என் மலர்
புதுச்சேரி

மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய காட்சி.
மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
- வேலை வாய்ப்பு மையத்தின் செயல்பாடுகள் மற்றும் கல்லூரியில் வழங்கப்படும் பயிற்சி பற்றி கூறினர்.
- கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வருமான டாக்டர் வி.எஸ்.கே .வெங்கடாசலபதி வரவேற்று பேசினார்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.
மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை த்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் டி.ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வருமான டாக்டர் வி.எஸ்.கே .வெங்கடாசலபதி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் டி.சி.எஸ். நிறுவன அதிகாரி ஜெய்சங்கர், புதுவை பல்கலைக் கழக உயிர்தொழில் நுட்பத்துறை பேராசிரியர் அருள் ஆகியோர் வளாக தேர்வில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தலைவர் கைலாசம் மற்றும் மதுசூதனன் ஆகியோர் வேலை வாய்ப்பு மையத்தின் செயல்பாடுகள் மற்றும் கல்லூரியில் வழங்கப்படும் பயிற்சி பற்றி கூறினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், கல்லூரி ஆராய்ச்சி துறை டீன் வேல்முருகன், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன் , அலைட் ஹெல்த் சயின்ஸ் டீன் கோபால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை டீன் முகம்மது யாசின், சட்டக் கல்வித்துறை டீன் சந்திரசேகர், பிசியோ தெரபி டீன் சிதம்பரம், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கலை அறிவியல் கல்லூரியின் டீன் முத்துலட்சுமி நன்றி கூறினார்.






