என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடமாற்றம்-அ.தி.மு.க. வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடமாற்றம்-அ.தி.மு.க. வலியுறுத்தல்

    • சாலை மறியல் என விரும்பத்தகாத ஒழுங்கீன செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுவது தவறான ஒன்றாகும்.
    • கல்வித்துறை அமைச்சர் உறுதியான நிலைபாட்டை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    ஆசிரி யர்கள் பணியிட மாறுதலில் பேச்சு வார்த்தைக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவுக்கு உட்படமாட்டோம் என ஆசிரியர்கள் எதிர்ப்பை பல்வேறு விதங்களில் தெரிவித்து வருகிறார்கள். கல்வித்துறை, முதல்-அமைச்சர் வீடு முற்றுகை, சாலை மறியல் என விரும்பத்தகாத ஒழுங்கீன செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுவது தவறான ஒன்றாகும்.

    அரசு துறையில் பணியில் சேருபவர்கள் யாராக இருந்தாலும் பணியிட மாற்றத்திற்கு உட்பட வேண்டும். ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகை படியை சம அளவில் அனைத்து இடங்களுக்கும் வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

    நகரப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் பணி செய்து வருகிறார்கள். 3 ஆண்டுக்கு மேலாக ஒரே இடத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், போலீசார், ஐ.பி.எஸ், எஸ்.பி., ஆய்வாளர்கள், மருத்துவர்கள் பணி செய்ய முடியாத நிலை இருக்கும் போது, ஆசிரியர்கள் விவகாரத்தில் இதுவரை அரசு பாராமுகமாக இருந்தது தவறான ஒன்றாகும்.

    எனவே காரைக்கா லிலும், புதுவை கிராம்ப் பகுதிகளிலும் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு உடனடியாக பணியிட மாற்றத்தை பாரபட்சமற்ற முறையில் அரசு அமல்படுத்திட வேண்டும். இதில் கல்வித்துறை அமைச்சர் உறுதியான நிலைபாட்டை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×