புதுச்சேரியில் நிறுத்தப்பட்டிருந்த மும்பை ரெயிலில் புகை வந்ததால் பரபரப்பு

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர்.மர்ம ஆசாமி யாரோ ரெயில் பெட்டியில் இருந்த தீயணைப்பான் கருவியை திறந்துவிட்டுள்ளனர்.
ரெயில் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில்.
ரெயில் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில்.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரியில் இருந்து வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், புதன்கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு மும்பைக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் இரவு 7.15 மணிக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. பயணிகள் இறங்கியவுடன் ரெயில் பெட்டிகளை ரெயில்வே ஊழியர்கள் பூட்டினர். அந்த ரெயில் 3-வது நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது.

இதனை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டதாக கருதி அங்கு விரைந்து சென்றனர்.

இதனை பார்த்த பயணிகளும் பதட்டம் அடைந்து அலறி அடித்து ஓடினர். உடனே தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்து வந்தனர்.

ரெயில் பெட்டி அருகில் சென்று பார்த்த போது, தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைப்பதற்கு ரெயில் பெட்டிகளில் பொருத்தப்பட்டு இருக்கும் தீயணைப்பான் கருவியில் இருந்து புகை வெளியேறியது தெரியவந்தது. இதனால் ரெயில்வே ஊழியர்கள் நிம்மதியடைந்தனர்.

மர்ம ஆசாமி யாரோ ரெயில் பெட்டியில் இருந்த தீயணைப்பான் கருவியை திறந்துவிட்டுள்ளனர். இதனால் தான் அதிலிருந்து புகை வந்துள்ளது என்பது தெரியவந்தது. தீயணைப்பான் கருவியை திறந்து விட்ட ஆசாமி யார்? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் பெட்டியில் இருந்து திடீரென்று புகை வந்த சம்பவத்தால் புதுவை ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com