search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consumer protection"

    • கூட்டத்திற்கு இயக்கத்தின் பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.
    • ஒரு நாள் பயிற்சி வகுப்பு வருகிற 15-ந் தேதி நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் மாதாந்திர கூட்டம் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு இயக்கத்தின் பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

    இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் கந்தசாமி, ராமர், சிவபாலன், சூரியமூர்த்தி, பாஸ்கர், கந்தசாமி, சீனிவாசன், இளமுருகன், சிவகுமார், செந்தில்குமார் மற்றும் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இயக்க அலுவலகத்தில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு வருகிற 15-ந் தேதி நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    • அரியலூரில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் தொடங்க முன்வர வேண்டும் என இளைஞர்களுக்கு குறைதீர் ஆணைய நீதிபதி அழைப்பு விடுத்தார்
    • நுகர்வோர் புகார் தாக்கல் செய்தால் வழக்கு தாக்கல் செய்த 90 நாள்களில் தீர்ப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

    அரியலூர்:

    அரியலூரில் நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினக் கருத்தரங்கில் அரியலூர் ஆணையத்தின் நீதிபதி வீ.ராமராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, ஒவ்வொரு ஆண்டும் தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடி வருகிறோம். இதனை கொண்டாடும் போது கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதில் கலந்து கொள்ளும் மக்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றியும் கருத்துக்களைப் பற்றியும் செய்திகள் வெளியிடுவதன் மூலம் குக்கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை பொதுமக்களிடையே நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் செய்தி நிறுவனங்களின் பங்கு மகத்தானது. அரியலூரில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஆணையம் தொடங்கப்பட்ட மே 2018 முதல் கடந்த ஜூன் 2022ம் ஆண்டு வரை நான்கு ஆண்டுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் 86. ஆனால் கடந்த ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரை அதாவது ஆறு மாதங்களில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் 250 வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளது. நுகர்வோர் புகார் தாக்கல் செய்தால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது போல வழக்கு தாக்கல் செய்த 90 நாள்களில் தீர்ப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரியலூர் மாவட்டத்தை நுகர்வோர் பாதுகாப்பில் முன்மாதிரி மாவட்டமாக மாற்றிட மாவட்டத்திலுள்ள இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்களை தொடங்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதற்கான ஏற்பாடுகளை கிருஷ்ணன், பாஸ்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


    ×