என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 4 பேர் ஜெயிலில் அடைப்பு
    X

    கஞ்சா விற்ற வாலிபர்களையும் அவர்களை கைது செய்த போலீசாரையும் படத்தில் காணலாம்.

    மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 4 பேர் ஜெயிலில் அடைப்பு

    • ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள 70 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
    • பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை சந்தை புதுக்குப்பம் பகுதியில் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வீடூர் வாய்க்கால் பகுதியில் 4 பேர் சந்தேகத்து இடமாக நின்றிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி சோதனை செய்தனர்.

    இதில் அவர்களிடம் 18 பாக்கெட்டுகளில் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள 70 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் எறையூர் பகுதியைச் சேர்ந்த முருகன் (23), மதிவாணன் (38), மயிலம் பகுதியைச் சேர்ந்த சக்தி முருகன்(22), மாரிமுத்து (24) என்பதும் இவர்கள் பள்ளி- கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்க ளிடம் இருந்து கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள் 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×