகள் நடக்கவேண்டும். தலைமைச்செயலகம் அருகே மணல்பரப்பு உருவாக்கியதுபோல முக்கோணப்பரப்பு உருவாக்கி பணிகள் நடந்தால் துறைமுகத்துக்கு திரும்பும் மணலின் அளவு குறையும். கடற்கரையில் மணல்பரப்பு உருவாகும். இந்த திட்டம் நிறைவடைந்தால் அனைத்து பருவகாலங்களிலும் புதுவை கடற்கரையில் மணல்பரப்பு நீடித்து இருக்கும் என தெரிவித்தார்.
இதையடுத்து ஸ்மார் சிட்டி திட்டத்தில் தெற்கு பகுதியில் மணல் பரப்பு உருவாக்க திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன் அறிக்கையை புதுவை அரசிடம் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் சமர்பித்துள்ளது.
இதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் இத்திட்டம் செயல்பாட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
- 67 மாணவர்கள் 450-க்கு மேலும் மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
- மாணவர்கள் தொடர்ந்து பல வருடங்களாக மாநில அளவில் முதலிடம் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
ஆதித்யா பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் சாதனை படைத்துள்ளனர். நீட் தேர்வில் புதுவை ஆதித்யா பள்ளி மாணவர்கள் 228 பேர் பங்கேற்றனர்.
இந்த தே ர்வில் மாணவர் அசோக் குமார் 720-க்கு 700 மதிப் பெ ண் பெற்று அகில இந்திய அளவில் 287-வது இடத்தையும், புதுவை மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்தார். மாணவர் ஜெயசூர்யா , ஹிசாம் ஆகியோர் 695, ஹெர் ஷிணி கார்த்திகேயன் 677, ஸ்ரீசிவா, புவனா ஆகியோர் 670, சாய்
மனோ ஜ் 654, பூவினியா 653, மானசா 648, சுஹானா 645, சவுமியா 638, வெற்றிவே ல் 637, ஹர்ஷணி 635, ஆகாஷ் 633, சுபாஷிணி 614, மதுபாலா 611, அதிதி சுவாதி 609, அனிஷா 609 என மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
8 மாணவர்கள் 650-க்கு மேலும், 19 மாணவர்கள் 600-க்கு மேலும், 34 மாணவர்கள் 550-க்கு மேலும், 49 மாணவர்கள் 500-க்கு மேலும், 67 மாணவர்கள் 450-க்கு மேலும் மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களை பள்ளியின் நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்ய நாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதா பூனமல்லி, பள்ளி முதல்வர், ஆலன் கல்விக்குழும பொறுப்பாளர்கள் பாராட்டி கவுரவித்தனர் .
ஆதித்யா பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பல வருடங்களாக மாநில அளவில் முதலிடம் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அகில இந்திய அளவில் நடைபெறும் மருத்துவம், என்ஜினீயரிங் நுழைவுத் தேர்வுக்கு ஒருகிணைந்த பயிற்சி வகுப்புகள்
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆதித்யா கல்வி குழுமத்தில் சிறப்பாக கற்பிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.






