என் மலர்
புதுச்சேரி

நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் மாதாந்திர கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
நுகர்வோர் பாதுகாப்பு இயக்க கூட்டம்
- கூட்டத்திற்கு இயக்கத்தின் பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.
- ஒரு நாள் பயிற்சி வகுப்பு வருகிற 15-ந் தேதி நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் மாதாந்திர கூட்டம் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு இயக்கத்தின் பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.
இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் கந்தசாமி, ராமர், சிவபாலன், சூரியமூர்த்தி, பாஸ்கர், கந்தசாமி, சீனிவாசன், இளமுருகன், சிவகுமார், செந்தில்குமார் மற்றும் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இயக்க அலுவலகத்தில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு வருகிற 15-ந் தேதி நடத்துவது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
Next Story






