search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குபேர் மார்க்கெட் பணி விரைவில் முடியும்-அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
    X

    கோப்பு படம்.

    குபேர் மார்க்கெட் பணி விரைவில் முடியும்-அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

    • பிரதமர் புதுவைக்கு வரும்போது பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுங்கள், புதுவையை பெஸ்ட் ஆக மாற்றுவோம் என கூறியிருந்தார்.
    • ஏ.எப்.டி. மில்லில் பணியாற்றிய பாதி தொழிலாளர்களுக்கு ரூ.61 கோடி சம்பள பாக்கி கொடுத்துள்ளோம்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனைகள் குறித்து வியாபாரிகள் விளக்க கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    பா.ஜனதா அனைத்து மக்கள் குறைகளையும் தீர்த்து வருகிறது. என்.ஆர்.காங்., பா.ஜனதா தேசிய கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து புதுவை வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் புதுவைக்கு வரும்போது பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுங்கள், புதுவையை பெஸ்ட் ஆக மாற்றுவோம் என கூறியிருந்தார். அதன்படி பல்வேறு திட்டங்கள் நிறை வேற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நிழல் நிதி தாக்கல் செய்யப்படும்.

    அப்போது எந்த திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படுகிறதோ, அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். இந்த ஆண்டு முதல்-அமைச்சர் ரங்கசாமி, புதுவைக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டார். அதன்படி முதல் முறையாக ரூ. 1,450 கோடி கூடுதலாக நிதியை மத்திய அரசு வழங்கியது.

    2017 முதல் தொழில் தொடங்க ஊக்கத்தொகை கொடுக்கப்படாமல் இருந்தது. தற்போது ரூ.30 கோடி நிதி முழுமையாக கொடுக்கப்ப ட்டுள்ளது. ஏ.எப்.டி. மில்லில் பணியாற்றிய பாதி தொழிலாளர்களுக்கு ரூ.61 கோடி சம்பள பாக்கி கொடுத்துள்ளோம். தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

    வருகிற 7-ந் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் புதுவைக்கு வருகிறார். அப்போது வியாபாரிகளின் கோரிக்கை களை தெரிவிக்கலாம். பா.ஜனதா நாட்டின் மீது அக்கறை கொண்ட கட்சி. ஸ்மார்ட் சிட்டி மூலம் குபேர் மார்க்கெட் சீரமைக்கப்பட உள்ளது. மத்திய அரசிடம் இருந்து ரூ.2 கோடி வந்துள்ளது. எனவே பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு கட்டி முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×