என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மத்திய அரசு பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம்
- ஓராண்டில் முடிக்க வேண்டிய திட்டங்கள் பட்டியலை தயாரிக்க மாநில அரசு உத்தரவிட்டது.
- கூட்டத்தில் பணிகளை துரிதப்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற 2017-ல் மத்திய அரசு அனுமதியளித்தது.
ரூ.930 கோடி பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இந்த பணிகளை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்க மத்திய அரசு காலநீட்டிப்பு வழங்கியுள்ளளது. ஓராண்டில் முடிக்க வேண்டிய திட்டங்கள் பட்டியலை தயாரிக்க மாநில அரசு உத்தரவிட்டது.
இதன்படி புதுவையில் 133 திட்ட பணிகளில் முன்னுரிமை அடிப்படை யில் 26 திட்ட பணிகளை எடுக்க ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் முடிவு செய்தது. இந்த பணிகளை அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என புதுவை அரசு கெடு விதித்துள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் பொதுப் பணித்துறை, தேசிய கட்டுமான கழகம் மூலம் சுமார் ரூ.400 கோடி அளவில் நடந்து வருகிறது.
இந்த பணிகளை துரிதப்படுத்த வருகிற 5-ந் தேதி அரசு செயலர் மணிகண்டன், மத்திய அரசு பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் பணிகளை துரிதப்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.






