என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவையை சேர்ந்த 884 பேர் வெளிமாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் வெளிமாநிலத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 128 பேர் புதுவையிலும் பயன்பெற்றுள்ளனர்.
    • தமிழகத்தில் இந்த திட்டத்தில் 63 லட்சம் பெண்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சுகாதாரதுறை சார்பில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடுதேடி வந்து பரிசோதனை செய்யும் சந்திராயன் ஆரோக்கிய திட்டத்தை கம்பன் கலையரங்கில் நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.

    விழாவில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி, பேசும்போது, வீடு தேடி மருத்துவம் என்று திட்டம் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. புதுவையில் வீடு தேடி மருத்துவம் திட்டம் முறையாக நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    புதுவையில் பலருக்கு பல விதமான நோய்கள் உள்ளன. ஆனால் அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதுவை சுகாதாரதுறையில் போதிய வசதி இல்லை என குற்றம் சாட்டினார்.

    மேலும், ஆயுஷ்மான் திட்டத்தால் புதுவைக்கு எந்த ஒரு பலனும் இல்லை. மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் கூட புதுவை மக்கள் மதிக்கப்படுவ தில்லை என்று கூறிய கென்னடி எம்.எல்.ஏ. புதுவை சுகாதாரதுறையின் செயல்பாடுகளை விமர்சித்து குற்றம் சுமத்தி பட்டியலிட்டார்.

    இதற்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை பேசினார். அவர் பேசும்போது, புதுவையில்ஆயூஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 597 பேர் பயன் அடைந்துள்ளனர். அவர்களுக்கு ரூ.41 கோடியே 27 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதில் உப்பளம் தொகுதியை சேர்ந்த மக்கள் தான் அதிகம் பயன்பெற்றனர். புதுவையை சேர்ந்த 884 பேர் வெளிமாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் வெளிமாநிலத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 128 பேர் புதுவையிலும் பயன்பெற்றுள்ளனர்.

    தென்னிந்தியாவின் மருத்துவ தலைநகரமாக புதுவை மாறி வருகிறது என்றார்.

    மேலும், புதுவையில் குடும்ப தலைவிகளுக்கான திட்டம் 17 ஆயிரம் பேருடன் தொடங்கப்பட்டது. அதன் பிறகு தகுதியான 71 ஆயிரம் குடும்ப தலைவிகளை தேர்வு செய்து வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த திட்டத்தில் 63 லட்சம் பெண்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.

    தொடர்ந்து, தமிழகத்தில் திட்டம் அறிவிக்கப்பட்டு 2 ½ வருடம் கழித்து வருகிற 15-ந் தேதிதான் செயல்படுத்தப்பட உள்ளது. ஆனால், புதுவையில் சொன்னவுடன் கொடுத்து விட்டோம். தமிழகத்தில் அறிவித்த 2 ½ ஆண்டு காலத்திற்கும் சேர்த்து பணம் வழங்க வேண்டும் என்றார்.

    சமையல் கியாஸ் விலையை பிரதமர் மோடி ரூ.200 குறைத்தார். புதுவை அரசு ரூ.300 குறைத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ரூ.100 குறைப்போம் என கூறியும் இதுவரை சிலிண்டர் விலையை குறைக்கவில்லை. நாம் விலையை குறைப்போம் என சொல்லாமல், விலையை குறைத்துள்ளோம்.

    முதல்-அமைச்சர் மக்கள் நலன்சார்ந்த எந்த திட்டம் கொண்டு வந்தாலும் நான் அனுமதி தருவேன் என்றும் கவர்னர் தமிழிசை கூறினார்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • சுகாதாரத் துறையில் மோசமான சூழல் நிலவுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் கென்னடி எம்.எல்.ஏ. வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் 2 பெண்கள் மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு உயிர் இழந்து உள்ளனர். இது சுகாதாரத் துறையில் மோசமான சூழல் நிலவுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    அது மட்டுமல்லாமல் கேரளாவில் தற்போது நிபா வைரஸ் தொற்று காய்ச்சல் ஏற்பட்டு 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

    புதுவையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கி ழமைகளில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகின்றனர். இவர்களால் புதுவை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் புதுவை அரசின் சுகாதாரத்துறை உடனடி யாக புதுச்சேரி பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் ஆய்வு பரிசோதனையை மேற்கொண்டு, புதுச்சேரி மக்களுக்கு உரிய பாதுகாப்பினை அளித்திட வேண்டும்.

    நிபா வைரஸ் புதுவையில் வராமல் இருக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் நெருங்க இருப்பதால் டெங்கு மற்றும் சிக்குன் குனியா காய்ச்சல் ஏற்படு வதற்கு முன்பு தாலுகா வாரியாக சுகாதாரத்துறை ஊழியர்கள், பொதுப்ப ணித்துறை ஊழியர்கள், உள்ளாட்சித் துறை ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் அடங்கிய சுகாதார நலனை கவனிக்கும் வண்ணம் குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி சுகாதாரத்துறை கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தை களுக்கும் ஊட்டச்சத்து மாத்திரை அளிக்கப்பட்டு வருவதில் காலாவதி ஆன மாத்திரைகள் வழங்கப்பட்ட தால் சுகாதார ஊழியர் ஒருவர் மட்டும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கு ஒருவர் மட்டும் காரணம் இல்லை. இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறும் போது துறை ரீதியான விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • புதுச்சேரி மாநில மையம் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறை தலைவர் டாக்டர் ராஜாராம் வரவேற்றார்.
    • புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கணினி துறை டாக்டர் லட்சுமி ஆகியோர் ஐ.ஓ.டி.யின் பயன்பாடுகள் குறித்து பேசினர்.

     புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தா ள்குப்பம், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) மற்றும் புதுவை மாநில மையத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் (இந்தியா) நிறுவனத்தின் கணினி பொறியியல் பிரிவு வாரியதுடன் இணைந்து "எஸ்.டி.ஜி.13-க்கான சவால்கள் மற்றும் தணிப்பு உத்திகள்: ஐ.ஒ.டி.யின் வளர்ந்து வரும் போக்குகள்" என்ற தலைப்பில் 2 நாட்கள் அகில இந்திய கருத்தரங்கு நடைபெற்றது.

    கல்லூரியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் மலர்க்கண் வாழ்த்திப் பேசினர்.

    இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் (இந்தியா), புதுச்சேரி மாநில மையம் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறை தலைவர் டாக்டர் ராஜாராம் வரவேற்றார்.

    புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர் டாக்டர் எழிலரசன் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, காலநிலை மாற்ற அச்சுறுத்தல்கள் தாக்கங்கள், தழுவல் மற்றும் பாதிப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    டாக்டர் லோகநாதன் மற்றும் கணினி பொறியாளர்கள் பிரிவு வாரியம் பங்கேற்றார்.

    கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் பூங்குழலி மற்றும் டாக்டர் ராஜலட்சுமி மற்ற பணியாளர்களுடன் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

    புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சிவில் என்ஜினீயரிங் துறை டாக்டர் விஜயகுமார் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கணினி துறை டாக்டர் லட்சுமி ஆகியோர் ஐ.ஓ.டி.யின் பயன்பாடுகள் குறித்து பேசினர்.

    காலநிலை மாற்றங்கள் குறித்து மாணவர்களால் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. சிறந்த கட்டுரை களுக்கு ரொக்க ப்பரிசு மற்றும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.

    • மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
    • மேல்சிகி ச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப்பட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த மேலகாசாகுடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது56). தனியார் மில் தொழிலாளியான இவர், கடந்த 4-ந் தேதி, சொந்த வேலை காரணமாக, காரைக்கால் நகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு வீடு திரும்பு ம்போது, பிள்ளைத்தெ ருவசல் மின் நிலையம் அருகே சாலையில் ஆடு குறுக்கே போனதால், ஆட்டின் மீது மோதி, தலை, கை, கால்களில் பலத்த காயமடைந்தார். காரை க்கால் அரசு ஆஸ்பத்ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ட்ட சிவக்குமார், மேல்சிகி ச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்ப்பட்டார். அங்கு 10 நாள் சிகிச்சையில் இருந்த சிவக்குமார், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து அவரது உறவினர் மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பொதுமக்கள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியாக பயன் படுத்திவருகின்றனர்.
    • அதிகாரிகள் விஷக்குளவி கூண்டுகளை அழிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    குச்சிபாளையம் பகுதியில் மதகடிப்பட்டு-திருக்கனூர் செல்லும் சாலையில் குச்சிப்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விஷ குளவிகள் அங்குள்ள ஆலமரத்தில் 2 இடங்களில் கூடு கட்டி உள்ளது.

    இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியாக பயன் படுத்திவருகின்றனர். மேலும் திருபுவனை, சன்னியாசி குப்பம் ஆகிய பகுதி மக்களும் இந்த வழியாக சென்று வருகின்றனர்.

    அவ்வப்போது விஷக்குளவிகள் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை விரட்டுகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே விபரீத சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விஷக்குளவி கூண்டுகளை அழிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விளையாட்டிற்கு தனி துறை ஏற்படுத்த வேண்டும், சட்ட விரோதமாக ஏற்படுத்தப்பட்ட எஸ்.டி.ஏ.பி.யை தடை செய்ய வேண்டும்.
    • விளையாட்டு வீரர்களின் இட ஒதுக்கீடு பெற்றவர்களின் மீது முறையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் சங்க தலைவர் கராத்தே வளவன் தலைமையில் நிர்வாகிகள் சதீஷ், சந்துரு, கோவிந்தராஜ், பூபாலன், ஆறுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கல்வித்துறை வளாகத்தில் கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் விளையாட்டிற்கு தனி துறை ஏற்படுத்த வேண்டும், சட்ட விரோதமாக ஏற்படுத்தப்பட்ட எஸ்.டி.ஏ.பி.யை தடை செய்ய வேண்டும்.

    தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை, ஓய்வூதியம், இலவச இன்சூரன்ஸ், இலவச பஸ் பாஸ், ஊக்கத்தொகை ஆகிய வற்றை உடனே வழங்க வேண்டும்.

    இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் மற்றும் ராஜீவ் காந்தி உள்விளையாட்டரங்கத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். மாநில விளையாட்டு கவுன்சிலில் நடைபெற்ற பண மோசடி உட்பட்ட அனைத்து ஊழலையும் விசாரிக்க வேண்டும்.

    கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முறைகேடாக விளையாட்டு வீரர்களின் இட ஒதுக்கீடு பெற்றவர்களின் மீது முறையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • யாருக்காவது காய்ச்சல், டெங்கு அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர வேண்டும்
    • காய்ச்சல் அறிகுறி ஏற்படுபவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட தருமாபுரி பகுதியை சேர்ந்த மீனா ரோஷினி(வயது 28). குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி (19) ஆகிய 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

    டெங்குவால் கடந்த 2 நாட்களில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

    புதுச்சேரியில் கடந்த 2 நாட்களில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையம், குரும்பாபேட் பகுதியில் மருத்துவ குழுவினர் சிறப்பு முகாம் நடத்தி வருகின்றனர். யாருக்காவது காய்ச்சல், டெங்கு அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர வேண்டும் என்று சுகாதாரக்குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். அரசு ஆஸ்பத்திரிகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகள் மற்றும் மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகாம் அமைத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    டெங்கு காய்ச்சலில் இருந்து விடுபட்ட பிறகு இயல்பு நிலை திரும்பி விடும் என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்குவதாலும் காலதாமத சிகிச்சையாலும் உயிர்ப்பலி ஏற்படுகிறது. காய்ச்சல் அறிகுறி ஏற்படுபவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

    வீட்டையும் சுற்றுபுறத்தையும் மக்கள் சுத்தமாக வைக்க வேண்டும். கொசு உருவாகாத வகையில் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

    • கழிவு நீர் வாய்க்கால் குறுக்கே இருப்பதால் நேரடியாக நெடுஞ்சாலைக்கு செல்ல முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
    • விரிவாக்க பணி திட்ட மேலாளர் குமார் ஆகியோரை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேரில் வர வழைத்து அங்காளன் எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை நிவர்த்தி செய்யும் படி கேட்டுக்கொண்டார்.

    புதுச்சேரி:

    விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதகடிப்பட்டியில் இருந்து திருவண்டார்கோவில் வரை உள்ள பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் கழிவு நீர் செல்லும் வாய்க்கால் கட்டப்பட்டு பின்னர் 4 வழி சாலை போடப்படுகிறது.

    இந்த உட்புற சாலையிலிருந்து 4 வழி சாலைக்கு பொதுமக்கள் வாகனத்தில் வரும் பொழுது கழிவு நீர் வாய்க்கால் குறுக்கே இருப்பதால் நேரடியாக நெடுஞ்சாலைக்கு செல்ல முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளனிடம் முறையிட்டனர். இதனை யடுத்து அங்காளன் எம்.எல்.ஏ. இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

    மதகடிப்பட்டியில் இருந்து திருவண்டார்கோ வில் வரை உள்ள பகுதியில் நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலைகளை சீரமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

    இதையடுத்து பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தின் திட்ட இயக்குனர் சக்திவேல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி திட்ட மேலாளர் குமார் ஆகியோரை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேரில் வர வழைத்து அங்காளன் எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை நிவர்த்தி செய்யும் படி கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று மதகடிப்பட்டில் இருந்து திருவண்டார் கோவில் பகுதி வரை உள்ள உட்புற சாலைகளை சீரமைப்பது குறித்து பொறியாளர் பாஸ்கர் மற்றும் திட்ட மேலாளர் குமார் ஆகியோர் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும் இப்பணிகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் முடிக்கப்படும் என்று திட்ட மேலாளர் குமார் உத்தர வாதம் அளித்துள்ளார்.

    • புதுவை சுகாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
    • ஒருவேளை வைரஸ் பரவும் சூழ்நிலை வந்தால் நிச்சயமாக புதுவை பிராந்தியமான மாகியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் கேரளா மாநிலத்தையொட்டி உள்ள புதுவை பிராந்தியமான மாகியில் புதுவை சுகாதாரத்துறை தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்.

    இந்த வைரஸ் பற்றி மக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. புதுவையில் யாருக்கும் நிபா வைரஸ் அறிகுறிகள் இல்லை. அதேநேரத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    கேரளாவில் இருந்து வரும் ரெயிலை நிறுத்துவது ஊரடங்கு பிறப்பிப்பது போன்ற அவசரகால சூழ்நிலைகள் இப்போது எழவில்லை. அந்தளவுக்கு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. கேரளத்தில் பரவும் வைரஸ் என்ன? என கண்டறிந்துள்ளனர். அது பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை வைரஸ் பரவும் சூழ்நிலை வந்தால் நிச்சயமாக புதுவை பிராந்தியமான மாகியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கேரளாவில் இருந்து வருவோரை பரிசோதனை செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை இப்போது இல்லை. அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், பரிசோதனை செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் புதுவை சுகாதாரத்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதால் புதுவை பிராந்தியமான மாகியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி-கல்லூரி மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    • புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில், புதுச்சேரியில் கல்லூரி மாணவி உள்பட இரண்டு பெண்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

    புதுச்சேரியில் உள்ள குருமாம்பேட் பகுதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி (19) என்பவர் உயிரிழந்துள்ளார்.

    மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    இதேபோல், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மீனா ரோஷினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    மீனா ரோஷினி நேற்று உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இன்று காயத்ரி என்ற கல்லூரி மாணவி உயிரிழந்த நிலையில், புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

      புதுச்சேரி:

      புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

      அரசு பதவிகளில் இடம்பெறாத என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு வாரிய தலைவர் பதவி வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டாக அவர்களுக்கு வாரிய பதவிகள் தர வில்லை.

      இதனால் ஏற்கனவே அவர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு கோவில் அறங்காவலர் குழு அமைக்கக்கூட பரிந்துரைகளை ஏற்கவில்லை என பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் போர்க்கொடி உயர்த்தினார்.

      அவர் சட்டசபையில் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தினார். அவருக்கு ஆதரவாக பா.ஜனதா எம்.எல்.ஏ கல்யாணசுந்தரம் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

      தங்கள் தொகுதியில் பணிகள் புறக்கணிக்கப்படுவதாக கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ ஏற்கனவே புகார் கூறி வந்தார். இதற்காக சட்டமன்ற நிகழ்வுகளை புறக்கணிக்கப்போவதாகவும் அவர் கூறியிருந்தார். சபாநாயகர் செல்வம் அவரை அழைத்து பேசி சமாதானப்படுத்தினார். பணிகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

      ஆனால் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ, காலம் கடந்தும் தனது கோரிக்கைகள் இதுவரை நிறைவேறவில்லை என தற்போது மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அவர் சட்டசபை முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த முடிவை சபாநாயகர் செல்வத்திடம் கடிதமாகவும் அவர் வழங்கியுள்ளார்.

      புதுவை சட்டசபை வரும் 20-ந் தேதி கூட உள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ கல்யாண சுந்தரத்தின் திடீர் போராட்ட அறிவிப்பு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

      பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஆளும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.வே ஆட்சிக்கு எதிராக போராட்டம் அறிவித்திருப்பது புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

      • புதுவை வில்லியனுர்-சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
      • ஜவகர் நகர், சிவா நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம், பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

      புதுச்சேரி:

      புதுவை வில்லிய னுர்-சேதராப்பட்டு மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை வியாழக்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணி வரை முத்து பிள்ளைபாளையம். புது நகர் ஓம்சக்தி நகர் ராதா நகர், சப்தகிரி ரோயல் நகரம், ஞானசம்பந்தம். பாலாஜி நகர், ரெட்டியார் பாளையம், ஆதிகேசவன் நகர், திரு நகர், ஆத்தியா அவின்யு, பிச்சைவீரன்பட்டு. கல்மேடுபேட் ,கோல்டன் அவின்யு, பூமியான்பேட், ராகவேந்திரா நகர், பொன் நகர், அருள் நகர், சுதாகர் நகர், பவழக்காரன்சாவடி, சத்திய சாய் நகர், ஜவகர் நகர், பாவானர் நகர், புது நகர், மூகாம்பிகை நகர் ஒரு பகுதி மற்றும் அதனை சார்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

      ×