என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மானிய தொகை கிடைக்காமல் கட்டத்தொடங்கி பாதிநிலையில் கிடக்கும் வீடுகள்
    X

    முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் நேரு எம்.எல்.ஏ. மனு அளித்த காட்சி.

    மானிய தொகை கிடைக்காமல் கட்டத்தொடங்கி பாதிநிலையில் கிடக்கும் வீடுகள்

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
    • பயனாளிகளுக்கு மானிய தொகை கிடைக்காமல் காத்து கொண்டிருக்கிறார்கள்.

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பெருந்தலைவர் காமராஜர் கல் வீடு கட்டும் திட்டத்தின் பெயரை மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் பிரதமர் கல் வீடு கட்டும் திட்டமாக மாற்றிய பிறகு குழப்ப நிலை உருவாகி பயனாளிகளுக்கு மானிய தொகை கிடைக்காமல் காத்து கொண்டிருக்கிறார்கள்.

    இதனால் கட்ட தொடங்கிய வீட்டை எப்போது முடிப்போம் என்று பயனாளிகள் தவிக்கி றார்கள். கடந்த 2021 தேர்தலுக்கு பிறகு திட்டத்தின் மூலம் வீடு கட்ட மானிய தொகைக்காக விண்ணப்பித்த பயனாளிகள் ஒருவருக்கு கூட இதுநாள் வரை மானிய தொகையில் ஒரு தவணை கூட கொடுக்கப்படாமல் இருக்கிறது.

    இந்த திட்டத்தின் மூலம் பயனடையும் விதமாக விண்ணப்பத்தவர்கள் அவர்கள் குடியிருந்த பழைய குடியிருப்பை இடித்துவிட்டு வாடகை வீடு களுக்கு சென்று வாடகை செலுத்த முடியாமல் கடனாளிகளாக மாறி கொண்டிருக்கிறார்கள்.

    எனவே இந்த திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து பயனாளிகளை கடன்களிலிருந்து மீட்டு அவர்களுக்கு உடனடியாக மானிய தொகை கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு நேரு எம்.எல்.ஏ. மனுவில் கூறியு ள்ளார்.

    Next Story
    ×