என் மலர்
புதுச்சேரி
- அரசு மருத்துவ மனையில் ஆபரேஷன் செய்து கொண்டார்.
- அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து ராஜூவை மீட்டனர். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை குயவர் பாளையம் பகுதியை ராஜூ (வயது 65).
இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 2 மாதங்களுக்கு முன்பு புதுவை அரசு மருத்துவ மனையில் ஆபரேஷன் செய்து கொண்டார். அதன் பின்பு அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு கொண்டிருந்தது. சரியாக சாபிடமுடியாமல் இருந்தார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார். நேற்று மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். வெளியே சென்றிருந்த அவரது மனைவி ஜெயா வீட்டிற்கு வந்த போது ராஜூ தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து ராஜூவை மீட்டனர். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ராஜூவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும்வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து உருளைபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கெஸ்ட் ஹவுஸ் ஊழியர்கள் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று குணமானதும் அழைத்து வந்தனர்.
- அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கணபதிசெட்டிகுளம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதியார் சாவடியில் உள்ள பிரபல தனியார் கெஸ்ட் ஹவுஸில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சஞ்சய் பகவான் (வயது54), என்பவர் மசாஜ் செய்பவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மசாஜ் செய்வது வழக்கம். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
கெஸ்ட் ஹவுஸ் ஊழியர்கள் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று குணமானதும் அழைத்து வந்தனர். பின்னர் தொடர்ந்து அவர் மசாஜ் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கணபதிசெட்டிகுளம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சஞ்சய் பகவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- முருங்கப்பாக்கம் அரசு பள்ளியில் நடைபெற்றது.
- பள்ளி துணை ஆய்வாளர் குமார் ஸ்மார்ட் டிவியை மாணவர்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்பில் ஸ்மார்ட் டிவி திறப்பு விழா, கற்றலில் சிறந்து விளக்கிய மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் குமார் ஸ்மார்ட் டிவியை மாணவர்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார். ஆசிரியர் பாரதிராஜா வரவேற்றார். ஆசிரியர் பிரபு நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கீதா, எழிலரசி, அவந்தி, தேவி, அழகம்மாள், பங்கஜவள்ளி ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை
- நீரழிவு நோயால் 2 நாட்கள் முன்பு அவரின் இடதுகால் சுண்டுவிரல் வெட்டி அகற்றப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை காமாட்சியம்மன் கோவில் சொந்தமான நிலம் ரெயின்போ நகரில் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் போலி ஆவணம் தயாரித்து விற்ற வழக்கில் 13 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
போலி ஆவணம் பதிவு செய்த சார்பதிவாளர் சிவசாமி கடந்த 20-ந் தேதி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன்கோரி புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
சிறையிலிருந்த சிவசாமிக்கு கடந்த 28-ந் தேதி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நீரழிவு நோயால் 2 நாட்கள் முன்பு அவரின் இடதுகால் சுண்டுவிரல் வெட்டி அகற்றப்பட்டது. இதையடுத்து சிவசாமி சார்பில் ஆஜரான வக்கீல் சம்பத், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற ஜாமீன் கோரினார்.
அரசு தரப்பில் வக்கீல் லோகேஸ்வரன் ஆஜரானார். மருத்துவ கண்காணிபபாளர் அறிக்கை, சிகிச்சை ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது. இதைடுத்து நீதிபதி மோகன், சிவசாமி மேல் சிகிச்சை பெற வரும் 18-ந் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கினார். அன்று சிவசாமி கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.
மருத்துவ சிகிச்சை தொடர்ந்தால் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.இந்த வழக்கில் முன்ஜாமீன்கோரி அப்போதைய மாவட்ட பதிவாளரும், தற்போதைய நில அளவைத்துறை இயக்குனருமான ரமேஷ், அப்போதைய தாசில்தாரும், தற்போது மீன்வளத்துறை இயக்குனரமாக உள்ள பாலாஜி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நிலுவையில் உள்ளது. இந்த அதிகாரிகள் நீண்ட விடுப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் அதிகாரிகள் ரமேஷ், பாலாஜி ஆகியோரை குற்றவாளிகளாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கில் சேர்த்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். இதனால் விரைவில் அதிகாரிகள் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
- 2023-ம் ஆண்டு ஒரு கிலோ பஞ்சு 45 ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
- தற்போது பெய்து வரும் கோடை மழையினால் பருத்தி விவசாய நோய் தொற்று ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில், 3 போகம் நெல் விளைந்த பூமியில் படிப்படியாக பருத்தி விவசாயத்தை நோக்கி விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஆயிரத்து 200 ஏக்கர் நிலப்பரப்பில் பருத்தி பயிரிடப்பட்டது. இந்த ஆண்டு 4 ஆயிரத்து 500 ஏக்கரில் பருத்தி பயிரிடப் பட்டுள்ளது. 2022-ல் ஒரு கிலோ பஞ்சு ரூபாய் 120க்கு கொள்முதல் செய்யப்பட்டது. 2023-ம் ஆண்டு ஒரு கிலோ பஞ்சு 45 ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. பருத்தி விவசாயிகள் செம்பேன், வெள்ளை பூச்சி, மாவு பூச்சி நோய் பாதிப்புகளில் இருந்து பருத்தி விவசாயத்தை பாதுகாக்க பெருமளவு பணம் செலவழிக்க வேண்டி உள்ளது.
உரிய காலத்தில் கடனை பெற்றாவது தடுப்பு நடவடிக்கை செய்யத் தவறினால் ஒட்டுமொத்த பருத்தி விவசாயமும் அழிந்துவிடும் ஆபத்தை எதிர் நோக்கி உள்ளனர். மேலும் வழக்கத்திற்கு மாறாக தற்போது பெய்து வரும் கோடை மழையினால் பருத்தி விவசாய நோய் தொற்று ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது.
மாநில அரசு பருத்தி விவசாயிகள் வாழ்வை காத்திட ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமும், பயிர் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து காப்பீட்டுத் தொகை ரூ.30 ஆயிரம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில விவசாயிகளின் பயிர் கடன்களை அரசு அறிவித்தபடி ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மரத்தினை கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
- அவரின் 2 கால்களிலும் 4 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கழுத்திலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு தீயணைப்பு நிலையத்தில் டிரைவராக பணிபுரிபவர் குமார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவையில் பலத்த சூறை காற்றுடன் கனமழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்தது. புதுவையில் சுமார் 100-டன் மரக்கழிவுகள் வெட்டி அகற்றப்பட்டது.
இந்த பணியில் புதுவை உள்ளாட்சி, தீயணைப்புத்துறை வீரர்கள் தீவிரமாக பணியாற்றினர்.
புதுவை ஜிப்மர் வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியிலிருந்த பெரிய மரம் சாய்ந்து பின்பக்கம் சுப்பையா நகரில் உள்ள குடியிருப்பில் வீடுகளின் மேல் விழுந்தது. இந்த மரத்தினை கோரிமேடு தீயணைப்பு வீரர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு துணையாக தீயணைப்பு வாகன டிரைவர் குமாரும் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பெரிய மரக்கிளை அவரின் மீது விழுந்தது.
இதில் குமார் படுகாய மடைந்தார். உடனடியாக அவர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த விபத்தில் அவரின் 2 கால்களிலும் 4 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கழுத்திலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுவை அரசு தலைமை ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கேள்விப்பட்ட அமைச்சர் சாய் சரவணக்குமார், அங்காளன் எம்.எல்.ஏ., அரசு செயலர் முத்தம்மா ஆகியோர் அவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அவர் குணமடைய பல மாதம் ஆகும் என டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த குமார் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் நிவாரண உதவி அளிக்க வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
- வார விடுமுறை நாட்களில் அண்டைமாநிலங்களில் இருந்து மது பிரியர்கள் புதுவைக்கு படையெடுத்து வருகின்றனர்.
- புதுவையில் தடுக்கி விழுந்தால் மதுக்கடைகளிலும், மதுபார்களிலும் தான் விழ வேண்டும் என்ற எண்ணிக்கையில் கடைகள் உள்ளது.
புதுச்சேரி:
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் மது நுகர்வோர்களாக உள்ளனர்.
புதுவையின் அண்டை மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் அரசின் மதுபான கழகங்கள் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் குறிப்பிட்ட சில மது வகைகள் மட்டும்தான் இந்த மாநிலங்களில் கிடைக்கும். ஆனால் புதுவையில் மது வகைகள் மட்டும் 900 வகைகளும், பீரில் 35 வகைகளும், வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட மது, ஒயின், பீர், வோட்கா ஆகியவையும் கிடைக்கிறது.
இது மதுபான பிரியர்களை கவர்ந்திழுக்கிறது. இதனால் வார விடுமுறை நாட்களில் அண்டைமாநிலங்களில் இருந்து மது பிரியர்கள் புதுவைக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதுவிற்பனை சூடுபிடிக்கிறது.
அதேநேரத்தில் புதுவையில் தடுக்கி விழுந்தால் மதுக்கடைகளிலும், மதுபார்களிலும் தான் விழ வேண்டும் என்ற எண்ணிக்கையில் கடைகள் உள்ளது.
சமீபத்தில் சுற்றுலா பயணிகளை கவர ரெஸ்டோ பார்களை புதிதாக உருவாக்கியுள்ளனர். இந்த பார்களும் அவ்வப்போது புதிது, புதிதாக திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் மதுக்கடைகளில் கடுமையான வியாபார போட்டி நிலவுகிறது. மாநில எல்லை பகுதிகளில் உள்ள கடைகளில் மது பிரியர்களை கவர 2 பீர் வாங்கினால், ஒரு பீர் இலவசம், ஒரு குவார்ட்டருக்கு முட்டை இலவசம் என பார்களில் உணவு வகைகளுக்கு சலுகைகள் வழங்கி மது பிரியர்களை ஈர்க்கின்றனர்.
நகர பகுதிகளில் இந்த போட்டி இன்னும் கூடுதலாக உள்ளது. ஏனெனில் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே மதுபார் உள்ளது. அறைகளிலும் மதுபானம் விநியோகம் செய்யப்படும். மது பிரியர்களை ஈர்க்க மதுக்கடைகள் முன்பு சலுகை விளம்பரங்களை வைக்கின்றனர். இணைய தளத்திலும் சலுகை விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.
சமீபத்தில் பீர் பிரியர்களை புதுவைக்கு வரவழைக்கும் வகையில் பீர் பஸ் சென்னையிலிருந்து புதுவைக்கு விடப்படும் என அறிவித்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பீர் பஸ் திட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே கிழக்கு கடற்கரை சாலையில் தனியாக பெண்களுக்கென மதுபார் திறக்கப்பட்டது.
இதில் பெண்களே மதுவை விநியோகம் செய்வார்கள், சலுகைகள் என அறிவிக்கப்பட்டது. இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஏற்கனவே நாடு முழுவதும் மது வகைகளுக்கு விளம்பரம் செய்யக்கூடாது என சட்டம் உள்ளது. இதையும் மீறி புதுவையில் மதுபான கடைகளின் முன்பும், இணைய தளத்திலும் சலுகைகள் குறித்த விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.
இதற்கு புதுவை கலால்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுவையில் உள்ள மதுபார்கள், விடுதிகள் விற்பனை தொடர்பான சலுகைகள், பெண்களுக்கு மது இலவசம், பரிசு பொருட்கள் போன்ற சுவரொட்டிகள், பதாகைகள், இணையதளத்தில் விளம்பரங்கள் செய்வதாக தெரிகிறது.
இது கலால்விதிகளின்படி தடை செய்யப்பட்டுள்ளது.
மதுபான விற்பனை உரிமம் பெற்றவர்கள் தங்கள் மதுபான கடைகள், உணவகம், விடுதிகள், சமூகவலைதளங்களில் உள்ள தகவல்களை உடனடியாக நீக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர்.
- மர்மநபர் ஒருவர், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
- பெண்ணின் சார்பில் நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அடுத்த நெட்டப்பாக்கம் அருகே உள்ள கரியமாணிக்கம்பேட் பகுதியை சேர்ந்தவர் 33 வயது வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்.
இவர் இரவு தனது கணவருடன் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர், திடீரென அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த பெண் திடுக்கிட்டு எழுந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் அருகில் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தனது கணவரை எழுப்பினார். அதற்குள் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் சார்பில், நெட்டப்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பிருதிவிராஜ் (வயது 31) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை காண்பித்து அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்தது அவர் தானா? என விசாரித்தனர். ஆனால் அந்த பெண்ணால் வாய் பேச முடியாது என்பதால் அவர்தானா? என்பதை உறுதிசெய்ய முடியவில்லை.
இதையடுத்து அந்த பெண்ணையும், பிருதிவிராஜையும் புதுச்சேரி நலத்துறை சார்பில் செயல்படும் வாய் பேச முடியாதவர்களுக்கான பாடசாலைக்கு அழைத்து வந்தனர். அங்குள்ள ஆசிரியர்களை கொண்டு அந்த பெண்ணிடம் செயல் விளக்கம் பெறப்பட்டது.
அதை வைத்து பார்க்கும் போது, அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டது பிருதிவிராஜ் தான் என்பது உறுதியானது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் போலீசார் அடைத்தனர்.
- புதுவை முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி
- இவரது மனைவி புஷ்பா இவர்களது மகள் மதினா
புதுச்சேரி:
புதுவை முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி இவரது மனைவி புஷ்பா இவர்களது மகள் மதினா வயது 14) இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மூர்த்தியும் அவரது மனைவி புஷ்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர். இதனால் மதினா அதே பகுதியில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.
இதற்கிடையே தாய்-தந்தை பிரிந்து வசித்து வந்ததால் மதினா மன வருத்தத்தில் இருந்து வந்தார். ஒரு சில முறை தற்கொலைக்கும் முயன்றார். அப்போதெல்லாம் அவரது சித்தி-சித்தப்பா ஆகியோர் தடுத்து சமாதானம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மதினாவின் சித்தி-சித்தப்பா பொருட்கள் வாங்க கடைக்கு சென்றனர். அப்போது தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த மதினா வீட்டின் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.
பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய மதினாவின் சித்தி-சித்தப்பா வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். சந்தேகமடைந்து அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது மதினா தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தி னர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் இருந்து மதினாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மதினா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பாலய சுவாமிகளின் 12-ம் ஆண்டு குருபூஜை மற்றும் மலர் வெளியீட்டு விழா நடந்தது.
- பெண்கள் கலை அறிவியல் கல்லூரி செயலர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
புதுச்சேரி:
மயிலம் பொம்மபுர ஆதீனம் 19-ம் பட்டம் குருமகா சன்னிதானம் சிவஞான பாலய சுவாமிகளின் 12-ம் ஆண்டு குருபூஜை மற்றும் மலர் வெளியீட்டு விழா நடந்தது.
பொம்மையார்பாளையம் மயிலம் பொம்மபுர ஆதின மட வளாகத்தில் நடந்த விழாவில் ராஜேஸ்வரி பெண்கள் கலை அறிவியல் கல்லூரி செயலர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவிற்கு மயிலம் பொம்மபுர ஆதீன 20-ம் பட்டம் குருமகா சன்னிதானம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி மலரை வெளியிட்டார். நிகழ்ச்சியில் விருத்தாச்சலம் குமாரதேவர் சுவாமி திருமடம் 24-வது வீர சிங்காசன குருமகா சன்னிதானம் தவத்திரு ரத்தின வேலாயுத சிவப்பி ரகாசம், திருப்பாதிரிப்பு லியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலய 9-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக ஆறுமுகம் மெய்ஞான சிவாச்சாரியார், தென்சேரிமலை ஆதீனம் நந்தவனத் திருமடம் சீர்வளர்சீர் முத்து சிவராமசாமி அடிகளார் ஆகியோர் ஆசியுரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் டெல்லி தமிழ் சங்கத் தலைவர் பெருமாள், பொதுச்செயலாளர் முகுந்தன், புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வர் சீனிவாசன், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி லட்சுமணன் ஆகியோர் மலரை பெற்று சிறப்புரையாற்றினர்.
புதுவை தமிழ்ச் சங்க ஆட்சி குழுவில் புதிதாக பொறுப்பேற்ற தலைவர் முத்து, துணைத்தலைவர்கள் ஆதிக்கேசவன், திருநாவுக்கரசு, செயலாளர் மோகன்தாசு, பொருளாளர் அருள்செல்வம், துணை செயலாளர் தினகரன், ஆட்சி குழு உறுப்பினர்கள் உசேன், ராஜா, சுரேஷ்குமார், சிவேந்திரன் ஆனந்தராசன் மற்றும் புதுவை அரசின் கலைமாமணி விருது பெற்ற வர்களுக்கும் பாராட்டு விழா நடந்தது.
இதே போல் புதிதாக பொறுப்பேற்ற சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பூபதி பெரியசாமி, ஆலோசனைக் குழு உறுப்பினர் அரங்க முருகையன் ஆகியோரும் பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சியில் மயிலம் ஸ்ரீ சிவபிரகாச சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி செயலர் விஸ்வநாதன் நன்றி கூறினார். பள்ளி முதல்வர் திருநாவுக்கரசு நிகழ்ச்சியை ெதாகுத்து வழங்கினார்.
- எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் உலக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
- மருத்துவ ஊழியர்களுக்கும் நிர்வாகத்தினர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் உலக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
அனைத்து சிறப்பு மருத்துவர்களுக்கும் மருத்துவ ஊழியர்களுக்கும் நிர்வாகத்தினர் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். இந்நிகழ்ச்சியில் பொறியாளர்.வாசு, நிர்வாக மேலாளர் தேவதாஸ் ஆகியோர் மருத்துவர்களை பாராட்டி உரையாற்றினர். மருத்துவ இயக்குனர் மருத்துவர்.எம்.ஆர்.வித்யா பேசும் போது கூறியதாவது:-
மருத்துவர்களின் சேவை சமூகத்தின் நலனுக்கு முக்கியமானது. புதுவையின் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது. சமீபத்தில் வெளியான இண்ட்-டயாப் ஆய்வின் படி நாட்டிலேயே அதிகமாக உடற்பருமன் உடையவர்கள் விகிதம் புதுவையில் இருப்பது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும், ஏனெனில் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் மாரடைப்பு, பக்கவாதம்ஏற்படும் அபாயமும் உடல் பருமனால் அதிகமாகிறது.
இதற்காக மருத்துவர்கள் மக்களிடம் உடற் பயிற்சி, உரிய உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர்.தேவநாதன் வாசு, மருத்துவர்.வரதராஜன் வாசு ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சந்திரவதனி மற்றும் மனிதவள மேலாளர் செலின் ஆகியோர் செய்திருந்தனர்.
- 2 ஆண்டு கால சாதனைகள் குறித்த துண்டறிக்கை உருளையன்பேட்டை தொகுதியில் வீடு வீடாக வழங்கப்பட்டது.
- புதுவையில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 969 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை உருளையன்பேட்டை தொகுதி பா.ஜனதா நிர்வாகி பிரபுதாஸ் தலைமையில் மத்திய மோடி ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனை மற்றும் புதுவை தேசிய ஜனநாயக கூட்டணியின் 2 ஆண்டு கால சாதனைகள் குறித்த துண்டறிக்கை உருளையன்பேட்டை தொகுதியில் வீடு வீடாக வழங்கப்பட்டது.
இந்த துண்டறிக்கையில் மத்திய மோடி அரசின் மூலம் புதுவை மக்களுக்கு வழங்கப்பட்ட திட்டங்கள் குறித்தும், குறிப்பாக புதுவையில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 969 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.
பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி மதிப்பில் 16,368 வீடுகள் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கட்டப்பட்டுள்ளது குறித்தும் மற்றும் புதுவைக்கு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்தும் அதேபோல் புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சியில் 2 ஆண்டுகளில் புதுவைக்கு செய்த நலத்திட்டங்கள் குறித்தும் இந்த துண்ட றிக்கையில் அச்சிடப்பட்டு வீடு வீடாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உருளையன்பேட்டை தொகுதி பா.ஜனதா தலைவி நாகம்மாள், மாவட்ட துணை தலைவர் பிரபு, ஓ.பி.சி. அணிமாவட்ட தலைவி கீதாலட்சுமி, எஸ்.சி. மோட்சா மாவட்ட தலைவர் வெற்றி, தொகுதி துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னாள் தலைவர் சக்திவேல் பொதுச் செயலாளர் மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






