என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
கஞ்சா கும்பலுடன் தொடர்பு வைக்கும் போலீசார் டிஸ்மிஸ்
- புதிய டி.ஜி.பி. எச்சரிக்கை
- 20 லட்சம் வாகனங்கள் ஓடுவதால் போக்குவரத்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவையின் புதிய டி.ஜி.பியாக சீனிவாஸ் பதவியேற்றார். இதன்பின் மாநில சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் ஏ.டி.ஜி.பி ஆனந்தமோகன், சீனியர் எஸ்.பி நாராசைதன்யா, எஸ்.பிக்கள் ஜிந்தா கோதண்டராமன், மாறன், மோகன்குமார், பக்தவச்சலம், பாஸ்கர், வீரவல்லவன், இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்துகொண்டனர். காரைக்கால், மாகி, ஏனாம் போலீசார் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்றனர்.
டி.ஜி.பி. புதுவையில் பல ஆண்டுக்கு முன்பிருந்த அதே சாலைகள் தான் தற்போதும் உள்ளது. 20 லட்சம் வாகனங்கள் ஓடுவதால் போக்குவரத்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.
கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் விற்பனையை முழுமையாக ஒழிக்க வேண்டும். கஞ்சா விற்கும் கும்பலுடன் தொடர்பு வைத்திருக்கும் போலீசாருக்கு குறைந்தபட்ச தண்டனையாகவே டிஸ்மிஸ்தான் இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.






