search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வில்லியனூரில் வேளாண் பல்பொருள் அங்காடி
    X

     வேளாண் பல்பொருள் அங்காடியை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. திறந்து வைத்த காட்சி.

    வில்லியனூரில் வேளாண் பல்பொருள் அங்காடி

    • அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் எதிர்க்கட்சி தலைவர் சிவா பங்கேற்பு
    • விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகிறது

    புதுச்சேரி:

    திருக்காமீஸ்வரர் மேம்பட்ட வேளாண் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் பழனம் வேளாண் பல்பொருள் அங்காடி திறப்பு விழா வில்லியனூர் நாவிதர் மடம் எதிரில் நடந்தது.

    பழனம் வேளாண் நிறுவனத்தின் தலைவர் குலசேகரன் தலைமை தாங்கினார். செயலர் ராமமூர்த்தி வரவேற்றார். உறுப்பினர்கள் இளஞ்செழியபாண்டியன், வேணுகோபால், கோவிந்தன், விஜயகுமார், ஜெனார்த்தனன், புண்ணியகோடி, ராஜா, வீரப்பன், ராஜசேகர், தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் முன்னிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா அங்காடியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். அங்காடியில் வில்லியனூர் தாலுக்கா பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகிறது

    நிகழ்ச்சியில், வேளாண் துறை இயக்குநர் பாலகாந்தி, மாவட்ட துணை ஆட்சியர் தெற்கு முரளிதரன், கூடுதல் வேளாண் இயக்குநர் வசந்தகுமார், துணை இயக்குநர் ராஜேஸ்வரி, வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ஆறுமுகம், டாக்டர் முருகன் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், இரமணன், சபரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×