என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை கிராமங்களில் மருத்துவ திருவிழா
    X

    கோப்பு படம்.

    புதுவை கிராமங்களில் மருத்துவ திருவிழா

    • கவர்னர் தமிழிசை தகவல்
    • பல வரிகளை ஒன்றிணைத்து ஜி.எஸ்.டி.யாக மாற்றப் பட்டுள்ளது. இதில் குடும்ப உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:

    மருத்துவர்களுக்கு மருத்துவர் தின வாழ்த்து க்களை தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர்கள் தங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து உயிர்களை காப்பாற்றுகின்றனர். இது அவர்களுக்கு நன்றி செலுத்தும் நாள். கொரோனா காலத்தில் பலர் உயிரிழந் துள்ளனர். அவர்களின் தியாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    புதுவை அரசு மருத்துவமனையில் இன்னும் பல புதுமைகள் வர உள்ளது. குஜராத்தில் பிரதமரின் டயாலிசிஸ் சிகிச்சை வெற்றிகரமாக செயல்படுகிறது. இது விரைவில் புதுவைக்கும் வர உள்ளது.

    எல்லா மருத்துவமனை களிலும் 10 படுக்கை கொண்ட அதி நவீன அவசர சிகிச்சை பிரிவு கொண்டு வரப்பட உள்ளது.

    அனைத்து துறைகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காசநோய் இல்லாத புதுவையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண் பார்வையற்ற நிலை வரக் கூடாது என ஒளி படைத்த புதுவை என்ற திட்டத்தின் கீழ் அனைவருக்கும் கண் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

    புதுவையில் மருத்துவ திருவிழா நடத்தினோம். கிராமங்களிலும் சுகாதாரத்துறை மருத்துவ திருவிழா நடத்த உள்ளது. இன்று ஜிஎஸ்டி தினம். ஜி.எஸ்.டி.யால் வரி உயர்ந்துள்ளது போல மாய தோற்றம் உள்ளது. பல வரிகளை ஒன்றிணைத்து ஜி.எஸ்.டி.யாக மாற்றப் பட்டுள்ளது. இதில் குடும்ப உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    குடும்பத்தில் சாதாரணமாக பயன்படுத்தும் பல பொருட்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி.யால் மக்களும், அரசும் பலன் பெறுகின்றனர். வரும் ஆண்டில் மருத்துவர் தின விழா அனைவரையும் சேர்த்து கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலுக்கு செல்ல ஆசிரியர்கள் மட்டுமல்ல, டாக்டர்கள் உட்பட பலரும் செல்ல மறுக்கின்றனர்.

    இது மாற்றப்பட வேண்டும். அதுவும் புதுவை மாநிலத்தின் ஒரு பிராந்தியம்தான். அனைத்து துறையிலும் உள்ள பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு வருகிறது. இடமாறுதலில் விதிகளை மாற்றி மகிழ்ச்சியாக இடமாற்றத்தை ஏற்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆசிரியர் பிரச்சினை குறித்து முதல்-அமைச்சரும் பேசி வருகிறார், நானும் பேசி வருகிறேன். எதிர்கட்சிகள் பல ஆண்டாக சம்பளம் வழங்கவில்லை என கூறுகின்றனர்.

    அவர்கள் ஆட்சியில் பல ஆண்டாக சம்பளம் வழங்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு துறையாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×