என் மலர்
புதுச்சேரி
- உலக சாதனை நிகழ்ச்சி ஜிப்மர் அருகில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் நடத்தியது.
- நோயாளிகளுக்கு நர்சுகள் டாக்டர்களுடன் இணைந்து சரியான மருத்துவம் தர வேண்டும்,
புதுச்சேரி:
புதுவை அகில இந்திய பயிற்சிபெற்ற செவிலியர்கள் சங்கம் மற்றும் ஐன்ஸ்டீன் உலக சாதனை நிறுவனம் இணைந்து நோயாளிகளை எவ்வாறு பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக சாதனை நிகழ்ச்சி ஜிப்மர் அருகில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் நடத்தியது.
இதில் புதுவையில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் நர்சுகள் மற்றும் டாக்டர்கள் 300-க்கும் மேற்பட்டோர். ஒன்றிணைந்து மனித சங்கிலியாக நர்சுகள் தலையில் அணியும் தொப்பி வடிவில் உலக சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையில் வரும் நோயாளிகளுக்கு நர்சுகள் டாக்டர்களுடன் இணைந்து சரியான மருத்துவம் தர வேண்டும், உரிய மருந்துகள் கொடுக்க வேண்டும், கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டும், முடியாமல் வரும் நோயாளிகளை கூட இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும், உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கையில் பதாகைகளை ஏந்தியும், பலூன்களை அசைத்தும் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர்.
- மர்ம ஆசாமி யாரோ ரெயில் பெட்டியில் இருந்த தீயணைப்பான் கருவியை திறந்துவிட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு மும்பைக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் இரவு 7.15 மணிக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. பயணிகள் இறங்கியவுடன் ரெயில் பெட்டிகளை ரெயில்வே ஊழியர்கள் பூட்டினர். அந்த ரெயில் 3-வது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது.
இதனை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக கருதி அங்கு விரைந்து சென்றனர்.
இதனை பார்த்த பயணிகளும் பதட்டம் அடைந்து அலறி அடித்து ஓடினர். உடனே தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர்.
ரெயில் பெட்டி அருகில் சென்று பார்த்த போது, தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைப்பதற்கு ரெயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் தீயணைப்பான் கருவியில் இருந்து புகை வெளியேறியது தெரியவந்தது. இதனால் ரெயில்வே ஊழியர்கள் நிம்மதியடைந்தனர்.
மர்ம ஆசாமி யாரோ ரெயில் பெட்டியில் இருந்த தீயணைப்பான் கருவியை திறந்துவிட்டுள்ளனர். இதனால் தான் அதிலிருந்து புகை வந்துள்ளது என்பது தெரியவந்தது. தீயணைப்பான் கருவியை திறந்து விட்ட ஆசாமி யார்? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் பெட்டியில் இருந்து திடீரென்று புகை வந்த சம்பவத்தால் புதுவை ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கடந்த மாதம் 17-ந் தேதி முதலில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
- அனைத்து டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் மூடக்கப்பட்டுவிட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி பிருந்தாவனம் பகுதியை சேர்ந்தவர் சையது சலாம் (வயது 36). இவர், வெளிநாட்டில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 3 மாதங்களாக புதுச்சேரியில் தங்கியிருந்தார். அப்போது இணைய வழி மோசடிக்காரர்கள் அவரை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்டு, நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அன்றைய தினமே உங்களுக்கு 30 சதவீத லாபம் கொடுப்போம் என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பிய அவர், கடந்த மாதம் 17-ந் தேதி முதலில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்தவுடன் அவர்கள் சில யூடியூப் லிங்க்குகளை அனுப்பி அதில் அவரை சப்ஸ்கிரைப் செய்ய கூறியுள்ளனர்.
அவர் செய்து முடித்தவுடன் ரூ.300 சேர்த்து ரூ.1,300 அவரது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளனர்.
அன்றைய தினமே மீண்டும் ரூ.6 ஆயிரம் முதலீடு செய்தார். அவர்கள் சொன்ன டாஸ்கை முடித்தவுடன் ரூ.1,800 சேர்த்து ரூ.7.800 அவரது வங்கிக்கு வந்தது. அதன் கும்பல் அவரிடம், நீங்கள் எங்களுடைய பிரிமியம் கஸ்டமர் ஆகி விட்டதால் உங்களுடைய வங்கி கணக்கு இனி உங்கள் கம்ப்யூட்டரிலேயே தெரியும் எனவும், பணம் நேரடியாக உங்களுக்கு வராது என்றும் கூறியுள்ளனர்.
இதனை நம்பி கடந்த 15 நாட்களில் மட்டும் ரூ.38 லட்சத்தை இணைய வழி மோசடிக்காரர்கள் கூறிய பல்வேறு வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
அதன்பின், அவரது வங்கிக்கணக்கில் ரூ.52 லட்சம் பணம் இருப்பதாககாட்டியுள்ளது. மேலும், ஒரு இணையதளத்திலும் அவரை முதலீடு செய்யக்கூறினர். இறுதியாக, மேற்படி பணத்தை சையது சலாம் எடுக்க முயன்றார்.
அப்போது, அவருடைய வங்கி கணக்கில் பணம் இல்லை என காட்டியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
மேலும், மோசடிக்காரர்களையும் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை தொடர்பு கொண்ட அனைத்து டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் மூடக்கப்பட்டுவிட்டது.
இதனையடுத்து சலாம், புதுவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- சாலை மறியல் என விரும்பத்தகாத ஒழுங்கீன செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுவது தவறான ஒன்றாகும்.
- கல்வித்துறை அமைச்சர் உறுதியான நிலைபாட்டை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
ஆசிரி யர்கள் பணியிட மாறுதலில் பேச்சு வார்த்தைக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவுக்கு உட்படமாட்டோம் என ஆசிரியர்கள் எதிர்ப்பை பல்வேறு விதங்களில் தெரிவித்து வருகிறார்கள். கல்வித்துறை, முதல்-அமைச்சர் வீடு முற்றுகை, சாலை மறியல் என விரும்பத்தகாத ஒழுங்கீன செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுவது தவறான ஒன்றாகும்.
அரசு துறையில் பணியில் சேருபவர்கள் யாராக இருந்தாலும் பணியிட மாற்றத்திற்கு உட்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகை படியை சம அளவில் அனைத்து இடங்களுக்கும் வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.
நகரப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் பணி செய்து வருகிறார்கள். 3 ஆண்டுக்கு மேலாக ஒரே இடத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், போலீசார், ஐ.பி.எஸ், எஸ்.பி., ஆய்வாளர்கள், மருத்துவர்கள் பணி செய்ய முடியாத நிலை இருக்கும் போது, ஆசிரியர்கள் விவகாரத்தில் இதுவரை அரசு பாராமுகமாக இருந்தது தவறான ஒன்றாகும்.
எனவே காரைக்கா லிலும், புதுவை கிராம்ப் பகுதிகளிலும் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு உடனடியாக பணியிட மாற்றத்தை பாரபட்சமற்ற முறையில் அரசு அமல்படுத்திட வேண்டும். இதில் கல்வித்துறை அமைச்சர் உறுதியான நிலைபாட்டை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஒரு நாளை க்கு 30 டன் தக்காளி புதுவைக்கு இறக்கு மதி ஆகும். கடந்த சில நாட்க ளுக்கு முன்னர் அது 20 டன்னாக குறைந்தது.
- தக்காளியின் விளைச்சல் மிக அதிகமாக இருந்தது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்தது.
புதுச்சேரி:
புதுவைக்கு கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி ஆகிறது.
சில நாட்களுக்கு முன்பு இந்த இரு மாநி லங்களிலும் தக்காளியின் விளைச்சல் மிக அதிகமாக இருந்தது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்தது.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த தக்காளியை சாலைகளில் கொட்டி சென்ற அவல நிலையும் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் தக்காளி விளைவிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
மேலும் அதிக வெயில் காரணமாகவும் தாக்காளி விளைச்சல் பாதிக்கப் பட்டது. இதனி டை யே கர்நா டகா மற்றம் ஆந்திர மாநி லங்க ளில் இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் குறைவாக இருந்தது. அதனால் புதுவைக்கு வரக்கூடிய தக்காளியின் அளவும் குறை ந்தது. ஒரு நாளை க்கு 30 டன் தக்காளி புதுவைக்கு இறக்கு மதி ஆகும். கடந்த சில நாட்க ளுக்கு முன்னர் அது 20 டன்னாக குறைந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் காய்கறியின் வரத்து குறைவாக இருக்கும். இதனால் விலை அதிகமாக இருந்தது மொத்த விற்பனை கடைகளில ்ரூ 90 நகரப்பகுதி, கிராமப்ப குதிகளில் ரூ.100, சில கடைகளில் ரூ120 க்கும் விற்பனையானது.
இதனால் இல்லத்தரசிகள் பாதிக்கப்பட்டனர்.
- அங்காளன் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார்
- இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ,வின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
புதுச்சேரி:
திருபுவனை அருகே உள்ள திருபுவனை பாளையம் பகுதியில் அப்பகுதி மக்களின் குடிநீர் பற்றாக்குறை போக்கிடும் வகையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை சுகாதாரக் கோட்டத்தின் கீழ் 2 கோடியே 90 லட்சத்து 64 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு 2.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் கீழ்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்படுகிறது.
இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ அங்காளன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், உதவி பொறியாளர் பீனாராணி இளநிலை பொறியாளர் சுதர்சனம் மண்ணாடிபட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன் ஜல் ஜீவன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் இளநிலை பொறியாளர் பாஸ்கர் மற்றும் எம்.எல்.ஏ,வின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
- மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்துள்ள தாகவும், ஆதலால் சில இடங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
- நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பரங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுவையில் நேற்றிரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளில் விழுந்தது. சில இடங்களில் மரங்களின் கிளைகள் விழுந்தது. சில இடங்களில் பேனர்கள், கட்டவுட்டுகள் பறந்து சாலைகளில் கிடந்தன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் பொதுப்பணி துறையின் அதிகாரிகளின் அவசர கூட்டம் சட்டப்பேரவையில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் பங்கெற்ற அதிகாரிகள் புதுவை நகரின் சூறைக்காற்றினால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து, கிளைகள் உடைத்து பல்வேறு சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர். மேலும், சில இடங்களில் விளம்பர தட்டிகள், மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்துள்ள தாகவும், ஆதலால் சில இடங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அமைச்சர் லட்சுமி நாராயணன், வனத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பொதுப்பணித்துறை யினர் ஆங்காங்கே முறிந்த கிளைகளையும் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்ய உத்தரவிட்டார்.
மேலும், வனத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பரங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து பெரும்பாலான இடங்களில், மரங்கள் அப்புறப்ப டுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.மேலும், மீன்சார தடை ஏற்பட்டுள்ள இடங்களில் போர்க்கால அடிப்படையில் மின்சா ரத்தை வழங்கவும் உத்தரவிட்டார். மேலும் கட்டிடங்கள் மேல் விழுந்த விளம்பர போர்டுகள் போன்றவற்றை இன்றே அகற்றவும் உத்தரவிட்டார். கூட்டத்தில், பொதுப்பணித்துறையின் அனைத்து கண்காணிப்பு பொறி யாளர்களும், செயற்பொறி யாளர்களும் கலந்து கொண்டனர்.
- ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள 70 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
- பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுவை சந்தை புதுக்குப்பம் பகுதியில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வீடூர் வாய்க்கால் பகுதியில் 4 பேர் சந்தேகத்து இடமாக நின்றிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி சோதனை செய்தனர்.
இதில் அவர்களிடம் 18 பாக்கெட்டுகளில் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள 70 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் எறையூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (23), மதிவாணன் (38), மயிலம் பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன்(22), மாரிமுத்து (24) என்பதும் இவர்கள் பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்க ளிடம் இருந்து கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள் 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபரையும் மடக்கி பிடித்தனர்.
- 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே 3 வாலிபர்கள் மது குடித்து விட்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களிடம் தகராறு செய்து ரகளையில் ஈடுபடுவதாக நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபரையும் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் வீராணம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (27), பண்டசோழநல்லூர் அறிவாளன் (23) மற்றும் கரையாம்புத்தூரை சேர்ந்த ராஜ்குமார் (31) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாஸ்கர் என்ற தட்சணாமூர்த்தி, முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி:
உப்பளம் நேதாஜி விளையாட்டு கழகம் சார்பில் மாநில அளவிலான பெத்தாங் விளையாட்டு போட்டி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள மைதானத்தில் 2 நாட்கள் நடைபெறுகிறது.
இப்போட்டியை உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார். அரியாங்குப்பம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாஸ்கர் என்ற தட்சணாமூர்த்தி, முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் நேதாஜி நகர் பெரியபாளையத்தம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் நேதாஜி விளையாட்டு கழக நிர்வாகிகள் தி.மு.க.ஆதிதிராவிட துணை அமைப்பாளர் தங்கவேலு நேதாஜி நகர் தி.மு.க. கிளை செயலாளர்கள் காத்தலிங்கம், ராகேஷ், மற்றும் செழியன், மோகன், பாலாஜி, இசை, பிரதீப், ராஜீ, முத்து, வசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வேலை வாய்ப்பு மையத்தின் செயல்பாடுகள் மற்றும் கல்லூரியில் வழங்கப்படும் பயிற்சி பற்றி கூறினர்.
- கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வருமான டாக்டர் வி.எஸ்.கே .வெங்கடாசலபதி வரவேற்று பேசினார்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.
மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை த்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் டி.ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வருமான டாக்டர் வி.எஸ்.கே .வெங்கடாசலபதி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் டி.சி.எஸ். நிறுவன அதிகாரி ஜெய்சங்கர், புதுவை பல்கலைக் கழக உயிர்தொழில் நுட்பத்துறை பேராசிரியர் அருள் ஆகியோர் வளாக தேர்வில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தலைவர் கைலாசம் மற்றும் மதுசூதனன் ஆகியோர் வேலை வாய்ப்பு மையத்தின் செயல்பாடுகள் மற்றும் கல்லூரியில் வழங்கப்படும் பயிற்சி பற்றி கூறினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், கல்லூரி ஆராய்ச்சி துறை டீன் வேல்முருகன், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன் , அலைட் ஹெல்த் சயின்ஸ் டீன் கோபால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை டீன் முகம்மது யாசின், சட்டக் கல்வித்துறை டீன் சந்திரசேகர், பிசியோ தெரபி டீன் சிதம்பரம், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கலை அறிவியல் கல்லூரியின் டீன் முத்துலட்சுமி நன்றி கூறினார்.
- பஸ்களில் தானியங்கி கதவுகள், வழித்தடங்களை தெரிந்து கொள்ள ஜி.பிஎஸ். மற்றும் குளிர்சாதன வசதி உள்ளது.
- 41 சொகுசு இருக்கைகள் கொண்ட இந்த பஸ்சில் முன்பதிவு வசதிக்கு தனி செயலி உள்ளது.
புதுச்சேரி:
சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த பேட்டரி வாகனங்களுக்கு மத்திய அரசு ஊக்கமளித்து வருகிறது.
இந்தநிலையில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு கடற்கரை (இ.சி.ஆர்.) சாலை வழியாக முதல்முறையாக மின்சார பஸ் சேவையை தனியார் நிறுவனம் தொடங்கி உள்ளது.
புதுச்சேரி பஸ் நிலையம் மறைமலையடிகள் சாலையில் இருந்து தினமும் காலை 7, மாலை 4, இரவு 11.30, அதிகாலை 2 மணி என சென்னைக்கு இந்த பஸ் இயக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில் சென்னை மதுரவாயல், கோயம்பேடு வழியாக காலை 6, காலை 7, பிற்பகல் 2, மாலை 4, இரவு 7, இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி வருகிறது.
ஒரு நபருக்கு கட்டணம் ரூ.380 ஆகும். 3 மணி நேரத்திற்குள் நிர்ணயித்த இடத்தை சென்றடையும் வகையில் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 300 கிலோ மீட்டர் வரை இயக்க முடியும். இந்த பஸ்களில் தானியங்கி கதவுகள், வழித்தடங்களை தெரிந்து கொள்ள ஜி.பிஎஸ். மற்றும் குளிர்சாதன வசதி உள்ளது. மேலும் 6 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு டிரைவர் மற்றும் பயணிகளை தலைமை இடத்தில் இருந்து கண்காணிக்கப்படுகிறார்கள்.
41 சொகுசு இருக்கைகள் கொண்ட இந்த பஸ்சில் முன்பதிவு வசதிக்கு தனி செயலி உள்ளது. அடுத்த கட்டமாக புதுச்சேரியில் இருந்து திருப்பதி, பெங்களூருவுக்கும் மின்சார பஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.






