என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர்
- மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்செல்ல மறுத்ததால் விபரீதம்
- மோட்டார் சைக்கிளில் சாராயக்கடைக்கு சென்று மது குடித்தார்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் கோட்டைமேடு ராகவ செட்டியார் தெருவை சேர்ந்தவர் சோமு (வயது 44) கட்டிட தொழிலாளி இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
சோமுவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இவர் தினமும் வேலை முடிந்து இரவு வீராம்பட்டினம் சாராயக்கடைக்கு சென்று மது அருந்து வது வழக்கம்.
அதுபோல் மோட்டார் சைக்கிளில் சாராயக்கடைக்கு சென்று மது குடித்தார். பின்னர் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சோமுவிடம் மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்செல்லும் படி கூறினார். ஆனால் அதற்கு சோமு மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் திட்டினார்.மேலும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சோமுவை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயடைந்த சோமு புதுவை அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து சோமுவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற வாலிபரை தேடிவரு கிறார்கள்.






