என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • விரிவுரையாளர்களுக்கு நடைபெற இருந்த கலந்தாய்வும் தேதியும் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
    • ஆசிரியர் பணியிடங்களை 2 மாதங்களில் நிரப்ப முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

    புதுச்சேரி:

    ஆசிரியர் பணியிட கலந்தாய்வு கொள்கையை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள். பேச்சுவார்த்தையில் தலைமை ஆசிரியர்களுக்கு திங்கட்கிழமை நடைபெற இருந்த கலந்தாய்வு மற்றும் அதனைத் தொடர்ந்து விரிவுரையாளர்களுக்கு நடைபெற இருந்த கலந்தாய்வும் தேதியும் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை 2 மாதங்களில் நிரப்ப முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

    இதனால் போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட்டனர்.

    • கவர்னர் தமிழிசை பேச்சு
    • சாமானியர்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டு மக்களுக்கு பலன் தருகிறது.

    புதுச்சேரி:

    ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரித்துறையின் சார்பில் 6-வது ஜி.எஸ்.டி. தின விழா கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.

    விழாவை கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அமைக்சர் லட்சுமி நாராயணன், ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரித்துறையின் தலைமை ஆணையர் பத்மஸ்ரீ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரி வசூலின் சராசரி மத்திய அரசை விட புதுவையில் அதிகமாகவே இருக்கிறது. தலைமை ஆணையர் பத்மஸ்ரீ கடந்த வருடத்தை விட ரூ.100 கோடி அதிகமாகவே வரி பெற்று தந்திருக்கிறார். ஜி.எஸ்.டி. முதலில் அமல்படுத்திய போது பிரச்சினைக்குரியதாக பார்க்கப்பட்டது.

    ஜி.எஸ்.டி. தொடங்கிய போது கடுமையானதாக பார்க்கபட்டாலும்   6 ஆண்டுகளை தாண்டி வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது.

    சாதாரண குடும்பங்களுக்கு ஜி.எஸ்.டி. மிகவும் உதவிகரமாக இருக்கிறது. சாமானியர்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டு மக்களுக்கு பலன் தருகிறது.

    ஜி.எஸ்.டி. வரியானது மக்களுக்கு மிகப்பெரும் சுமையாக இருப்பதாய் தொடர்ந்து கட்டமைக்கப்படுகிறது. ஆனால் இது பெரும்பாலான நாடுகளால் பின்பற்றப்பட்டு வரும் முறையாகும்.

    சரியான நேரத்தில் பிரதமர் மோடி பொருளாதார வல்லுனர்களுடன் இணைந்து ஜி.எஸ்.டி. யை இந்தியாவிற்கு கொண்டு வந்தார்.

    ஜி.எஸ்.டி. மிகப்பெரிய பொருளாதார புரட்சி.எல்லோருக்கும் இது பலன் தந்து கொண்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. யானது மக்களுக்கும் தொழில் முனைவோருக்கும் சமுதாயத்திற்கும் நன்மை தரும் வகையில் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

    சாமானியனின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் அனைத்து மாநிலங்களும் முன்னேற்ற மடையவும் ஜி.எஸ்.டி. மிகப்பெரும் பங்கை வகிக்கிறது.

    இவ்வாறு கவர்னர் தெரிவித்தார்.

    • மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பாண்மையை குழிதோண்டி புதைத்து உள்ளது வேதனைக்குரியதாகும்.
    • புத்துயிர் பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- –

    புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை செயல்படுத்திட போதிய நிதியை ஒதுக்காமலும், காலியாக உள்ள பேராசிரி யர்கள் பணியிடங்களை நிரப்பாமலும் மெத்தனமாக அரசு செயல்பட்டிருப்பது மாணவர்களின் ஆராய்ச்சி மனப்பாண்மையை குழிதோண்டி புதைத்து உள்ளது வேதனைக்குரியதாகும்.

    இதுகுறித்து அரசின் கவனத்திற்கு பல தரப்பினரும் கொண்டு வந்தும் அரசு இதனை கண்டுகொள்ளவில்லை.

    பல அறக்கட்டளைகள் நிறுவப்பட்டு அதன் வாயிலாக ஆய்வுச் சொற்பொழிவுகளும், அதனையொட்டி ஏராளமான நூல்களும் வெளியிட்டு புகழ்பெற்ற இந்த நிறுவனத்தின் தற்போதைய கவலைக்கிடமான போக்கை நீக்கி மீண்டும் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புத்துயிர் பெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு சிவா அறிக்கையில் கூறியுள்ளார்.

    • கவர்னர் தமிழிசை பங்கேற்பு
    • சேவையினைப் பாராட்டி அமைச்சர்கள் சாய்.ஜெ. சரவணன், லட்சுமி நாராயணன் ஆகியோர் விருது வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த 2 நாட்கள் பாரம்பரிய மற்றும் மரபுசார் மருத்துவ பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. டாக்டர் முகேஷ் தலைமையில் மருத்துவர்கள் ஸ்ரீவித்யா, மோகன், உதயசங்கர், வெங்கடேசன், சௌந்தர்யா, ஹரிஹரசுதன் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினரின் முயற்சியாலும், தமிழகம், புதுச்சேரி தி சுசான்லி குழுமத்தின் சேர்மேனும், பாண்டிச்சேரி சித்தா, யுனானி, ஹோமியோபதி. ஆயுர்வேத டாக்டர்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் நிறுவனருமான சுசான்லி டாக்டர் சி.ஏ.ரவி மற்றும் கோசிபா, ராசு ஆலோசனைபடி நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில், கவர்னர் தமிழிசை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், லட்சுமி நாராயணன், சாய்.ஜெ.சரவணன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார்,முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார். புதுச்சேரி ஆயுஸ் இயக்குனர் டாக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

    மை வீத்ரி ஏட்ஸ் நிறுவ னத்தின் வழிகாட்டியும். சித்தவா ஹெர்பல்ஸ்-புட்ஸ் நிறுவனத்தின் நிறு வனரும், உரிமையாளருமான டாக்டர் விஜயராகவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவரது சேவையினைப் பாராட்டி அமைச்சர்கள் சாய்.ஜெ. சரவணன், லட்சுமி நாராயணன் ஆகியோர் விருது வழங்கினர்.

    டாக்டர் சி.ஏ.ரவிக்கு ஆயுஸ் இயக்குனர் டாக்டர் ஸ்ரீதரன் விருது வழங்கினர். முகேஷ் பொதுச்சேவையினையும். பாரம்பரிய மருத்துவ பாதுகாப்பிற்காக அவரின் செயல்பாட்டினை பாராட்டி விருது வழங்கப்பட்டது.

    மாநாட்டின் சிறப்பு மலரினை கவர்னர் தமிழிசை வெளியிட மை சித்துவா ஹெர்பல்ஸ்-புட்ஸ் வீத்ரி ஏட்ஸ் நிறுவனத்தின் வழிகாட்டியுமான டாக்டர் விஜயராகவ் பெற்று கொண்டார்.

    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
    • ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோசத்துடன் வடம் பிடித்து திருத்தேரை இழுத்து மூலநாதரை வணங்கி சென்றனர்.

    புதுச்சேரி:

    பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் பிரமோற்சவ விழா கடந்த 23-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து தினமும்  அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடைபெற்று இரவில் வண்ண விளக்குகளால் சாமி வீதி உலாவும் நடந்து வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.

    கவர்னர் தமிழிசை சவுந்த ரராஜன், செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். இதில் இந்து அறநிலை நிலைய துறை ஆணையர்

    சிவசங்கரன், தாசில்தார் பிரித்விராஜ் மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். பாகூரில் முக்கிய வீதிகள் வழியே தேர் சென்று மாலையில் தேர் மீண்டும் கோவிலை வந்தடைகிறது.

    தேரோட்டத்தின்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய என்ற பக்தி கோசத்துடன் வடம் பிடித்து திருத்தேரை இழுத்து மூலநாதரை வணங்கி சென்றனர்.

    இதற்கிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமி, முன்னாள் அமைச்சர் தியாகராஜன் ஆகியோர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பாகூர் பகுதியில் விழா நடத்துவதில் இரு கோஷ்டியாக இருந்து வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை இருந்து வந்தது. இதனால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கழிவுநீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
    • முள்ளோடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவியது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமாக பாகூர் கொம்யூன் உள்ளது.

    50-க்கும் மேற்பட்ட கிராமங்கள், நகரங்கள் என இந்த கொம்யூனில் உள்ளது. அதே சமயம் புதுவை மாநிலத்தில் வளர்ந்து வரும் கொம்யூனாக பாகூர் கொம்யூன் உள்ளது.

    கொரானா தொற்றுக்குப் பிறகு, கடந்த 2022-ம் ஆண்டு முதல் பாகூர் கொம்யூனில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியது. பாகூர் கொம்யூனில் உள்ள கிருமாம்பாக்கத்தில் 10-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து கரையாம்புத்தூர் பகுதிகளிலும், பின்னர் முள்ளோடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பரவியது. பின்னர் அரங்கனூர் பகுதியில் பரவியது.

    அவ்வாறு டெங்கு காய்ச்சல் பரவும் போது மட்டும் கொசு ஒழிப்பு, ஆங்காங்கே தேங்கியுள்ள நீரை அகற்றுவது, டெங்கு தொடர்பான விழிப்புணர்வுகளை மக்களிடையே கொண்டு செல்வது போன்ற பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபடுவார்கள். பின்னர் அவர்களின் தினசரி பணிக்கு சென்று விடுவது வழக்கம்.

    குறிப்பாக குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று கொசு மருந்து தெளிக்க ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் தினமும் ஒவ்வொரு கிராமமாக சென்று பொது இடங்கள், கழிவுநீர் தேங்கியுள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை

    இந்நிலையில் தற்போது பாகூர் கொம்யூனுக்குட்பட்ட காட்டுக்குப்பம் கன்னியக்கோவில் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

    சுமார் 10-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 100-ம் மேற்பட்டோர் வீடுகளிலேயே சிகிச்சை பெறுகின்றனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக 3 மாதத்திற்கு ஒருமுறை பாகூர் கொம்யூனில் ஒரு பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இது நாள் வரையில் உயிரிழக்கவில்லை என்பதால் புதுவை அரசும், சுகாதாரத் துறையும் அலட்சி யமாக இருந்து வருகிறது.

    எனவே பாகூர் கொம்யூனில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டு ப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை களை சுகாதாரத் துறையினர் எடுக்க வேண்டுமென்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்செல்ல மறுத்ததால் விபரீதம்
    • மோட்டார் சைக்கிளில் சாராயக்கடைக்கு சென்று மது குடித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் கோட்டைமேடு ராகவ செட்டியார் தெருவை சேர்ந்தவர் சோமு (வயது 44) கட்டிட தொழிலாளி இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.

    சோமுவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் தினமும் வேலை முடிந்து இரவு வீராம்பட்டினம் சாராயக்கடைக்கு சென்று மது அருந்து வது வழக்கம்.

    அதுபோல்  மோட்டார் சைக்கிளில் சாராயக்கடைக்கு சென்று மது குடித்தார். பின்னர் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

    அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சோமுவிடம் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்செல்லும் படி கூறினார். ஆனால் அதற்கு சோமு மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் திட்டினார்.மேலும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சோமுவை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயடைந்த சோமு புதுவை அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து சோமுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற வாலிபரை தேடிவரு கிறார்கள்.

    • புதிய டி.ஜி.பி. எச்சரிக்கை
    • 20 லட்சம் வாகனங்கள் ஓடுவதால் போக்குவரத்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவையின் புதிய டி.ஜி.பியாக சீனிவாஸ் பதவியேற்றார். இதன்பின் மாநில சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் ஏ.டி.ஜி.பி ஆனந்தமோகன், சீனியர் எஸ்.பி நாராசைதன்யா, எஸ்.பிக்கள் ஜிந்தா கோதண்டராமன், மாறன், மோகன்குமார், பக்தவச்சலம், பாஸ்கர், வீரவல்லவன், இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்துகொண்டனர். காரைக்கால், மாகி, ஏனாம் போலீசார் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்றனர்.

    டி.ஜி.பி. புதுவையில் பல ஆண்டுக்கு முன்பிருந்த அதே சாலைகள் தான் தற்போதும் உள்ளது. 20 லட்சம் வாகனங்கள் ஓடுவதால் போக்குவரத்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

    கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும். கஞ்சா விற்கும் கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கும் போலீசாருக்கு குறைந்தபட்ச தண்டனையாகவே டிஸ்மிஸ்தான் இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

    • கோட்டக்குப்பம் அருகே பதட்டம்
    • மீனவர்களுக்கு வியாபார ரீதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தை அடுத்த தந்திராயங்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் படகை நிறுத்தி மீன்பிடி தொழிலை செய்து வந்தனர்.

    இந்நிலையில் பக்கத்து மீனவ கிராமமான சின்னமுதலியார்சாவடி மீனவ மக்கள் தங்களுடைய கிராமத்தில் மண்ணரிப்பு ஏற்படுவதால் படகை தந்திராயன்குப்பம் கிராமத்தில் நிறுத்தி வந்தனர்.

    இதற்கிடையே சின்ன முதலியார் சாவடி மீனவர்கள் படகை தந்திராயன்குப்பம் பகுதியில் நிறுத்துவதால் அப்பகுதி மீனவர்களுக்கு வியாபார ரீதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    எனவே தற்போது சின்ன முதலியார் சாவடி மீனவர் கிராமத்தில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்கும் நிலையில் அவர்களது படகை அவர்களது கிராமத்திற்கு கொண்டு செல்லும்படி தந்திராயன்குப்பம் மீனவ மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதனால் இரு கிராம மீனவ மக்களிடையே சிறு சிறு மோதல் இருந்து வந்தது.

    இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என தந்திராயன்குப்பம் மீனவர்கள் பஞ்சாயத்து சார்பில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மீன்வ ளத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    ஆனால் இப் பிரச்சனைக்கு முடிவு தெரியாததால் கடந்த 4 நாட்களாக தந்திராயன் குப்பம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது எதிர்ப்பை காட்டி வந்தனர்.

    திடீரென இன்று காலை தீக்குளிக்கும் போராட்டமும் சாலை மறியல் போராட்டமும் நடத்தப் போவதாக தந்திராய ன்குப்பம் மீனவர்கள் அறிவித்திருந்தனர். அங்கு கோட்டகுப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுனில் கோட்டகுப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு தீயணைப்பு வாகனம் வரவழைக்க ப்பட்டது.

    இதனால் கோட்டகுப்பம் கிழக்கு கடற்கரைசாலை சாலையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. கோசங்கள் போட்டபடி சாலை மறியலில் ஈடுபட முயன்றவ ர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவா ர்த்தைக்கு அழைத்தனர்.

    அதில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிர மணியன் பேச்சுவா ர்த்தை யில் கலந்து கொண்டார். அப்போது நடந்த பேச்சு வார்த்தையில் தந்திராயன் குப்பம் மீனவ பகுதியில் நிறுத்தி வைக்கப்ப ட்டிருக்கும் சின்ன முதலியார் சாவடி கிராமத்தைச் சேர்ந்த மீன்பிடி படகுகளை ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் எடுக்கச் சொல்வதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    ஆனால் தந்திராயங்கு ப்பம் மீனவ பஞ்சாயத்தினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடனடியாக அனைத்து படகுகளையும் போலீஸ் பாதுகாப்போடு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    ஒருவழியாக அதிகாரிகளின் வாக்குறு தியை ஏற்றுக்கொண்ட தந்திராயன்குப்பம் மீனவர்கள் கலைந்து சென்றனர். இந்த பிரச்சினையால் தந்திராயன்குப்பம் மற்றும் சின்னமுதலியார் சாவடி மீனவ கிராமங்களில் தொடர்ந்து பதட்டம் நீடிப்பதால் அங்கு போலீ சார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    • கவர்னர் தமிழிசை தகவல்
    • பல வரிகளை ஒன்றிணைத்து ஜி.எஸ்.டி.யாக மாற்றப் பட்டுள்ளது. இதில் குடும்ப உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:

    மருத்துவர்களுக்கு மருத்துவர் தின வாழ்த்து க்களை தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து உயிர்களை காப்பாற்றுகின்றனர். இது அவர்களுக்கு நன்றி செலுத்தும் நாள். கொரோனா காலத்தில் பலர் உயிரிழந் துள்ளனர். அவர்களின் தியாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுவை அரசு மருத்துவமனையில் இன்னும் பல புதுமைகள் வர உள்ளது. குஜராத்தில் பிரதமரின் டயாலிசிஸ் சிகிச்சை வெற்றிகரமாக செயல்படுகிறது. இது விரைவில் புதுவைக்கும் வர உள்ளது.

    எல்லா மருத்துவமனை களிலும் 10 படுக்கை கொண்ட அதி நவீன அவசர சிகிச்சை பிரிவு கொண்டு வரப்பட உள்ளது.

    அனைத்து துறைகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காசநோய் இல்லாத புதுவையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண் பார்வையற்ற நிலை வரக் கூடாது என ஒளி படைத்த புதுவை என்ற திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கண் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

    புதுவையில் மருத்துவ திருவிழா நடத்தினோம். கிராமங்களிலும் சுகாதாரத்துறை மருத்துவ திருவிழா நடத்த உள்ளது. இன்று ஜிஎஸ்டி தினம். ஜி.எஸ்.டி.யால் வரி உயர்ந்துள்ளது போல மாய தோற்றம் உள்ளது. பல வரிகளை ஒன்றிணைத்து ஜி.எஸ்.டி.யாக மாற்றப் பட்டுள்ளது. இதில் குடும்ப உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    குடும்பத்தில் சாதாரணமாக பயன்படுத்தும் பல பொருட்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.யால் மக்களும், அரசும் பலன் பெறுகின்றனர். வரும் ஆண்டில் மருத்துவர் தின விழா அனைவரையும் சேர்த்து கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலுக்கு செல்ல ஆசிரியர்கள் மட்டுமல்ல, டாக்டர்கள் உட்பட பலரும் செல்ல மறுக்கின்றனர்.

    இது மாற்றப்பட வேண்டும். அதுவும் புதுவை மாநிலத்தின் ஒரு பிராந்தியம்தான். அனைத்து துறையிலும் உள்ள பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு வருகிறது. இடமாறுதலில் விதிகளை மாற்றி மகிழ்ச்சியாக இடமாற்றத்தை ஏற்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆசிரியர் பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரும் பேசி வருகிறார், நானும் பேசி வருகிறேன். எதிர்கட்சிகள் பல ஆண்டாக சம்பளம் வழங்கவில்லை என கூறுகின்றனர்.

    அவர்கள் ஆட்சியில் பல ஆண்டாக சம்பளம் வழங்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு துறையாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பங்கேற்ற பேரணிக்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    தலைமை விருந்தினராக புதுச்சேரி மாநில நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் மற்றும் பள்ளி அளவிலான நாட்டு நல பணி திட்ட ஒருங்கிணை ப்பாளர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பேசினர்.

    சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த கோரிஜூ ரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளியின் துணை முதல்வர் வினோலியா டேனியல் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி கவுண்டன் பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி வழியாக சென்றது. பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் செய்திருந்தனர்

    • பிரதமர் புதுவைக்கு வரும்போது பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுங்கள், புதுவையை பெஸ்ட் ஆக மாற்றுவோம் என கூறியிருந்தார்.
    • ஏ.எப்.டி. மில்லில் பணியாற்றிய பாதி தொழிலாளர்களுக்கு ரூ.61 கோடி சம்பள பாக்கி கொடுத்துள்ளோம்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து வியாபாரிகள் விளக்க கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    பா.ஜனதா அனைத்து மக்கள் குறைகளையும் தீர்த்து வருகிறது. என்.ஆர்.காங்., பா.ஜனதா தேசிய கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து புதுவை வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் புதுவைக்கு வரும்போது பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுங்கள், புதுவையை பெஸ்ட் ஆக மாற்றுவோம் என கூறியிருந்தார். அதன்படி பல்வேறு திட்டங்கள் நிறை வேற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நிழல் நிதி தாக்கல் செய்யப்படும்.

    அப்போது எந்த திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படுகிறதோ, அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். இந்த ஆண்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவைக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டார். அதன்படி முதல் முறையாக ரூ. 1,450 கோடி கூடுதலாக நிதியை மத்திய அரசு வழங்கியது.

    2017 முதல் தொழில் தொடங்க ஊக்கத்தொகை கொடுக்கப்படாமல் இருந்தது. தற்போது ரூ.30 கோடி நிதி முழுமையாக கொடுக்கப்ப ட்டுள்ளது. ஏ.எப்.டி. மில்லில் பணியாற்றிய பாதி தொழிலாளர்களுக்கு ரூ.61 கோடி சம்பள பாக்கி கொடுத்துள்ளோம். தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

    வருகிற 7-ந் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் புதுவைக்கு வருகிறார். அப்போது வியாபாரிகளின் கோரிக்கை களை தெரிவிக்கலாம். பா.ஜனதா நாட்டின் மீது அக்கறை கொண்ட கட்சி. ஸ்மார்ட் சிட்டி மூலம் குபேர் மார்க்கெட் சீரமைக்கப்பட உள்ளது. மத்திய அரசிடம் இருந்து ரூ.2 கோடி வந்துள்ளது. எனவே பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு கட்டி முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×