என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மதுக்கடையில் பயங்கர மோதல்-2 பேருக்கு பாட்டில் குத்து
    X

    கோப்பு படம்.

    மதுக்கடையில் பயங்கர மோதல்-2 பேருக்கு பாட்டில் குத்து

    • மது குடித்து கொண்டிருந்த 3 பேர் பிரவீனிடம் தகராறு செய்தனர்.
    • சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பாட்டிலால் குத்திய மர்ம நபர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை டோபிகானா பகுதியை சேர்ந்தவர் பிரவீன்(வயது32). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு இவர் பிருந்தாவனம் பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடித்தார்.

    அப்போது எதிரே அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த 3 பேர் பிரவீனிடம் தகராறு செய்தனர். இதையடுத்து பிரவீன் செல்போன் மூலம் தனது தம்பி பிரசாந்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே பிரசாந்த் தனது நண்பர் சுந்தரத்துடன் மதுக்கடைக்கு வந்தார். அப்போது பிரவீனிடம் தகராறு செய்த கும்பலை அவர்கள் தட்டிக்கேட்டனர்.

    இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் பிரசாந்த் மற்றும் அவரது நண்பர் சண்முகசுந்தரம் ஆகிய 2 பேரையும் மது பாட்டிலால் குத்தினர். இதில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் மது பாட்டிலால் தாக்கிய கும்பல் தப்பியோடி விட்டது. இதையடுத்து மோதலில் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து மதுக்கடையில் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து பாட்டிலால் குத்திய மர்ம நபர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×