என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மனைவியுடன் ஓட்டலுக்கு வந்த வாலிபருக்கு கத்திக்குத்து
- பைக்கை முதலில் யார் எடுப்பது என்பதில் தகராறு ஏற்பட்டது.
- மணிவண்ணன் கையில் வைத்திருந்த பேனா கத்தியால் சாதிக்பாஷா கன்னத்தில் குத்தினார்.
புதுச்சேரி:
புதுவை அருகே ஹோட்டலில் உணவு வாங்கும் போது பைக்கை யார் முந்தி எடுப்பது என்ற தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுவை அடுத்த தமிழக பகுதியான பெரியக்கோட்டகுப்பம் ஜாகிர் உசேன் வீதியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா (வயது 21) அங்குள்ள ஓட்டலில் உணவு வாங்க தனது மனைவியுடன் பைக்கில் வந்தார். அப்போது கோட்டக்குப்பம் அம்பேத்கர் வீதியைச் சேர்ந்த மணிவண்ணன் அதே ஓட்டலுக்கு உணவு வாங்க வந்தார்.
பின்னர் பைக்கை முந்தி எடுப்பதில் சாதிக் பாஷாவுக்கும் மணிவண்ணனுக்கும் இடையே தகராறு இருப்பு ஏற்பட்டு கைகலப்பானது. இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மணிவண்ணன் கையில் வைத்திருந்த பேனா கத்தியால் சாதிக்பாஷா கன்னத்தில் குத்தினார். இதில் சாதிக் பாஷாவுக்கு ரத்தம் கொட்டியது.
பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கோட்டக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்தி தப்பி ஓடிய மணிவண்ணனை தேடி வருகின்றனர்.






