என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சூறைக்காற்றில் முறிந்து விழுந்த 100 டன் மரக்கழிவுகள் அகற்றம்
    X

    சேதமடைந்த மர கிளைகள் அகற்றப்பட்ட காட்சி.

    சூறைக்காற்றில் முறிந்து விழுந்த 100 டன் மரக்கழிவுகள் அகற்றம்

    • சீரமைப்பு பணிகள் தீவிரம்
    • சட்டசபை வளாகம் எதிரே அம்பேத்கர் சிலை அருகே இருந்த மரம் வேலியை தாண்டி சட்டசபை வளாகத்தின் தடுப்பு கம்பிகளில் விழுந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    கனமழையுடன் வீசிய சூறாவளி காரணமாக புதுவை நகர பகுதிகளில் இருந்த ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது. பெரிய மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது. நகர பகுதியில் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. பல இடங்களில் மின்வயர்களில் மரக்கிளைகள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் போக்குவரத்து குறைவாக இருந்தது. அதேநேரத்தில் அரசின் பொதுப்பணித்துறை, மின்துறை, தீய ணைப்புத்துறை, உள்ளாட்சித் துறையினர் களத்தில் இறங்கினர். சாய்ந்து கிடந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். முறிந்த கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.

    சுமார் 100 டன் எடை கொண்ட மரக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. அதோடு சூறாவளியில் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கும் பணியும் நடந்தது. சட்டசபை வளாகம் எதிரே அம்பேத்கர் சிலை அருகே இருந்த மரம் வேலியை தாண்டி சட்டசபை வளாகத்தின் தடுப்பு கம்பிகளில் விழுந்தது.

    இதனால் 2 இரும்பு வேலிகளும் சேதமடைந்தது. சட்டசபை வளாகத்தில் இதை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அறுந்து விழுந்த மின்வயர்கள் உடனுக்குடன் சீரமைக்கும் பணியில் மின்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×