search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாரம்பரிய மரபு சார் மருத்துவ பாதுகாப்பு மாநாடு
    X

    நிகழ்ச்சியில் விழா மலரினை கவர்னர் தமிழிசை வெளியிட்ட காட்சி. அருகில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், டாக்டர்விஜயராகவ், சுசான்லி டாக்டர் ரவி மற்றும் பலர் உள்ளனர்.

    பாரம்பரிய மரபு சார் மருத்துவ பாதுகாப்பு மாநாடு

    • கவர்னர் தமிழிசை பங்கேற்பு
    • சேவையினைப் பாராட்டி அமைச்சர்கள் சாய்.ஜெ. சரவணன், லட்சுமி நாராயணன் ஆகியோர் விருது வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த 2 நாட்கள் பாரம்பரிய மற்றும் மரபுசார் மருத்துவ பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. டாக்டர் முகேஷ் தலைமையில் மருத்துவர்கள் ஸ்ரீவித்யா, மோகன், உதயசங்கர், வெங்கடேசன், சௌந்தர்யா, ஹரிஹரசுதன் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினரின் முயற்சியாலும், தமிழகம், புதுச்சேரி தி சுசான்லி குழுமத்தின் சேர்மேனும், பாண்டிச்சேரி சித்தா, யுனானி, ஹோமியோபதி. ஆயுர்வேத டாக்டர்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் நிறுவனருமான சுசான்லி டாக்டர் சி.ஏ.ரவி மற்றும் கோசிபா, ராசு ஆலோசனைபடி நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில், கவர்னர் தமிழிசை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், லட்சுமி நாராயணன், சாய்.ஜெ.சரவணன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, எம்.எல்.ஏ.க்கள் நேரு, பிரகாஷ்குமார்,முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார். புதுச்சேரி ஆயுஸ் இயக்குனர் டாக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

    மை வீத்ரி ஏட்ஸ் நிறுவ னத்தின் வழிகாட்டியும். சித்தவா ஹெர்பல்ஸ்-புட்ஸ் நிறுவனத்தின் நிறு வனரும், உரிமையாளருமான டாக்டர் விஜயராகவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவரது சேவையினைப் பாராட்டி அமைச்சர்கள் சாய்.ஜெ. சரவணன், லட்சுமி நாராயணன் ஆகியோர் விருது வழங்கினர்.

    டாக்டர் சி.ஏ.ரவிக்கு ஆயுஸ் இயக்குனர் டாக்டர் ஸ்ரீதரன் விருது வழங்கினர். முகேஷ் பொதுச்சேவையினையும். பாரம்பரிய மருத்துவ பாதுகாப்பிற்காக அவரின் செயல்பாட்டினை பாராட்டி விருது வழங்கப்பட்டது.

    மாநாட்டின் சிறப்பு மலரினை கவர்னர் தமிழிசை வெளியிட மை சித்துவா ஹெர்பல்ஸ்-புட்ஸ் வீத்ரி ஏட்ஸ் நிறுவனத்தின் வழிகாட்டியுமான டாக்டர் விஜயராகவ் பெற்று கொண்டார்.

    Next Story
    ×