என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது.
    • பொதுக்களத்தில் உள்ளவை தவிர, எந்தவொரு கண்டுபிடிப்பும் அல்லது புதுமையும் காப்புரிமை பெறலாம் என்பது பற்றி விளக்கினார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரியில் ஆசிரியர்கள் , ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவுசார் சொத்து உரிமைகள் கருத்தரங்கு நடைபெற்றது.

    இந்த கருத்தரங்குக்கு கல்லூரி டீன் டாக்டர் ராகேஷ் சேகல் தலைமை தாங்கினார். சென்னை இன்டெலிபட் காப்புரிமை தீர்வுகள் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் தீபா, மருத்துவத் தொழிலில் அறிவுசார் சொத்து உரிமைகள் பெற எவ்வாறு தாக்கல் செய்வது, பொதுக்களத்தில் உள்ளவை தவிர, எந்தவொரு கண்டுபிடிப்பும் அல்லது புதுமையும் காப்புரிமை பெறலாம் என்பது பற்றி விளக்கினார்.

    மேலும் பாரம்பரியமாக அறியப்பட்ட முறைகள் அதனை சார்ந்த கண்டுபிடிப்பு காப்புரிமை பெறாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

    கருத்தரங்கில் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் ஆலோசகர் டா க்டர் விஷ்ணு பட், உயர் மருத்துவ துறை டீன் மகா லட்சுமி, உதவி பேராசிரியர்கள் ஆர்த்தி, தியாகராஜன் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்திரா இண்டேன் சர்வீஸ் பரசுராமன் தலைமையில் நடைபெற்றது.
    • மாணவிகளுக்கு செயல் விளக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்தும் செய்து காட்டினார்

    புதுச்சேரி:

    இந்திரா இன்டேன் கியாஸ் நிறுவனம் சார்பில், இந்திராகாந்தி அரசு கலைக்கல்லூரி மாணவர்க ளுக்கான சமையல் குறித்தும், திரவ எரிவாயு பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு செயல் விளக்க முகாம் நடைபெற்றது.

    இந்திரா இண்டேன் சர்வீஸ் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு செயல் விளக்கத்தில் புதுவை எல்.பி.ஜி. கியாஸ் சேல்ஸ் உதவி மேலாளர் சம்பத் குமார் ரெட்டி மாணவ-மாணவிகளுக்கு செயல் விளக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்தும் செய்து காட்டினார் எல்.பி.ஜி ஆப்ரேஷன் அதிகாரி ராஜேஷ் மற்றும் டாக்டர் சந்தோஷ் , ,நுகர்வோர் அமைப்பாளர் திலகவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பிஸ்கெட் சாப்பிட்டவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
    • வடமலை தனது வக்கீல் சரவணன் மூலம் புதுவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அருகேயுள்ள ஆண்டியார்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வடமலை (48). பால் வியாபாரி.

    இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் தனது சகோதரர் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு அப்பகுதியில் உள்ள கடையில் பிரபல நிறுவனத்தின் 5 பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கினார்.

    அதைப் பிரித்து சாப்பிட்டபோது பிஸ்கெட் முழுவதும் தலைமுடி இருந்துள்ளது. இதனால் பிறந்தநாள் விழா பாதிக்கப்பட்டது. அதை சாப்பிட்டவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறப்பட்டது. பிஸ்கெட்டில் தலைமுடி இருந்தது குறித்து கடை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை.

    இதை தொடர்ந்து வடமலை தனது வக்கீல் சரவணன் மூலம் புதுவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில் கடந்த 5-ந் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

    தீர்ப்பின் நகல் வழக்கு தொடுத்த வடமலைக்கு நேற்று வக்கீல் சரவணன் மூலம் அளிக்கப்பட்டது. அதன்படி பிஸ்கெட்டில் தலைமுடி இருந்தநிலையில், அதை வாங்கிய வடமலைக்கு சம்பந்தப்பட்ட பிஸ்கெட் நிறுவனம் ரூ.15 ஆயிரம் இழப்பீடும், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்கவும் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி முத்துவேல் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் வடமலைக்கு ரூ.20 மதிப்புள்ள பிஸ்கெட் பாக்கெட்டும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் அவதி
    • அதிகாரிகள் பார்வையிட்டு பால் விற்பனையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை இந்திரா நகர் எதிரில் பாண்லே நிறுவனத்தின் மூலம் பால் பொருட்கள் விற்பனை நிலையம் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

    இங்கு பொது மக்களுக்கு தேவையான பால், நெய், தயிர், பாதாம்பால், பால்கோவா, மோர், ரொட்டி கேக்குகள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்து வந்தனர்.

    தேசிய நெடுஞ்சாலையில் இருந்த இந்த விற்பனை நிலையத்தில் தினந்தோறும் அதிகப்படியான வருவாயை கொடுத்து அதிக அளவில் பால் பொருட்கள் விற்பனையும் ஆனது.

    இந்நிலையில் 4 வழி சாலை அமைக்கும் பணிக்காக பாண்லே விற்பனை நிலையம் சாலையின் ஓரத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டது.

    அதன் பின்பு கடந்த 6 மாத காலமாக ஒரு சில காரணத்தினால் பாண்லே விற்பனை நிலையம் முழுவதுமாக மூடப்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், பால் மொத்த விற்பனை யாளர்கள், டீக்கடைக் காரர்கள், ஓட்டல் கடைக்காரர்கள், உள்ளிட் டோர் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.

    தற்போது மூடி உள்ள இந்த பாண்லே பால் விற்பனை நிலையத்தை அதிகாரிகள் பார்வையிட்டு பால் விற்பனையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது.
    • அதிர்ச்சி அடைந்த அவர்கள் பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-கடலூர் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியார் மதுபான பார் உள்ளது.

    இங்கு மதுபிரியர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் 2 பீர் வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் 2 பேர் பீர் குடிக்க சென்றனர்.

    அவர்கள் பணம் கொடுத்து 2 பீர் பாட்டில்கள் வாங்கினர். அவர்களுக்கு சலுகையாக மேலும் ஒரு பீர் பாட்டில் வழங்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் 2 பீர் பாட்டில்களை திறந்து குடித்தனர். அதன் பின் சலுகையில் வாங்கிய 3-வது பீரை குடிப்பதற்காக பாட்டிலை கையில் எடுத்தனர். அப்போது பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர்கள் சரியான பதில் தெரிவிக்காமல் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். பீர் பாட்டி லில் காகிதம் கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • சிவலிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத சிவசைலநாதர் கோவில் இருந்து வருகிறது.
    • சிறப்பு யாகம் நடத்தி மூலவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அடுத்த மணவெளி சிவலிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி சமேத சிவசைலநாதர் கோவில் இருந்து வருகிறது.

    இக்கோவிலில் 59-ஆம் ஆண்டு பிரமோற்சவ விழா. கடந்த 18-ந் தேதி இரவு கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 19-ந் தேதி இரவு இந்திர விமான வாகனத்தில் சாமிகள் வீதி உலா நடைபெற்றது. 20-ந் தேதி இரவு அன்ன வாகனத்தில் சாமிகள் வீதி உலா நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று 21-ந் தேதி இரவு ராஜ அலங்காரத்தில் சிவசைலநாதர் சாமிகள் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக சிறப்பு யாகம் நடத்தி மூலவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை அய்யனார் கோவில் வீதி மற்றும் துளசிங்கம் நகர் குடிருப்பு பொதுமக்கள் செய்திருந்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும் 25-ந் தேதி மாலை 6 மணியளவில் திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது.

    முக்கிய நிகழ்வு வரும் 26-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற உள்ளது.

    • ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் 9-வது உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • வேல்முருகன் யோகா கலையில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம், மணவெளி, ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் 9-வது உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    விழாவில் பதஞ்சலி யோகா மையத்தின் இயக்குனர்வேல்முருகன் யோகா கலையில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார். யோகா உடல், மனநலத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி பள்ளி முதல்வர் பெர்லின் ஜெயக்குமார் எடுத்து ரைத்தார்.

    யோகா கலையை நடைமுறை வாழ்வில் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை பள்ளி ஆசிரியை மாலா விளக்கிக் கூறினார்.

    விழா வினை ஆசிரியர்கள் பரமேஸ்வரி, ஆலிஸ், மணிமேகலை, சிவகங்கா, ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் பள்ளி ஆசிரியை லீமா ரோஸ் நன்றி கூறினார்.

    • கிருத்திகை தினத்தையொட்டி பூஜை அறையில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றியது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, தவளக்குப்பம், மூகாம்பிகை நகர், 5-ஆவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.

    இவரது மனைவி பத்மசுந்தரி இவர்களுக்கு பாலமுருகன்.  கவிராஜ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் பத்மசுந்தரி சம்பவத்தன்று கிருத்திகை தினத்தையொட்டி  பூஜை அறையில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை யில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பத்மசுந்தரி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது கணவர் கிருஷ்ண மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்து நிறுவனத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
    • எம்.ஆர்.எப். தொழிற் சாலை ஆரம்பித்த நாளில் இருந்து தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் செயல்படுகிறது.

    புதுச்சேரி

    புதுவை எம்.ஆர்.எப். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் 6-வது ஊதிய ஒப்பந்தத்திற்கான தொழிலாளர்களின் பொது கோரிக்கைகள் வெளியிடும் விழா ஏரிப்பாக்கம் கூட்டுரோட்டில் உள்ள லட்சுமி திருமண நிலையத்தில் நடந்தது.

    எம்.ஆர்.எப். தொழிற் சங்க பொதுச்செயலாளர் ஐய்யனார் வரவேற்றார். கூட்டத்திற்கு தொ.மு.ச. கவுரவ தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    எம்.ஆர்.எப். தொழிற்சாலை ஆரம்பித்த நாளில் இருந்து தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் செயல்படுகிறது. தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் ஒரு அரணாக இருந்து வரும் இயக்கம் தி.மு.க. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தொழிலாளர்கள் கையில்தான் உள்ளது. எம்.ஆர்.எப். தொழிற்சாலை உலக அளவில் சிறந்து விளங்க தொழிலாளர்களே காரணம். தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்து நிறுவனத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

    அப்போதுதான் தொழி லாளர்களின் உரிமையை நிர்வாகத்திடம் கேட்டுப்பெற முடியும். பல பிரிவுகளாக செயல்படும் தொழி லாளர்களை ஒன்றிணைத்து 6-வது ஊதிய ஒப்பந்தத்தை நிர்வாகத்திடம் கேட்டுப்பெற வேண்டும். புதுவை மாநிலத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பு அரணாக என்றும் திமுக துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தொ.மு.ச. சட்ட ஆலோசகர் சம்பத் எம்.எல்.ஏ, தொ.மு.ச. மாநில தலைவர் அண்ணா அடைக்கலம், எம்.ஆர்.எப். தொழிற்சங்க தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பொதுச் செயலாளர் சண்முகம், தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் ராஜகாந்தம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சண். குமரவேல்,

    தொகுதி செயலாளர்கள் சக்திவேல், அசோக் பாபு, தொ.மு.ச. நிர்வாகிகள் காயாரோகணம், சிவக்குமார், மிஷேல், கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கர், எம்.ஆர்.எப். தொழிலாளர் முன்னேற்றச் சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பாலமுருகன், மாரிமுத்து, சத்யராஜ், சிவக்கொழுந்து, ஜோஷ்வா, மணிவண்ணன், பிரபாகரன், ஸ்பின்கோ ராஜாராமன், எம்.பி.டி.எல். ரவி மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொ.மு.ச. பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    • 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
    • 25 ஆயிரம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை வைத்திக்குப்பம் பகுதி வளர்ச்சியை கருதி 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டடுக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி, 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    ஹட்கோ, அம்ருத் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் நீர் உந்து குழாய்கள், விநியோக குழாய்கள், மோட்டார் பம்புசெட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்தேக்க தொட்டியின் மூலம் வைத்திக்குப்பம், குருசுகுப்பம் சார்ந்த பகுதிகளை சேர்ந்த 25 ஆயிரம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    ரூ.12 கோடியே 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி இன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். விழாவிற்கு அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார்.

    பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் சுப்பாராவ், இளநிலை பொறியாளர் லோகநாதன் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். 30 ஆண்டு தொலைநோக்கு திட்டத்தோடு இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

    • இளைஞர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பின்னர் இளைஞர்கள் சிலர் முதல அமைச்சர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

    புதுச்சேரி, ஜூன்.22-

    புதுவை அரசு யூடிசி பணிக்காக 116 இடங்களை நிரப்ப ஜூலை 23ந் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இந்த பணிக்கு 46 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்துக்கு 386 பேர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள எல்.டி.சி., யூ.டி.சி. உட்பட அனைத்து பணியிடங்களையும் நேரடி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்.

    பணி நியமன விதிகளின்படி உதவியாளர் பணியிடத்தில் 20 சதவீதம் நேரடி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை பட்டதாரி இளைஞர்கள் இன்று ஊர்வலம் நடத்தினர். சுதேசி மில் அருகே தொடங்கிய ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சென்றது. ஆம்பூர் சாலை அருகே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    அங்கே இளைஞர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். பின்னர் இளைஞர்கள் சிலர் முதல அமைச்சர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.

    • ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெற்றது.
    • மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சிகள் வழங்கிய யோகாசன ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை ஆதித்யா வித்யாஷ்ராம் பள்ளியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 3 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 3,300-க்கும் மேற்பட்டமாணவர்கள் பங்கேற்றனர்.

    இதில் 10 மாணவிகள் செய்த ரிதமிக் யோகா நடனம், உடல்நலம் மற்றும் உடற்பயிற்சியின் தன்மைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

    3 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்வில் 17 வகை யோகாசனம், 3 வகை பிராணாயாமம், கபாளபதி, தியான முத்திரை மற்றும் சங்கல்பா பயிற்சிகளை செய்து காண்பித்து தங்களது திறமைகளை் வெளிப்படுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஆதித்யா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீ வித்ய நாராயணா அறக்கட்டளை நிர்வாகி அனுதா பூனமல்லி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.

    முடிவில் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சிகள் வழங்கிய யோகாசன ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர், இயக்குனர்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×