என் மலர்
புதுச்சேரி
- மத்திய அரசு ஆயுஷ்மான் பவா என்ற திட்டம் தொடங்கி உள்ளது.
- இத்த திட்டத்தின் தொடக்க விழா குஜராத் ராஜ்பவனில் இன்று நடந்தது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் மக்களுக்கு சுகாதாரத் துறையின் செயல்பாடுகள், திட்டங்கள் சென்றடையும் விதமாக மத்திய அரசு ஆயுஷ்மான் பவா என்ற திட்டம் தொடங்கி உள்ளது.
இத்த திட்டத்தின் தொடக்க விழா குஜராத் ராஜ்பவனில் இன்று நடந்தது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி காணொளி மூலம் இன்று கம்பன் கலையரங்கில் ஒளிபரப்பப்பட்டது.
தொடர்ந்து புதுவை அரசின் சார்பில் சந்தி ராயன் என்ற ஆரோக் கியத்தை நோக்கி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. விழாவுக்கு கவர்னர் தமிழிசை, முதல்- அமைச் சர் ரங்கசாமி ஆகியோர் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். சுகாதாரதுறை செய்லாளர் முத்தம்மா வரவேற்றார்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய் ஜெ. சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, ஜான்குமார், சிவசங்கர், பாஸ்கர், கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, சுகா தாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் முரளி, ரகுநாதன், திட்ட அதிகாரி துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் காசநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்துணவு வழங்கியவர்கள், அதிக ரத்தானம் வழங்கிய வர்கள், தொண்டு நிறுவனங்கள், மூளை சாவு அடைந்தவர்களின் உறுப்பு தானம் அளித்த குடும்பத்தினர், காப்பீடு திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அதிகாரி, சிறந்த செவிலியர் அதிகாரி, அங்கன்வாடி ஊழியர்கள், ஆரோக்கிய குழந்தையின் பெற்றோர், சாலை விபத்து–களில் சிக்கியவர்களை தக்க நேரத்தில் மருத்துவ–மனையில் சேர்த்த தன்வார்வலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
புதிய சந்திரயான் திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரத்த–பரிசோதனை, ரத்தசோகை, சர்க்கரை நோய், உடல் பருமன், காச நோய், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் வீடு தேடி வந்து சுகாதாரத் துறையினர் செய்ய உள்ள னர்.
- புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ராஜா நகரில் ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் உள்ளது.
- இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ராஜா நகரில் ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.
இதில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும் அல்லாமல், புதுவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் வந்திருந்தனர். இதில் அருந்ததிபுரம் முதல் தெருவை சேர்ந்த நாகம்மாள் என்பவரும் கலந்துகொண்டார்.
கோவிலில் புனித நீர் ஊற்றப்பட்டதும், பக்தர்கள் சிலர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். நாகம்மாளும் அவர்களுடன் சென்று கோவில் தரிசனம் செய்துள்ளார். வெளியில் வந்தபோது அவர் கழுத்தில்் அணிந்திருந்த 3 பவுன் செயினை காணாவில்லை. இதனால் அவர் அதிர்ச்சிய டைந்தார். இதுகுறித்து அவர் கோவில்விழா குழு வினரிடம் தெரிவித்தார். அவர்கள் அங்கிருந்த போலீசாரிடம் கூறினர்.
போலீசார் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள், மற்றம் டிரோன் காட்சிகளை வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்றவரை தேடி வருகின்றனர்.
- புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் பிரபல ரவுடி வினோத் என்கிற வினோத்குமார் அடைக்கப்பட்டுள்ளார்
- செல்போன் சிறைக்குள் கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் பிரபல ரவுடி வினோத் என்கிற வினோத்குமார் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஒதியஞ்சாலை பாம்ரவி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட வினோத்குமார் விசாரணை கைதி பிளாக் 1-ல் உள்ளார். சம்பவத்தன்று சிறை சூப்பிரண்டு பாஸ்கரன் சந்தேகத்தின் பேரில் வினோத்குமார் அடைக்கப்பட்ட அறையில் சென்று பார்த்த போது அங்கு செல்போன் இருந்தது.
அதனை பறிமுதல் செய்த சிறை சூப்பிரண்டு பாஸ்கரன் இது குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவினையடுத்து காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, வினோத்குமார் மீது வழக்கு பதிவு செய்தார்.
மேலும் கைதி வினோத்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செல்போன் சிறைக்குள் எப்படி வந்தது நீதிமன்றத்திற்கு சென்று திரும்பி வந்தபோது கொண்டு வந்தார்களா? அல்லது வேறு ஏதும் வழியாக செல்போன் சிறைக்குள் கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிஎஸ்சி நர்சிங் ஆகிய படிப்பு களுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
- ரூ.14 லட்சமும் கல்வி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
ஒய்வூபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கண்ணம்மாள் தலைமையிலான கட்டண க்குழு தனியார் சுயநிதி கல்லூரியில் உள்ள முதுகலை மருத்துவம், பல் மருத்துவம், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பிஎஸ்சி நர்சிங் ஆகிய படிப்பு களுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா ஆகிய 3 தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் கிளினிக்கல் சார்ந்த முதுநிலை மருத்துவ படிப்புகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.7.59 லட்சத்தில் இருந்து ரூ.7.95 லட்சமாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.22.77 லட்சத்தில் இருந்து ரூ.23.90 லட்சமாகவும், கிளினிக்கல் சாரா முதுநிலை மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா ரூ.6.22 லட்சத்தில் இருந்து ரூ.6.55 லட்சமாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.12.44 லட்சத்தில் இருந்து ரூ.13.05 லட்சமாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
முதுநிலை பல் மருத்துவ படிப்பு (எம்.டி.எஸ்) மாகி பல் மருத்துவ கல்லூரியில் கிளினிக்கல் சார்ந்த முதுநிலை மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.6.22 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.14 லட்சம், பாரா கிளினிக்கல் சார்ந்த முதுநிலை பல் மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.5.53 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.7.19 லட்சம் என பழைய கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரியில் கிளினிக்கல் சார்ந்த முதுநிலை மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.6.22 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.14 லட்சமும் கல்வி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிம்ஸ் மற்றும் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.3.80 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகவும், வெங்கடே ஸ்வரா மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.3.29 லட்சத்தில் இருந்து ரூ.3.80 லட்சமாகவும், 3 தனியார் கல்லூரிகளிலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.16 லட்சத்தில் இருந்து ரூ.16.80 லட்சமாகவும், என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.21 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு ள்ளது. புதுவையில் உள்ள 3 தனியார் நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்.சி நர்சிங் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.42 ஆயிரம் என பழைய கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது
புதிய கல்வி கட்டணமானது, சேர்க்கை கட்டணம், கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், ஆய்வகம், கணினி, பராமரிப்பு மற்றும் வசதிகள் கட்டணம் மற்றும் பிற செலவுகள் போன்ற பல்வேறு கட்டணங்களை உள்ளடக்கிய ஆண்டு கட்டணமாகும். கட்டண குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை தவிர, கல்வி நிறுவனங்களுக்கு எந்த விதமான கூடுதல் கட்டண த்தையும் வசூலிக்க உரிமை இல்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கட்டண குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தகவலை சுகாதார சார்பு செயலர் கந்தன் தெரிவித்துள்ளார்.
- தனியார் கம்பெனி ஊழியர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
புதுச்சேரி:
வீடு கட்டுமான பணியில் அதிக கடன் ஏற்பட்டதால் தனியார் கம்பெனி ஊழியர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலாப்பட்டு அடுத்த சின்னகாலாப்பட்டு திடீர் நகர் நாகவள்ளியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் செல்வம்.
இவரது மூத்த மகன் முருகன் திருமணம் ஆகவில்லை. காலாப்பட்டு உள்ள பிரபல தனியார் கம்பெனியில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணியாற்றி வந்தார். முருகனின் சகோதரிக்கும், தம்பிக்கும் திருமணமான நிலையில் பெற்றோரை இவர் கவனித்து வந்தார். கடந்த சில மாதங்களாக இவரது இடத்தில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். வீடு கட்டுவதற்காக பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. வீடு கட்டுமான பணியின் போது கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்க தொடங்கியதால் அந்த கடனை அடைப்பதற்கு வேறொரு இடத்தில் கடன் கேட்டுள்ளார். யாரும் கடன் கொடுக்க முன் வராததால் இவருக்கு கடன் சுமை அதிகமானது.
கடந்த ஒரு வாரமாக யாரிடமும் அதிகம் பேசாமல் வீட்டில் இருந்த முருகன் நேற்று வீட்டின் அறையில் இருந்த பேனில் தூக்கில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆலோசனைக்கூட்டம் கவுண்டம்பாளையம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது
- மதுபான கடைகளை அகற்ற புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில பாமக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கவுண்டம்பாளையம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில அமைப்பாளர் கணபதி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், தொகுதி தலைவர், செயலாளர்கள், பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
செப்டம்பர் 17 வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் நினைவை போற்றும் வகையில் கிராமம் தோறும் வன்னியர் சங்கம் சார்பில் பதாகைகள் வைத்து வீரவணக்கம் செலுத்துவது. பாராளுமன்றத் தேர்தல் முன்னிட்டு தொகுதி மற்றும் பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்துவது. புதுவை மாநிலத்தில் சுற்றுலா என்ற பெயரில் புற்றீசல் போல புதிய மதுபான கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்குவதை பாமக வன்மையாக கண்டிக்கிறது. பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகில் உள்ள மதுபான கடைகளை அகற்ற புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகர், கிராமங்களில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். தனியார் தொழி ல்சாலையில் மண்ணின் மைந்தர்க ளுக்கு வேலை வழ ங்கக்கோரி போராட்ட ங்கள் நடத்துவது. செல்லி ப்பட்டு அணையை கட்ட வலியுறுத்தி பாட்டாளி உழவர் பேரியக்கம் சார்பில் புதிய அணை கட்டும் போராட்டம் நடத்துவது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில துணை அமைப்பாளர் வடிவேல், வன்னியர் சங்க துணை தலைவர் தலைவர் பாண்டுரங்கன் , வன்னியர் சங்க பொருளாளர் நரசிம்மன், வன்னியர் சங்க செயலாளர் நாகப்பன், முருகன், சமூக முன்னேற்ற சங்க மாநில துணை தலைவர் சிவப்பிரகாசம் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பாகூரில் உள்ள போலீஸ் நிலையம் பழுதடைந்த நிலையில் உள்ளது.
- சிறப்பு கட்டிடங்கள் பிரிவு மூலம் சீரமைக்க திட்டமிடப்பட்டது.
புதுச்சேரி:
பாகூரில் உள்ள போலீஸ் நிலையம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனைத் பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடங்கள் பிரிவு மூலம் சீரமைக்க திட்டமிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று ரூ.30 லட்சத்து 77ஆயிரம் செலவில் சீரமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலமைதாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், இன்ஸ்பெக்டர் கணேஷ், சப் இன்ஸ்பெக்டர் நந்த குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் ரவீந்திரன், இளநிலை பொறியாளர் ஏகாம்பரம், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா. வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
- விநாயாகர் சிலைகள் அரை அடி முதல் 15 அடி உயரம் வரை தயாரிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா. வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
விழாவையொட்டி விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுவையை அடுத்த தமிழக குதியான கூனிமுடக்கு கிராமத்தில் 4 தலைமுறையாக விநாயகர் சிலைகள் உருவாக்கி வருகின்றனர்.
பாரம்பரியமாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் உள்ள குடும்பங்கள் ஈடுபட்டு வருகிறது.மரவள்ளி கிழங்கு மாவு மற்றும் காகித கூழ் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த விநாயாகர் சிலைகள் அரை அடி முதல் 15 அடி உயரம் வரை தயாரிக்கப்படுகிறது.
ஜனவரி மாதம் முதல் இந்த சிலை தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் ரூ 2 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு புதிய வரவாக புல்லட் விநாயகர், பாகுபலி விநாயகர், விவசாய விநாயகர், கருப்பு விநாயகர் ஆகியவை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகொண்ட விநாயகர் அன்ன விநாயகர், சிவன்பார்வதி விநாயகர், திருமூர்த்தி விநாயாகர், பஞ்ச மூர்த்தி விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், ராஜ விநாயகர் என 30-க்கும் மேற்பட்ட வகைளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு ரசாயன கலப்பு இல்லாத வண்ணங்கள் பூசப்படுகிறது
வழக்கத்தை விட விலைவாசி இந்த ஆண்டு அதிகரித்துள்ளதால் இந்த முறை சிலைகளின் விலை அதிகரித்துள்ளது.சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு தயாரிக்கப்படும் இந்த சிலைகள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் உள்ளூரிலும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
- 50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும், வறுமையும்தான் நாட்டில் மலிந்திருந்தது.
- இதற்காக பிரதமருக்கு எங்கள் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
50 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும், வறுமையும்தான் நாட்டில் மலிந்திருந்தது. ஆனால் இன்று பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு நாடு பல்வேறு வளர்ச்சிகளை கண்டுள்ளது. ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி உலகளவில் நாட்டின் பெருமையை பிரதமர் பறைசாற்றியுள்ளார். இதற்காக பிரதமருக்கு எங்கள் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
புதுவை மாநில பா.ஜனதா சார்பில் பாராட்டு கடிதம் பிரதம ருக்கு அனுப்பியுள்ளோம். நாடு முழுவதும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை செப்டம்பர் 17-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை சேவை மாதமாக கொண்டாட உள்ளோம்.
பிறந்தநாளையொட்டி தொகுதி தோறும் மருத்துவ முகாம்களை நடத்துகிறோம். மரக்கன்றுகள் நடுகிறோம். வரும் திங்கள் கிழமை ஒரே நாளில் நாடு முழுவதும் அதிகளவில் ரத்ததானம் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்ச்சி நடக்கிறது.
புதுவை மாநில பா.ஜனதா சார்பில் ஜிப்மரில் இளைஞர்கள் ரத்ததானம் செய்கின்றனர். ஆயுஷ்மான் திட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் புதுவையில் இணைந்துள்ளனர். விடுபட்டவர்களையும் இத்திட்டத்தின் கீழ் இணைக்க உள்ளோம். இதற்காக தொகுதிதோறும் முகாம்கள் நடத்தப்படும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய கியாஸ் இணைப்புகளை நாடு முழுவதும் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதுவையில் 15 ஆயிரம் பேர் இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்படுவார்கள். இதற்காக தொகுதிதோறும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அக்டோபர் 2-ம் தேதி காவி பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அன்றைய தினம் பா.ஜனதா வினர் காவி ஆடைகள் அணிந்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து வார்கள்.
இஸ்ரோ விஞ்ஞானி களை பாராட்டும்விதமாக தொகுதிதோறும் வினாடி வினா போட்டிகள் நடத்த உள்ளோம். பா.ஜனதா அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உறுப்பு தானத்தை வலியுறுத்த உள்ளோம். முடநீக்கு உபகரணங்களையும் வழங்க உள்ளோம்.
நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு 25 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை. இதற்காக புதுவை பல்கலைக்கழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும். இந்த சட்டத்தை இயற்றி புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
புதுவையில் பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க அனைத்து அரசியல்கட்சி களும் இணைந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தற்கால தொழில் நுட்ப வளர்ச்சிகள்’ என்ற தலைப்பில் நடந்தது.
- மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
இந்திய பொறியாளர் அமைப்பு, புதுச்சேரி மாநில மையம் மற்றும் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை இணைந்து அகில இந்திய அளவிலான 2-நாள் கருத்தரங்கம் 'நானோ டெக்னாலஜியில் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள் தற்கால தொழில் நுட்ப வளர்ச்சிகள்' என்ற தலைப்பில் நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். இந்திய பொறியாளர் அமைப்பின் மாநில தலைவர் ராஜாராமன் வர வேற்றார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை துணைவேந்தர் மோகன் நானோ டெக்னாலஜியின் பல்வேறு வளர்ச்சிகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து பேசினார்.
இந்திய பொறியாளர் அமைப்பின் அகில இந்திய இயந்திரவியல் துறை தலைவர் ரங்கா ரெட்டி நானோடெக்னாலஜி துறையில் இயந்திரவியல் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் எதிர்கால வாய்ப்புகளை விளக்கினார். முதல்நாள் கருத்தரங்கில், முன்னாள் இஸ்ரோ' முதுநிலை விஞ்ஞானி சிவசுப்ரமணியன், அப்துல் கலாம் மற்றும் இந்திய விண்வெளி தந்தை விக்ரம் சாராபாயுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும், விண்வெளி துறையில் பல்வேறு தொழில்நுட்பங்கள், அவை உபயோகிக்கப்படும் இடங்கள் குறித்து பேசினார்.
2-ம் நாள் கருத்தரங்கில், புதுச்சேரி பல்கலை பசுமை ஆற்றல்தொழில்நுட்ப துறை பேராசிரியர் ஏழுமலை மின்கலன்களில் நானோ தொழிநுட்பங்கள் மற்றும் அதன் வளர்ச்சிகள் குறித்து பேசினார்.
புதுச்சேரி தொழில் நுட்ப பல்கலை மெக்கட் ரானிக்ஸ் துறை தலைவர் இளஞ்செழியன் சூப்பர் ஹைட்ரோபோபிக் நானோ பூச்சு தொகுப்பு மற்றும் பயன்பாடுகள் குறித்து பேசினார். கருத்தரங்க நிறைவு விழாவில், சிறந்த பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டது. இந்திய பொறியாளர் அமைப்பின் மாநில கவுரவ செயலாளர் திருஞானம் நன்றி கூறினார்.
- அதிநவீன சிகிச்சை புதுச்சேரியில் முதன் முறையாக செய்துள்ளோம்.
- மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தெரிவித்தார்
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவமனையில் 86-வயது மதிக்கத்தக்க முதியவர் மூச்சு விடவும் நடக்க முடியாமல் சிரமப்பட்டு மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டார். பிம்ஸ் இருதயவியல் துறை நிபுணர் டாக்டர் அன்பரசன் தலைமையில் டாக்டர்கள் ஹர்ஷவர்தன் சீனிவாசன் ஆகியோர் அவரை பரிசோதித்தனர்.
அவருக்கு இடது பக்க மின்னோட்ட நரம்பு செயலிழப்பு மற்றும் இருதய செயல் திறன் 25 சதவீதத்திற்கு கீழ் இருப்பதை உறுதி செய்தனர்.மின்னோட்டம் சரியில்லாத இடத்தில் நேரடியாக இடது பக்கத்தில் இருந்து வலது புறத்தில் சிறு ரத்த குழாய் வழியாக நவீனகருவி மூலம் முடுக்கி மின்னோட்ட செயல் திறனை சரி செய்த னர். இது குறித்து இருதய நிபுணர் டாக்டர் அன்பரசன் கூறுகையில் நவீன மின் இயற்பியல் செயல்முறை எனப்படும் அதிநவீன சிகிச்சை புதுச்சேரியில் முதன் முறையாக செய்துள்ளோம். 5நாட்களுக்கு பின் நோயாளி தற்போது மயக்கம் இன்றி 200-மீ நடக்க தொடங்கினார்.
மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தெரிவித்தார்.மருத்துவ குழுவினரை பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி மருத்துவ கண் காணிப்பாளர் டாக்டர் பீட்டர் மனோகரன் வாழ்த்தினர்.
- வங்கிக் கணக்கின் மூலம் மோசடி பணத்தை பெற்றவர்கள் அவருக்கு அவ்வப்போது சிறுதொகையை கமிஷனாகவும் லால்சங்லிர் சோரிக்கு கொடுத்துள்ளனர்.
- வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி:
இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு தேடுபவர்களை குறிவைத்து ஒரு கும்பல் வேலைவாய்ப்பு உள்ளது போன்று அவர்களை நம்பவைத்து போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை அனுப்பி மோசடி செய்வது வழக்கமாக உள்ளது.
இதை நம்பி படித்த இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.
இதே போல் புதுவையை சேர்ந்த பெண் ஒருவரிடம் இங்கிலாந்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக கூறி ரூ.30 லட்சத்தை ஆன்லைன் மூலம் பெற்று மோசடி செய்துள்ளனர்.
இதுதொடர்பாக புதுவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த ரியூபென், உகாண்டாவை சேர்ந்த நம்லேபுரோசி, பெங்களூருவை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 3 பேரை இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான குழு கைது செய்தது.
கைது செய்யப்பட்டவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த லால் சங்லிர் சோரி (வயது 24) என்பவரது வங்கிக்கணக்கு மூலம் பணத்தை பெற்றிருப்பது தெரியவந்தது. 9-ம் வகுப்பு வரையே படித்த அந்த வாலிபர் பெங்களூருவில் ஓட்டல் ஒன்றில் சமையல் வேலை செய்துவந்தார்.
அவரது வங்கிக் கணக்கின் மூலம் மோசடி பணத்தை பெற்றவர்கள் அவருக்கு அவ்வப்போது சிறுதொகையை கமிஷனாகவும் லால்சங்லிர் சோரிக்கு கொடுத்துள்ளனர். மோசடி பணம் என்று தெரிந்தும் அதை அவர் செலவு செய்து வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து லால் சங்லிர் சோரியையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.






