என் மலர்
புதுச்சேரி
- புதுவை புனித பேட்ரிக் பள்ளியில் 17-வது மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
- வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை புனித பேட்ரிக் பள்ளியில் 17-வது மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில டேபிள் டென்னிஸ் கழகத் தலைவர் நமச்சி வாயம் கலந்து கொண்டார்.
துணைத் தலைவர் சுந்தர வரதன், மாநில டேபிள் டென்னிஸ் கழக பிரதிநிதிகள் குணசேகரன், அந்தோணி பிரிட்டோ, ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் சுழற் கேடயம் வழங்கி சிறப்பித்தனர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை பள்ளியின் தாளாளர் பிரடரிக் வரவேற்று பேசினார். பள்ளியின் மருத்துவ இயக்குனர் ஜித்தா பிரடரிக், பள்ளியின் முதல்வர் அல்போன்ஸ் கில்டா, மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை பள்ளியின் மாணவன் விஷ்ணு, மாணவி அனன்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர். பள்ளி மாணவன் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ஹேமலதா, ராயர், வனிதா, மணிவண்ணன் , ஹேமந்த் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
- தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்க தொடக்க விழா தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நடந்தது.
- தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை விற்பனைக் குழு தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்க தொடக்க விழா தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் நடந்தது.
விற்பனைக் குழு ஊழியர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தொ.மு.ச. மாநில தலைவர் அண்ணா அடைக்கலம் முன்னிலை வகித்தார். எதிர்க்கட்சி தலைவரான சிவா எம்.எல்.ஏ. விற்பனைக் குழு ஊழியர்கள் தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், தொ.மு.ச. கவுரவத் தலைவர் சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், வேலவன், கோபால கிருஷ்ணன், செந்தில்வேலன், தொகுதி செயலாளர்கள் வடிவேல், தியாகராஜன், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கவிஞர் கிருஷ்ணமூர்த்தி, தொ.மு.ச. நிர்வாகிகள் நாதன், ராஜசேகர், மெய்யப்பன், விஜயரங்கன், சுதாகர், அன்பழகன், சக்திவேல், முனுசாமி, கதிரேசன், ஜூலி, சீனுவாசன், பரந்தாமன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
- பயனாளிகளுக்கு மானிய தொகை கிடைக்காமல் காத்து கொண்டிருக்கிறார்கள்.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பெருந்தலைவர் காமராஜர் கல் வீடு கட்டும் திட்டத்தின் பெயரை மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் பிரதமர் கல் வீடு கட்டும் திட்டமாக மாற்றிய பிறகு குழப்ப நிலை உருவாகி பயனாளிகளுக்கு மானிய தொகை கிடைக்காமல் காத்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால் கட்ட தொடங்கிய வீட்டை எப்போது முடிப்போம் என்று பயனாளிகள் தவிக்கி றார்கள். கடந்த 2021 தேர்தலுக்கு பிறகு திட்டத்தின் மூலம் வீடு கட்ட மானிய தொகைக்காக விண்ணப்பித்த பயனாளிகள் ஒருவருக்கு கூட இதுநாள் வரை மானிய தொகையில் ஒரு தவணை கூட கொடுக்கப்படாமல் இருக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் பயனடையும் விதமாக விண்ணப்பத்தவர்கள் அவர்கள் குடியிருந்த பழைய குடியிருப்பை இடித்துவிட்டு வாடகை வீடு களுக்கு சென்று வாடகை செலுத்த முடியாமல் கடனாளிகளாக மாறி கொண்டிருக்கிறார்கள்.
எனவே இந்த திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து பயனாளிகளை கடன்களிலிருந்து மீட்டு அவர்களுக்கு உடனடியாக மானிய தொகை கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு நேரு எம்.எல்.ஏ. மனுவில் கூறியு ள்ளார்.
- கடந்த 13 ஆண்டாக நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்த செல்வம், கடந்த 27-ந்தேதி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தார்.
- தற்கொலை குறித்து கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் மாவட்டம் ஜானகிபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 43), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
கடந்த 13 ஆண்டாக நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்த செல்வம், கடந்த 27-ந்தேதி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு சேர்ந்தார். நேற்று முன்தினம் இரவு 1.30 மணிக்கு ஜெயலட்சுமி எழுந்து பார்த்தபோது, செல்வம் தனக்குதானே முகத்தில் பிளாஸ்டிக் பையால் மூடி, மருந்து ஏற்றும் பிளாஸ்டிக் டியூப்பால் கழுத்தை இறுக்கி கட்டிய நிலையில் கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி நர்சை அழைத்து முதலுதவி செய்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வம் இறந்தார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்கள் அமைச்சரை பார்த்து, சார்... சிலிண்டர் விலை 1,200 ரூபாவாக உயர்ந்துவிட்டது. எப்போது விலையை குறைக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
- பூஜையை முடித்த அமைச்சரிடம் பெண்கள், சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என்று மீண்டும் கேள்வியை எழுப்பினர்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு புதிய தாங்கல் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தப்படுகிறது.
இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.க. அமைச்சர் சாய்.ஜெ. சரவணகுமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.
விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் அங்கிருந்த பெண்களிடம் 100 நாள் வேலைவாய்ப்பு 200 நாட்களாகவும் அதற்கான கூலியையும் பிரதமர் மோடி உயர்த்திருக்கிறார்.
மேலும் மக்களுக்கு வருகின்ற நிதியை உயர்த்தி கொடுக்க சொல்லியும் கூறி இருக்கிறார் என்றார். அப்போது பெண்கள் இதனை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். இதற்கு ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் நீங்கள் கைதட்டுங்கள் என்று அமைச்சர் கூறினார். அங்கிருந்த பெண்கள் சிரித்துக்கொண்டே கைதட்டினர்.
இதையடுத்து அங்கிருந்து பெண்கள் அமைச்சரை பார்த்து, சார்... சிலிண்டர் விலை 1,200 ரூபாவாக உயர்ந்துவிட்டது. எப்போது விலையை குறைக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து அமைச்சர் அங்கிருந்த பூஜை தட்டை எடுத்து வானத்தில் காட்டி மந்திரம் ஓதினார். இதை பார்த்த பெண்கள் சிரித்தனர். பூஜையை முடித்த அமைச்சரிடம் பெண்கள், சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என்று மீண்டும் கேள்வியை எழுப்பினர்.
இதற்கு அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. 3-வது நாளாக நேற்று இரவும் மழை பெய்தது.
- பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் தான் தற்போது தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. 3-வது நாளாக நேற்று இரவும் மழை பெய்தது. இதில் புதுவை நகரில் கடற்கரை அருகே சுப்பையா சாலையில் தீயணைப்பு துறைக்கான கட்டிடத்தில் மழை நீர் உள்ளே ஒழுகியது.
புதுவையில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் தான் தற்போது தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது. பிரெஞ்சு காலத்தில் கரி குடோனாக இது பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு சின்ன சின்ன பராமரிப்பு பணி செய்து அவையே தற்போது தீய ணைப்பு துறை அலுவலக மாக பயன்படுத்த ப்பட்டு வருகிறது.
இங்கு தான் தீயணைப்பு துறை வீரர்கள் இரவிலும் படுத்து உறங்கி அவசர காலத்துக்கு புறப்பட்டு செல்லும் சூழல் உள்ளது. ஆனால் இந்த கட்டிடம் முழுமையாக பராமரிக்கப் படாத காரணத்தினால் ஒவ்வொரு மழைக்கும் மழை நீர் உள்ளே ஒழுகுகிறது. அதே போன்று நேற்று இரவு மழை பெய்த போதும் மழை தண்ணீர் உள்ளே ஒழுகியது. கட்டிடத்தின் உடற்பயிற்சி கூடத்தில் சுவர் ஒரு பக்கம் இடிந்து விழுந்தது.
இந்த மோசமான நிலையிலும் தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். தீயணைப்பு வீரர் உடை, தீயணைப்பு சாதனங்கள் மழையில் நனைந்துள்ளன. தரை முழு வதும் ஈரம் படர்ந்துள்ளது.
பல இடங்களில் தரையில் பள்ளம் உள்ளது. இதனால் தீயணைப்பு வீரர்கள் மன உளைச்சலோடு பணியாற்றி வருகின்றனர்.
- துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
- கரசூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
சேதராப்பட்டு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறஇருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை சேதராப்பட்டு கிராமம், சேதராப்பட்டு பழைய காலனி, சேதராப்பட்டு புதிய காலனி, முத்தமிழ் நகர் ஒரு பகுதி மற்றும் இதனை தொடர்ந்து மதியம் 12 மணி முதல் 3 வரை சேதராப்பட்டு கிராமம் ஒரு பகுதி, கரசூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
- பி.ஏ பி.எட்., மற்றும் பி.எஸ்.சி.பி.எட். ஒருங்கிணைந்த 4 ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய பொது நுழைவு தேர்வை எழுத வேண்டும்.
புதுச்சேரி::
புதுவை பல்கலைக் கழகத்தில் இந்த கல்வியாண்டில் பி.ஏ பி.எட்., மற்றும் பி.எஸ்.சி.பி.எட். ஒருங்கிணைந்த 4 ஆண்டு பட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படிப்பில் சேர தேசிய தேர்வு முகமை நடத்தும் தேசிய பொது நுழைவு தேர்வை எழுத வேண்டும். இப்படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் வருகிற 19-ந் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இப்படிப்பில் சேர கல்வித்தகுதி விபரம் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- அனைத்து போலீஸ்நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- இந்த உத்தரவை பின்பற்றி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கேமரா பொருத்த டெண்டர் விட்டது.
புதுச்சேரி:
நாட்டின் அனைத்து போலீஸ்நிலையங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுவை அரசும் இந்த உத்தரவை பின்பற்றி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கேமரா பொருத்த டெண்டர் விட்டது.
முதல்கட்டமாக உருளையன்பேட்டை, ஓதியஞ்சாலை போலீஸ் நிலையங்களில் கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்பின் பிற போலீஸ்நிலையங்களில் கேமரா பொருத்தப்பட உள்ளது.
போலீஸ் நிலையங்களில் பொருத்தப்படும் கேமரா பதிவுகளை அந்தந்த போலீஸ் நிலையங்களில் பார்க்க முடியாது. கேபிள் வழியாக சீனியர் எஸ்.பி. மற்றும் போலீஸ் சித்ரவதைக்கு எதிரான கமிட்டி அலுவலகத்தில் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பெரிய கடை போலீசார் சபிதாவை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
- போலீசார் சபிதா, சந்தோஷ்குமார் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கதிரவன் மகள் சபிதா(20). சென்னையில் தனியார் கல்லூரியில் பி.ஏ. இறுதி யாண்டு படித்து வருகிறார்.
இவர் நேற்று மாலை 5 மணிக்கு புதுவை டி.ஜி.பி. அலுவலகம் எதிரே அமர்ந்து தர்ணா செய்தார். பெரிய கடை போலீசார் சபிதாவை அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது 2 ஆண்டுக்கு முன் சின்ன காலாப்பட்டை சேர்ந்த சந்தோஷ்குமார்(22) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு, காதலித்தோம். திருமணம் செய்துகொள்வ தாகக்கூறி அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
என்னை சென்னையில் தங்க வைத்து படிப்பு, விடுதி செலவுகளை செய்தார்.
சில மாதம் முன் இருவரும் தனி வீடு வாடகை எடுத்து தங்கினோம். திருமணத்திற்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாறினேன். திடீரென கடந்த 29-ந் தேதி என்னை திருமணம் செய்ய முடியாது, வீட்டை விட்டு வெளியேறும்படி துரத்தினார்.
மன உளைச்சலால் விஷம் குடித்து சிகிச்சை பெற்று திரும்பினேன். அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தன்னை ஏமாற்றிய காதலனோடு சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.
போலீசார் சபிதா, சந்தோஷ்குமார் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதைதத்தொடர்ந்து சபிதா, சந்தோஷ்குமார் போலீசார் முன்னிலையில் மாலை மாற்றிக்கொண்டு மணமக்களாக வீட்டுக்கு புறப்பட்டனர்.
- மாநில அளவிலான 3 நாள் கூடோ பயிற்சி முகாமை உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டரங்கத்தில் நடத்தியது.
- கூடோ வீரர்கள்-வீராங்கனைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
புதுச்சேரி:
அகில இந்திய கூடோ சங்கமும் புதுவை மாநில கூடோ சங்கமும் இணைந்து புதுவை மாநில அளவிலான 3 நாள் கூடோ பயிற்சி முகாமை உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டரங்கத்தில் நடத்தியது.
இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கூடோ வீரர்கள்-வீராங்கனைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
பின்னர் பயிற்சி பெற்ற வீரர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பாட்டன. நிகழ்ச்சிக்கு புதுவை கூடோ சங்க தலைவர் கராத்தே வளவன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சந்தோஷ் குமார் முன்னிலை வகித்தார்.
இதில் கவுரவ விருந்தி னராக கலந்து கொண்ட கோத்தாரி மேல்நிலைப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் பங்கஜ் கோத்தாரி மற்றும் தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில் அகில இந்திய கூடோ பொருளாளர் ஜாஸ்மின் மகானா, சீனியர் பயிற்சியாளர்கள் மொகல் சாகித்யா, ராணா, நிர்வாகிகள் கோவிந்தராஜ், நடராஜ், செந்தில்வேல், பாலச்சந்தர், ஆறுமுகம், லட்சுமணன், கதிர்காமம் அசோக், பாலாஜி தியேட்டர் அசோக், காலப்பட்டு செல்வம், அண்ணா நகர் செல்வம், மகேஷ், காலாப்பட்டு சசிகுமார், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அதிகாரிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவு
- குப்பைகள் தேங்காமல் இருக்க அவற்றை உடனடி யாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
புதுச்சேரி:
புதுவையில் பெய்து வரும் தொடர் மழையால் மணவெளி தொகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர்கள் சரஸ்வதி, அகிலன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மணவெளி தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் குப்பைகள் தேங்காமல் இருக்க அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.






