என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்
பட்டதாரி இளைஞர்கள் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்
- இளைஞர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- பின்னர் இளைஞர்கள் சிலர் முதல அமைச்சர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.
புதுச்சேரி, ஜூன்.22-
புதுவை அரசு யூடிசி பணிக்காக 116 இடங்களை நிரப்ப ஜூலை 23ந் தேதி தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பணிக்கு 46 ஆயிரம் இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்துக்கு 386 பேர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் புதுவை அரசு துறைகளில் காலியாக உள்ள எல்.டி.சி., யூ.டி.சி. உட்பட அனைத்து பணியிடங்களையும் நேரடி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்.
பணி நியமன விதிகளின்படி உதவியாளர் பணியிடத்தில் 20 சதவீதம் நேரடி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை பட்டதாரி இளைஞர்கள் இன்று ஊர்வலம் நடத்தினர். சுதேசி மில் அருகே தொடங்கிய ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சென்றது. ஆம்பூர் சாலை அருகே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அங்கே இளைஞர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். பின்னர் இளைஞர்கள் சிலர் முதல அமைச்சர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.






