என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு தி.மு.க. என்றும் அரணாக நிற்கும்
    X

    நிகழ்ச்சியில் சிவா எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம்.

    தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு தி.மு.க. என்றும் அரணாக நிற்கும்

    • தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்து நிறுவனத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
    • எம்.ஆர்.எப். தொழிற் சாலை ஆரம்பித்த நாளில் இருந்து தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் செயல்படுகிறது.

    புதுச்சேரி

    புதுவை எம்.ஆர்.எப். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் 6-வது ஊதிய ஒப்பந்தத்திற்கான தொழிலாளர்களின் பொது கோரிக்கைகள் வெளியிடும் விழா ஏரிப்பாக்கம் கூட்டுரோட்டில் உள்ள லட்சுமி திருமண நிலையத்தில் நடந்தது.

    எம்.ஆர்.எப். தொழிற் சங்க பொதுச்செயலாளர் ஐய்யனார் வரவேற்றார். கூட்டத்திற்கு தொ.மு.ச. கவுரவ தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    எம்.ஆர்.எப். தொழிற்சாலை ஆரம்பித்த நாளில் இருந்து தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் செயல்படுகிறது. தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் ஒரு அரணாக இருந்து வரும் இயக்கம் தி.மு.க. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தொழிலாளர்கள் கையில்தான் உள்ளது. எம்.ஆர்.எப். தொழிற்சாலை உலக அளவில் சிறந்து விளங்க தொழிலாளர்களே காரணம். தொழிலாளர்கள் ஒற்றுமையாக இருந்து நிறுவனத்தை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

    அப்போதுதான் தொழி லாளர்களின் உரிமையை நிர்வாகத்திடம் கேட்டுப்பெற முடியும். பல பிரிவுகளாக செயல்படும் தொழி லாளர்களை ஒன்றிணைத்து 6-வது ஊதிய ஒப்பந்தத்தை நிர்வாகத்திடம் கேட்டுப்பெற வேண்டும். புதுவை மாநிலத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பு அரணாக என்றும் திமுக துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தொ.மு.ச. சட்ட ஆலோசகர் சம்பத் எம்.எல்.ஏ, தொ.மு.ச. மாநில தலைவர் அண்ணா அடைக்கலம், எம்.ஆர்.எப். தொழிற்சங்க தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பொதுச் செயலாளர் சண்முகம், தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் ராஜகாந்தம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சண். குமரவேல்,

    தொகுதி செயலாளர்கள் சக்திவேல், அசோக் பாபு, தொ.மு.ச. நிர்வாகிகள் காயாரோகணம், சிவக்குமார், மிஷேல், கிருஷ்ணமூர்த்தி, பாஸ்கர், எம்.ஆர்.எப். தொழிலாளர் முன்னேற்றச் சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பாலமுருகன், மாரிமுத்து, சத்யராஜ், சிவக்கொழுந்து, ஜோஷ்வா, மணிவண்ணன், பிரபாகரன், ஸ்பின்கோ ராஜாராமன், எம்.பி.டி.எல். ரவி மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். தொ.மு.ச. பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.

    Next Story
    ×