search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விளையாட்டுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும்-கல்வித்துறை இயக்குனரிடம் மனு
    X

    புதுவை விளையாட்டு வீரர்கள் நலச்சங்கத்தினர் கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினியிடம் மனு அளித்த காட்சி.

    விளையாட்டுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும்-கல்வித்துறை இயக்குனரிடம் மனு

    • விளையாட்டிற்கு தனி துறை ஏற்படுத்த வேண்டும், சட்ட விரோதமாக ஏற்படுத்தப்பட்ட எஸ்.டி.ஏ.பி.யை தடை செய்ய வேண்டும்.
    • விளையாட்டு வீரர்களின் இட ஒதுக்கீடு பெற்றவர்களின் மீது முறையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் சார்பில் சங்க தலைவர் கராத்தே வளவன் தலைமையில் நிர்வாகிகள் சதீஷ், சந்துரு, கோவிந்தராஜ், பூபாலன், ஆறுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கல்வித்துறை வளாகத்தில் கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் விளையாட்டிற்கு தனி துறை ஏற்படுத்த வேண்டும், சட்ட விரோதமாக ஏற்படுத்தப்பட்ட எஸ்.டி.ஏ.பி.யை தடை செய்ய வேண்டும்.

    தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை, ஓய்வூதியம், இலவச இன்சூரன்ஸ், இலவச பஸ் பாஸ், ஊக்கத்தொகை ஆகிய வற்றை உடனே வழங்க வேண்டும்.

    இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் மற்றும் ராஜீவ் காந்தி உள்விளையாட்டரங்கத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும். மாநில விளையாட்டு கவுன்சிலில் நடைபெற்ற பண மோசடி உட்பட்ட அனைத்து ஊழலையும் விசாரிக்க வேண்டும்.

    கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முறைகேடாக விளையாட்டு வீரர்களின் இட ஒதுக்கீடு பெற்றவர்களின் மீது முறையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×