என் மலர்
புதுச்சேரி
- பயிர் காப்பீடு பிரச்சார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு விளக்க கையேடு வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, மதகடிப்பட்டு உழவர் உதவியகம் மூலம் பி.ஸ்.பாளையம் கிராமத்தில் பயிர் காப்பீடு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பி.ஸ்.பாளையம், வாதானூர், சண்ணியாசிக்குப்பம், கலிஜித்தால்குப்பம், சிலுக்காரிப்பாளையம், குச்சிப்பாளையம், மதகடிப்பட்டு, மதகடிப்பட்டு பாளையம் கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண் அலுவலர் நடராஜன், விவசாயிகளை வரவேற்று, பயிர் காப்பீடு அவசியம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் பஜாஜ் அலையன்ஸ் காப்பீடு நிறுவனத்தின் மேலாளர் சக்திவேல், சொர்ணாவாரி பருவ நெல் பயிர் காப்பீடு, வாழை பயிர் காப்பீடு குறித்து விளக்கம் அளித்தார். பயிர் காப்பீடு பிரச்சார வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு விளக்க கையேடு வழங்கப்பட்டது.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை உதவிவேளாண் அலுவலர் பக்கிரி, கிராம விரிவாக்கப் பணியாளர் புவனேஸ்வரி, ஆத்மா மேலாளர் சிரஞ்சீவி, செயல் விளக்க உதவியாளர் வள்ளியம்மாள், அலுவலக உதவியாளர் சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.
- முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் நடைபெற்றது.
- கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வங்கியின் மூலம் 10-ம் வகுப்பு பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கி மாணவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
தலைமை விருந்தினராக பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி தலைமை மேலாளர் ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினராக வங்கியின் முதன்மை அதிகாரி அனுபாமா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான வங்கி கணக்கின் அவசியத்தை குறித்து விளக்கம் அளித்தனர்.
புதுவை மாநில ஒருங்கிணைந்த கோரிஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
தொழிலதிபர் சுதாகர், பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் துணை முதல்வர் வினோலியா டேனியல் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.
- கூட்டத்திற்கு இயக்கத்தின் பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.
- ஒரு நாள் பயிற்சி வகுப்பு வருகிற 15-ந் தேதி நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் மாதாந்திர கூட்டம் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு இயக்கத்தின் பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.
இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் கந்தசாமி, ராமர், சிவபாலன், சூரியமூர்த்தி, பாஸ்கர், கந்தசாமி, சீனிவாசன், இளமுருகன், சிவகுமார், செந்தில்குமார் மற்றும் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இயக்க அலுவலகத்தில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு வருகிற 15-ந் தேதி நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
- புதுவை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சம்மந்தன் கட்டுமான முறைகள் மற்றும் செயல்படுத்துதல் பற்றி விரிவுரையற்றினார்.
- மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி வாழ்த்துரை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கட்டிடவியல் துறை மாணவர்களுக்கான அத்தியாயம் இந்தியன் கான்கிரீட் இன்ஸ்டிட்யூட்டினால் நிறுவப்பட்டது.
நிகழ்ச்சியில் தக்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்ட ளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன் அறிவழகர் ஆகியோர் வரவேற்புரையாற்றினார்.
ஐ.சி.ஐ. தலைவர் என்ஜினீயர் சுரேஷ், துணை த்தலைவர் முருகானந்தம், செயலாளர் அஜித்சந்திரன் மற்றும் புதுவை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சம்மந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஐ.சி.ஐ. தலைவர் சுரேஷ், மாணவர்களுக்கு உறுப்பினர் சான்றிதழை வழங்கி பேசினார். அதனை தொடர்ந்து புதுவை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சம்மந்தன் கட்டுமான முறைகள் மற்றும் செயல்படுத்துதல் பற்றி விரிவுரையற்றினார்.
நிகழ்ச்சியில் கட்டிடவியல் துறை பேராசிரியர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கட்டிடவியல் துறைத்தலைவர் முனைவர் சுந்தரராமன் நன்றி கூறினார்.
- தொழிற்பயிற்சி மையம் எதிரில் சந்தேகப்ப டும்படியாக சில நாட்களாக லாரி ஒன்று நின்றுக் கொண்டிருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.
- 3 வெள்ளை நிற கேன்கள் இருந்தது. அதில் 105 லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கலால் துறை சார்பில போலி மதுபானம், எரிசாராயம் கடத்துவதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர் புதுவை முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மேட்டுப் பாளையம் பகுதியில் தாசில்தார் சிலம்பரசன், இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேட்டுப்பாளையம் தொழிற்பயிற்சி மையம் எதிரில் சந்தேகப்ப டும்படியாக சில நாட்களாக லாரி ஒன்று நின்றுக் கொண்டிருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வாகன எண்ணின் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த லாரி விசாகப்பட்டினத்தில் இருப்பது போல காட்டியுள்ளது.
இதனால் மேட்டுப்பா ளையத்தில் நின்றுக் கொண்டிருந்த வாகன எண் போலியானது என தெரியவந்தது. இதனையடுத்து லாரியை சோதனை செய்ததில், அதில் ரகசிய அறை இருந்தது. அதில் 3 வெள்ளை நிற கேன்கள் இருந்தது. அதில் 105 லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டது.
இதன் மதிப்பு ரூ.13 லட்சம் ஆகும். இதனையடுத்து அந்த போலி பதிவு எண் கொண்ட லாரியின் உரிமை யாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- மேற்கு போலீஸ் சூப்பிரண்டு வம்சீரதரெட்டி உத்தரவு
- சிறார்களிடம் விசாரணை மேற்கொள்ளும் போது உச்ச நீதிமன்ற அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
புதுச்சேரி
வில்லியனூர் போலீசார் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.
கூட்டத்தில் வில்லியனூர், மங்கலம், கரிக்கலாம்பாக்கம் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சீரதரெட்டி தலைமையேற்று பேசுகையில், அனைத்து போலீசாரும் பணியின் போது துரிதமாக செயல்படவேண்டும்.
போலீஸ் சரகத்திற்குள் எந்தவித பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு இருந்தாலும் அந்தந்த போலீஸ் நிலைய போலீசார் அதனை முன்கூட்டியே அறிந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க ரோந்து போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும். காலை, மாலை பள்ளி நேரங்களில் போக்குவரத்தை சரி செய்ய அனைத்து போலீசாரும் முன் வர வேண்டும்.
போலீசார் நடத்தும் வாகன சோதனையின் போது குடும்பத்தாருடன் செல்பவர்களை மறித்து விசாரிப்பதை தவிர்க்க வேண்டும். இதேபோல் வேலை விட்டு வரும் தொழிலாளர்களையும் வாகன சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தக் கூடாது.
மாலை 6 மணிக்கு மேல் பெண்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கக் கூடாது. ரவுடிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும்.
அவர்கள் சிறையில் இருந்தாலும் வெளியே இருந்தாலும் அவர்களுடைய நடத்தை களை கண்கா ணிப்பது அவசியம். போலீஸ் நிலைய ரவுடி பட்டியலில் உள்ள ரவுடிகளை கண்காணிக்கும் வகையில் அக்கம்பக்கத்தினர் மூலம் அவர்களுடைய நட மாட்டத்தை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்துக்கு இடையூறாக வணிக வளாகங்களில் வாசல்களில் நிறுத்தப்படும் வாகன ஓட்டிகளை எச்சரிக்க வேண்டும். சிறார்களிடம் விசாரணை மேற்கொள்ளும் போது உச்ச நீதிமன்ற அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்திற்கு வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ் பெக்டர் வேலு, குமார், மங்களம்போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா உள்ளிட்ட காவல் நிலைய தலைமை காவலர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
- வையாபுரி மணிகண்டன் திடுக் தகவல்
- சட்டசபையில் தன்மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ரூ.1 கோடி நஷ்டஈடு தருவதாக வாக்குமூலம் அளித்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் சி.பி.ஐ. இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான நில அபகரிப்பு பின்னணியில் ஆளும் கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு உண்டு. அவர் சட்டசபையில் தன்மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ரூ.1 கோடி நஷ்டஈடு தருவதாக வாக்குமூலம் அளித்தார். தற்போது அவரின் குற்றம் நிரூபணமாகியுள்ளது.
வில்லியனூரில் மணக்குள விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பொதுப் பதையாக காட்டி சுமார் 500-க்கும் மேற்பட்ட மனைகளை சிலர் ரூ.100 கோடிக்கு மேல் விற்றுள்ளனர். இதிலும் ஆளும் கட்சியில் முக்கிய பதவி யில் உள்ளவர்க ளுக்கு தொடர்பு உள்ளது. தற்போது மணக்குள விநாயகர் கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தாலும், கோவில் நிலத்தை பொதுப் பாதையாக ஏமாற்றி விற்றுள்ளனர். மனைகளை வாங்கிய 500-க்கும் மேற்பட்டோர் பாதையின்றி கடும் பாதிப்புக்கு ஆளாகி யுள்ளனர்.
எனவே கோவில் நிலத்தை பொது பாதையாக காண்பித்து மக்களை ஏமாற்றி மோசடி செய்த ஆளும்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை அரசியல்வாதிகளின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், ஆட்சியாளர்களின் மோசடிகளுக்கு துணை செல்லாமல் வழக்கு விசாரணை நடைபெற சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் தான் உண்மையான தகவல்கள் முழுமையாக வெளிவரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறைத்துறை ஐ.ஜி. எச்சரிக்கை
- அலைவரிசையை அதிகப்படுத்துவதால் சிறைச்சாலையில் செல்போன் சிக்னல் கிடைக்கிறது. சிறையில் சிறைவாசிகளை நல்வழிப்படுத்த எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்து வருகிறோம்.
புதுச்சேரி:
புதுவை காலப்பட்டு பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் செல்போன் அலைவரிசை கிடைக்காத வண்ணம் அலைவரிசையை தடுக்கும் டவர் கருவி அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிறையில் சிறை ஊழியர்கள் செல்போன் சிக்னலை பரிசோதனை செய்யும் போது அவ்வப்போது சிக்னல் வருவதாக புகார் தெரிவித்தனர். எனவே சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங்சாகர், அனைத்து செல்போன் நிர்வா கத்தையும் காலாப்பட்டு மத்திய சிறைக்கு அழைத்து விளக்கம் கேட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
சென்னை உயர்நீதிமன்றம், புதுவை அரசும் சிறையில் செல்போன் அலைவரிசை கிடைக்காத வண்ணம் செல்போன் நிறு வனங்க ளுக்கு உத்தரவிட்டுள்ளது. அலைவரிசையை அதிகப்படுத்துவதால் சிறைச்சாலையில் செல்போன் சிக்னல் கிடைக்கிறது. சிறையில் சிறைவாசிகளை நல்வழிப்படுத்த எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்து வருகிறோம்.
சிறை கண்கா ணிப்பாளர் கடந்த 15-ந் தேதி சிறையில் பரிசோதனை செய்யும் போது இரு செல்போன்கள் கைப்பற்றப்பட்டு காலப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஒரு சில காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்கள் செல்போன் அலைவரிசை சிறையில் கிடைக்காத வண்ணம் உறுதிப்படுத்த வேண்டும். மறுபடியும் அலைவரிசை கிடைத்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டத்தில் சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் பல்வேறு செல்போன் நிறுவன ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
- சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்த வாரிசுதாரர் பணிகள் உடனடியாக நிரப்பப்பட்டன.
புதுச்சேரி:
புதுவை மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் சமூக நலத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையில் மட்டும் கடந்த 30 ஆண்டு காலமாக பணியில் மரணம் அடைந்த ஊழியர்களின் வாரிசுதா ரர்களுக்கு வழங்க வேண்டிய அரசு பணி வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது.
ஆட்களை நிரப்பும்போது ஒவ்வொரு முறையும் 5 சதவீத வாரிசுதாரர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருந்த வாரிசுதாரர் பணிகள் உடனடியாக நிரப்பப்பட்டன. ஆதிதிராவிட நலத்துறையில் மட்டும் நிரப்பவில்லை.
எனவே ஆதி திராவிட நலத்துறையில் வாரிசுதாரர் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். டெபுடேஷன் மூலம் பணி செய்யக்கூடியவர்களை அந்தந்த துறைக்கு அனுப்பி விட்டு ஆதிதிராவிடர் நலத்துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பெண் ஆசையால் வாலிபர் கொடுக்கப்பட்டிருந்த லிங்கை க்ளிக் சென்றுள்ளார்.
- கட்டணம் செலுத்திய பிறகு அது மோசடி என்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இணையவழி மூலம் வேலை வாங்கி தருவதாகவும், கடன் வாங்கி தருவதாகவும் மர்ம நபர்கள் பணத்தை மோசடி செய்து வருகின்றனர்.
இதில் புதுச்சேரியை சேர்ந்த பலரும் சிக்கி தவிக்கின்றனர். சைபர் கிரைம் போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பயனில்லை. இதனிடையே இணையவழி மோசடிக்காரர்கள் தற்போது பெண் ஆசை காட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் ஒருவர் செல்போனில் ஆபாச படங்களை பார்த்து ரசித்து வந்துள்ளார். அப்போது அவரது செல்போனில் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதில் ஆன்லைனில் அழகிய பெண்களிடம் பேசலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பெண் ஆசையால் அந்த வாலிபர் அதில் கொடுக்கப்பட்டிருந்த லிங்கில் சென்றுள்ளார். அப்போது அதில் கட்டணம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்டணம் செலுத்தி சென்ற பிறகு அது மோசடி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது அக்கவுண்டில் இருந்த பணமும் எடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அந்த வாலிபர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதேபோல் ஒரே நாளில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம், வெளிநாட்டில் வேலை, கொரியரில் பொருட்கள் வந்துள்ளது. பான்கார்டு அப்டேட் என கூறி புதுச்சேரியை சேர்ந்த 9 பேரிடம் சுமார் ரூ 6 லட்சத்து 82 ஆயிரம் பணம் பறிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இணைய வழியில் அதிக லாப முதலீடுகள், வேலைவாய்ப்பு அல்லது வங்கிகளில் இருந்து, கொரியர்களில் இருந்து வரும் அழைப்புகளை உறுதி செய்யாமல் ஏற்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம்
- அகிலஇந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன செயலாளர் ரணியப்பன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 23-வது கோரிக்கை அமைப்பு பொதுமாநாடு கரிக்கலாம் பாக்கத்தில் நடந்தது.
மத்திய பணிக்குழு உறுப்பினர் முருகன் தலைமை வகித்தார். மாநாட்டுக்கு முருகன், அருள், பாரிஜாதவல்லி தலைமை வகித்தனர். ஏ.ஐ.சி.சி.டி.யூ. பொதுச் செயலாளர் புருஷோத்தமன் வரவேற்றார். அகிலஇந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளன செயலாளர் ரணியப்பன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.
சங்க அறிக்கையை மாநில செயலாளர் ஆறுமுகம் முன்வைத்தார். மார்க்சிஸ்டு லெனினிஸ்ட் கட்சி மாநில கமிட்டி உறுப்பினர் அருள், பெண்கள் கழக செயலாளர் விஜயா உரையாற்றினர். கவுரவ தலைவர் சோ.பாலசுப்பிரமணியன், தலைவராக முருகன், துணைத்தலைவர்களாக புருஷோத்தமன், முருகையன், மீனாட்சி உட்பட 21 பேர் புதிய செயற்குழு கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.
மாநாட்டில், கட்டுமான தொழிலாளர்களின் சட்ட கூலியை அக விலைப்படி யுடன் இணைத்து 2 மடங்காக உயர்த்த வேண்டும். குறைந்த பட்ச சம்பளம் ரூ.10 ஆயிரத்துக்கு குறையக் கூடாது.
கட்டுமான பொருட்கள் மலிவு விலையில் கிடைக்க புதுவை அரசு கட்டிட சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பைக்கை முதலில் யார் எடுப்பது என்பதில் தகராறு ஏற்பட்டது.
- மணிவண்ணன் கையில் வைத்திருந்த பேனா கத்தியால் சாதிக்பாஷா கன்னத்தில் குத்தினார்.
புதுச்சேரி:
புதுவை அருகே ஹோட்டலில் உணவு வாங்கும் போது பைக்கை யார் முந்தி எடுப்பது என்ற தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுவை அடுத்த தமிழக பகுதியான பெரியக்கோட்டகுப்பம் ஜாகிர் உசேன் வீதியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா (வயது 21) அங்குள்ள ஓட்டலில் உணவு வாங்க தனது மனைவியுடன் பைக்கில் வந்தார். அப்போது கோட்டக்குப்பம் அம்பேத்கர் வீதியைச் சேர்ந்த மணிவண்ணன் அதே ஓட்டலுக்கு உணவு வாங்க வந்தார்.
பின்னர் பைக்கை முந்தி எடுப்பதில் சாதிக் பாஷாவுக்கும் மணிவண்ணனுக்கும் இடையே தகராறு இருப்பு ஏற்பட்டு கைகலப்பானது. இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மணிவண்ணன் கையில் வைத்திருந்த பேனா கத்தியால் சாதிக்பாஷா கன்னத்தில் குத்தினார். இதில் சாதிக் பாஷாவுக்கு ரத்தம் கொட்டியது.
பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கோட்டக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்தி தப்பி ஓடிய மணிவண்ணனை தேடி வருகின்றனர்.






