என் மலர்
புதுச்சேரி
- அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் எதிர்க்கட்சி தலைவர் சிவா பங்கேற்பு
- விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகிறது
புதுச்சேரி:
திருக்காமீஸ்வரர் மேம்பட்ட வேளாண் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் பழனம் வேளாண் பல்பொருள் அங்காடி திறப்பு விழா வில்லியனூர் நாவிதர் மடம் எதிரில் நடந்தது.
பழனம் வேளாண் நிறுவனத்தின் தலைவர் குலசேகரன் தலைமை தாங்கினார். செயலர் ராமமூர்த்தி வரவேற்றார். உறுப்பினர்கள் இளஞ்செழியபாண்டியன், வேணுகோபால், கோவிந்தன், விஜயகுமார், ஜெனார்த்தனன், புண்ணியகோடி, ராஜா, வீரப்பன், ராஜசேகர், தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் முன்னிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா அங்காடியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அங்காடியில் வில்லியனூர் தாலுக்கா பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகிறது
நிகழ்ச்சியில், வேளாண் துறை இயக்குநர் பாலகாந்தி, மாவட்ட துணை ஆட்சியர் தெற்கு முரளிதரன், கூடுதல் வேளாண் இயக்குநர் வசந்தகுமார், துணை இயக்குநர் ராஜேஸ்வரி, வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம், டாக்டர் முருகன் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், இரமணன், சபரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சீரமைப்பு பணிகள் தீவிரம்
- சட்டசபை வளாகம் எதிரே அம்பேத்கர் சிலை அருகே இருந்த மரம் வேலியை தாண்டி சட்டசபை வளாகத்தின் தடுப்பு கம்பிகளில் விழுந்தது.
புதுச்சேரி:
புதுவையில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
கனமழையுடன் வீசிய சூறாவளி காரணமாக புதுவை நகர பகுதிகளில் இருந்த ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது. பெரிய மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது. நகர பகுதியில் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. பல இடங்களில் மின்வயர்களில் மரக்கிளைகள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் போக்குவரத்து குறைவாக இருந்தது. அதேநேரத்தில் அரசின் பொதுப்பணித்துறை, மின்துறை, தீய ணைப்புத்துறை, உள்ளாட்சித் துறையினர் களத்தில் இறங்கினர். சாய்ந்து கிடந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். முறிந்த கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.
சுமார் 100 டன் எடை கொண்ட மரக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. அதோடு சூறாவளியில் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கும் பணியும் நடந்தது. சட்டசபை வளாகம் எதிரே அம்பேத்கர் சிலை அருகே இருந்த மரம் வேலியை தாண்டி சட்டசபை வளாகத்தின் தடுப்பு கம்பிகளில் விழுந்தது.
இதனால் 2 இரும்பு வேலிகளும் சேதமடைந்தது. சட்டசபை வளாகத்தில் இதை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அறுந்து விழுந்த மின்வயர்கள் உடனுக்குடன் சீரமைக்கும் பணியில் மின்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூரில் பிரசித்தி பெற்ற பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜா பெருமாள் கோவில் உள்ளது.
கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் திருமஞ்சனமும் அதனை தொடர்ந்து தினந்தோறும் பெருமாள் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். முக்கிய நிகழ்வான தேர்திருவிழா இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளித்தார். தொடர்ந்து பெருமாளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் தேரோட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், எதிர்கட்சிதலைவர் சிவா எம்.எல்.ஏ. ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வில்லியனூர் நான்கு மாட வீதிகளின் வழியாக சென்ற திருத்தேர் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேர் வீதியுலா வரும் போது வடக்கு வீதி வந்த போது அங்குள்ள தனியார் பள்ளியில் தமிழ்த்தாய் வாழ்த்து மாணவர்களால் பாடப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வாழ்த்து முடியும் வரை தேர் நின்று சென்றது.
- ஆர்ப்பாட்டத்தில் ரேஷன்கடை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- இதற்கு தடையாக உள்ள அரசு உயரதிகாரிகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி:
பாரதிய புதுவை ரேஷன்கடை ஊழியர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் மிஷன்வீதி மாதாகோவில் எதிரே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். செயலாளர் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ரேஷன்கடை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சட்டசபையில் அறிவித்தபடி ரேஷன்கடைகளை திறந்து ஏழை மக்களுக்கு இலவச அரிசி, சிறுதானியங்கள், அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், இதற்கு தடையாக உள்ள அரசு உயரதிகாரிகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- விடுதலை சிறுத்தைகள் மனு
- முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் தமிழ்வாணன் ஆகியோர் கட்டண வசூல் குறித்து புகார் அளித்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் இலவச கல்வி அரசாணைக்கு விரோதமாக தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இந்த புகார் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கல்வி கட்டண குழு முதன்மை அதிகாரியும், முன்னாள் நீதிபதியுமான பாரதிதாசன் முன்னிலையில் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.
விடுதலை சிறுத்தை கட்சியின் முதன்மை செயலாளர் தேவ பொழிலன், முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் தமிழ்வாணன் ஆகியோர் கட்டண வசூல் குறித்து புகார் அளித்தனர்.
தொடர்ந்து தனியார் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பிடமும் விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த நீதிபதி, தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களிடம் அரசாணைக்கு விரோதமாக கட்டணம் கேட்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்தார்.
தனியார் பள்ளிகளுக்கான புத்தக கட்டணம், சீருடை கட்டணம் ஆகியவற்றை கல்வி கட்டண குழு உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தேவபொழிலன், அமைப்பு செயலாளர் தலையாரி, தமிழ்வாணன், துணைச் செயலாளர் சிவச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.
இந்த சந்திப்பி ன்போது திருபுவனை தொகுதி செய லாளர் ஈழவ ளவன், நிர்வா கிகள் தவசி, சரவணன் ஆகியோர் உடன் இருந்த னர்.
- மாவட்ட தலைவர்கள் ஜானகிராமன், சம்பத், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- வட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் சேவைப் பணிகளை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
திருக்கனூர் லயன்ஸ் சங்க தலைவராக முகமது அசாருதீன், செயலாளராக இளங்கோவன், பொருளாளராக செல்வகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் பதவியேற்பு விழா திருக்க னூர் போன் நேரு மேல்நி லைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. தலைவர் முகமது அசாருதீன் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர்கள் ஜானகிராமன், சம்பத், கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் ராஜன், சரவணன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தினர். முன்னாள் மாவட்ட ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் சேவைப் பணிகளை தொடக்கி வைத்தார்.
விழாவில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டியதுடன், 200 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் லயன்ஸ் சங்க மண்டல தலைவர் புஷ்ப ராஜ், வட்டார தலைவர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் பரந்தாமன் நன்றி கூறினார்.
- மது குடித்து கொண்டிருந்த 3 பேர் பிரவீனிடம் தகராறு செய்தனர்.
- சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பாட்டிலால் குத்திய மர்ம நபர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:
லாஸ்பேட்டை டோபிகானா பகுதியை சேர்ந்தவர் பிரவீன்(வயது32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு இவர் பிருந்தாவனம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடித்தார்.
அப்போது எதிரே அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த 3 பேர் பிரவீனிடம் தகராறு செய்தனர். இதையடுத்து பிரவீன் செல்போன் மூலம் தனது தம்பி பிரசாந்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே பிரசாந்த் தனது நண்பர் சுந்தரத்துடன் மதுக்கடைக்கு வந்தார். அப்போது பிரவீனிடம் தகராறு செய்த கும்பலை அவர்கள் தட்டிக்கேட்டனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர் சண்முகசுந்தரம் ஆகிய 2 பேரையும் மது பாட்டிலால் குத்தினர். இதில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் மது பாட்டிலால் தாக்கிய கும்பல் தப்பியோடி விட்டது. இதையடுத்து மோதலில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து மதுக்கடையில் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பாட்டிலால் குத்திய மர்ம நபர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- ஓராண்டில் முடிக்க வேண்டிய திட்டங்கள் பட்டியலை தயாரிக்க மாநில அரசு உத்தரவிட்டது.
- கூட்டத்தில் பணிகளை துரிதப்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற 2017-ல் மத்திய அரசு அனுமதியளித்தது.
ரூ.930 கோடி பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த பணிகளை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்க மத்திய அரசு காலநீட்டிப்பு வழங்கியுள்ளளது. ஓராண்டில் முடிக்க வேண்டிய திட்டங்கள் பட்டியலை தயாரிக்க மாநில அரசு உத்தரவிட்டது.
இதன்படி புதுவையில் 133 திட்ட பணிகளில் முன்னுரிமை அடிப்படை யில் 26 திட்ட பணிகளை எடுக்க ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் முடிவு செய்தது. இந்த பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என புதுவை அரசு கெடு விதித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் பொதுப் பணித்துறை, தேசிய கட்டுமான கழகம் மூலம் சுமார் ரூ.400 கோடி அளவில் நடந்து வருகிறது.
இந்த பணிகளை துரிதப்படுத்த வருகிற 5-ந் தேதி அரசு செயலர் மணிகண்டன், மத்திய அரசு பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் பணிகளை துரிதப்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
- அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையை தேர்ந்தெடுத்து டைமண்ட் ‘ஏ’ பிளஸ் தரவரிசை வழங்கி அங்கீகரித்துள்ளது.
- சிறந்த கல்வி முறையினை எங்கள் கல்லூரியில் வழங்கி வருகிறோம்.
புதுச்சேரி:
இந்தியாவின் தர வரிசையில் அரசு சாரா நிறுவனமாக 'ஆர்' உலக நிறுவன தரவரிசை அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மாணவர்களின் ஒளி மயமான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த துல்லியமான தரவை வழங்கும் வழித்தடமாக செயல்பட்டு அவற்றில் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அங்கீகரித்து வருகிறது.
அதன்படி கற்றல் இலக்கு அடிப்படையிலான கல்வி முறையில் சிறந்து விளங்குவதற்காக விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையை தேர்ந்தெடுத்து டைமண்ட் 'ஏ' பிளஸ் தரவரிசை வழங்கி அங்கீகரித்துள்ளது.
இதுகுறித்து துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கூறிய தாவது:-
இன்றைய கால சூழலில் கல்வியானது மாணவர்க ளின் திறனை மேம்படுத்த மட்டுமல்லாமல் வருங்கால தொழில்நுட்ப வளர்ச்சி யினை ஈடு செய்யும் திறனை வளர்க்கும் முறைகளை கையாளுகிறது. குறிப்பாக கற்றல் இலக்கு அடிப்படை யிலான கல்விமுறையானது மாண வர்களின் செயல் திறனை அளவிட்டு அவர்களின் இலக்கை அடையவும் பாடத் திட்டத்தின் முறையான இலக்கை அடையவும் வழிவகை செய்யும் கல்வி முறையாகும்.
இதன் மூலம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி உலகளாவிய சகாக்களுடன் தனித்து நிற்கும் வகையில் புதிய திறன்களை உருவாக்க முடியும். இத்தகைய சிறந்த கல்வி முறையினை எங்கள் கல்லூரியில் வழங்கி வருகிறோம்.
இதனை ஆராய்ந்து 'ஆர்' உலக நிறுவனத் தரவரிசை அமைப்பு டைமண்ட் ஏ ப்ளஸ் தரவரிசை வழங்கி அங்கீகரித்துள்ளது என்றார். பின்னர் இத்தகைய அங்கீகாரம் கிடைப்பதற்கு சிறப்பான பங்களிப்பினை ஆற்றிய துறை பேராசி ரியர்களுக்கு பாராட்டினை தெரிவித்தார்.
மேலும் பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர். கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர். அனுராதா கணேசன், ஆகியோர் இதற்கு சிறந்த வழிகாட்டியாகவும் உறு துணையாகவும் செய லாற்றிய டாக்டர். செந்தில் குமாருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.
- தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
- ரூ.7 லட்சத்து 72 ஆயிரத்து 404 பணத்தை தாண்டவராயன் செலுத்தியுள்ளார். மேலும் பணம் செலுத்த அவர்கள் தொந்தரவு செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் சைபர் கிரைம் போலீசார் ஆன்லைன் முதலீடுகள், வெளிநாடு வேலை வாய்ப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இருப்பினும் ஆன்லைன் மோசடிகளில் பணம் இழப்போர் பட்டியல் நீடித்து வருகிறது. புதுவை பாகூர் பிள்ளை யார்குப்பத்தை சேர்ந்தவர் செந்தமிழன்(வயது27). இவர் வேலைக்காக ஆன்லைனில் பதிவு செய்திருந்தார். கடந்த மார்ச் 21-ந் தேதி, வெளிநாட்டில் லேப்டெக்னீ ஷியன் வேலை உள்ளதாக ஒரு எண்ணை தொடர்பு கொள்ள கூறப்பட்டிருந்தது.
அதில் பேசிய போது, குவைத்தில் வேலை இருப்பதாக கூறிய நபர் ரூ.5 ஆயிரத்து 900 கட்ட சொல்லியுள்ளார். பின்னர் மருத்துவ காப்பீடுக்கு ரூ.30 ஆயிரம், பணி பாதுகாப்புக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், விசா அனுப்ப ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் என படிப்படியாக ரூ.8 லட்சத்து 34 ஆயிரத்து 900 செந்தமிழன் அனுப்பினார். ஆனால் பணி அழைப்பு வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இதே போல் பாகூர் தெற்கு வீதியை சேர்ந்த தாண்டவ ராயனிடம் (வயது68),செல்போனில் பேசிய நபர் குறைந்தவட்டியில் லோன் தருவதாக கூறினார்.
இதை நம்பி அவர் ரூ.39 ஆயிரத்து 562 கட்டினார். ஆனால் அந்த நபர் மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை. ஒரு மாதத்துக்கு பின்பு தாண்ட வராயனை தொடர்புகொண்ட மற்றொரு நபர், ஏற்கனவே செலுத்திய பணத்தையும், லோனும் தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பி ரூ.7 லட்சத்து 72 ஆயிரத்து 404 பணத்தை தாண்டவராயன் செலுத்தியுள்ளார். மேலும் பணம் செலுத்த அவர்கள் தொந்தரவு செய்தனர்.
தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த தாண்டவராயன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இந்த சம்பவங்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
- மது குடிக்கும் பழக்கமுள்ள இவர் அடிக்கடி குடும்பத்தினரிடம் குடித்து விட்டு இறந்து விடுவேன் என்று கூறி வந்தார்.
- ஆறுமுகம் அங்குள்ள மது கடையில் மது குடிக்க சென்றார்.
புதுச்சேரி:
திண்டிவனம் அருகே கோவடி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது52). கூலி தொழிலாளி. மது குடிக்கும் பழக்கமுள்ள இவர் அடிக்கடி குடும்பத்தினரிடம் குடித்து விட்டு இறந்து விடுவேன் என்று கூறி வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆறுமுகம் பாகூர் அருகே சோரியாங்குப்பத்தில் உள்ள தனது சகோதரி சகுந்தலா வீட்டில் தங்கி இருந்து வந்தார்.
ஆறுமுகம் அங்குள்ள மது கடையில் மது குடிக்க சென்றார். அப்போது குடி போதையில் அங்கிருந்த வர்களை அவர் திட்டினார்.
பின்னர் வீட்டுக்கு வந்த ஆறுமுகம் தனது சகோதரியிடம் எனக்குள்ள பிரச்சினைகளை யாரும் கேட்கமாட்டீர்களா? என வாக்குவாதம் செய்தார். குடிபோதையில் ஆறுமுகம் இருந்ததால் காலையில் பேசிக்கொள்ளலாம் என்று அவரை சகுந்தலா சமாதானம் செய்து விட்டு தூங்க சென்றார். பார்த்த போது ஆறுமுகம் வீட்டின் மாடி அருகில் இருந்த மாமரத்தில் வேட்டியால் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார்.
இதுகுறித்து அவரது மகன் சண்முகவேல் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தலம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.
- மணிப்பூர் மாநில மக்களின் துயர் நீங்க அருள்நிறை ஆலயத்தில் திருப்பலி நிறை வேற்றப்பட்டது.
புதுச்சேரி:
மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நடைபெற்று வரும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தலம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடைபெற்றது.
இதனை வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தல பங்குத் தந்தை ஆல்பர்ட் துவக்கி வைத்தார். லூர்தன்னை பள்ளி தலைமையாசிரியர் ஆல்வின் அன்பரசு முன்னிலை வகித்தார். மாதா கோவில் வீதி, ஒதியம்பட்டு சாலை வழியாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற வர்கள், மணிப்பூர் மாநில கிறிஸ்தவர்களின் துயர் நீங்கி, அங்கு அமைதி நிலவிட வேண்டுமென மெழுகுதிரி ஏந்தி செபமாலை செபித்தனர்.
இதன்பின்னர் மாதா திருக்குளத்தை சுற்றி ஊர்வலம் முடிவடைந்த பின்னர் ஆலய முற்றத்தில் பங்குத்தந்தை ஆல்பர்ட் தலைமையில் மக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக மணிப்பூர் மாநில மக்களின் துயர் நீங்க அருள்நிறை ஆலயத்தில் திருப்பலி நிறை வேற்றப்பட்டது.






