என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
அமைச்சர் லட்சுமி நாராயணன் அதிகாரிகளுடன் ஆலோசனை
- மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்துள்ள தாகவும், ஆதலால் சில இடங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
- நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பரங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
புதுவையில் நேற்றிரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளில் விழுந்தது. சில இடங்களில் மரங்களின் கிளைகள் விழுந்தது. சில இடங்களில் பேனர்கள், கட்டவுட்டுகள் பறந்து சாலைகளில் கிடந்தன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் பொதுப்பணி துறையின் அதிகாரிகளின் அவசர கூட்டம் சட்டப்பேரவையில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் பங்கெற்ற அதிகாரிகள் புதுவை நகரின் சூறைக்காற்றினால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து, கிளைகள் உடைத்து பல்வேறு சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர். மேலும், சில இடங்களில் விளம்பர தட்டிகள், மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்துள்ள தாகவும், ஆதலால் சில இடங்களில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அமைச்சர் லட்சுமி நாராயணன், வனத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து பொதுப்பணித்துறை யினர் ஆங்காங்கே முறிந்த கிளைகளையும் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்ய உத்தரவிட்டார்.
மேலும், வனத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பரங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து பெரும்பாலான இடங்களில், மரங்கள் அப்புறப்ப டுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.மேலும், மீன்சார தடை ஏற்பட்டுள்ள இடங்களில் போர்க்கால அடிப்படையில் மின்சா ரத்தை வழங்கவும் உத்தரவிட்டார். மேலும் கட்டிடங்கள் மேல் விழுந்த விளம்பர போர்டுகள் போன்றவற்றை இன்றே அகற்றவும் உத்தரவிட்டார். கூட்டத்தில், பொதுப்பணித்துறையின் அனைத்து கண்காணிப்பு பொறி யாளர்களும், செயற்பொறி யாளர்களும் கலந்து கொண்டனர்.






